tamilkurinji logo
 

அம்மிக்கல்லால் தந்தை, அக்காவை கொடூர கொலை செய்த வாலிபர்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

அம்மிக்கல்லால் தந்தை, அக்காவை கொடூர கொலை செய்த வாலிபர்

First Published : Tuesday , 9th January 2018 06:10:21 PM
Last Updated : Tuesday , 9th January 2018 06:10:21 PM


அம்மிக்கல்லால் தந்தை, அக்காவை கொடூர கொலை செய்த வாலிபர்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

கலசப்பாக்கம் அருகே செலவுக்கு பணம் தர மறுத்ததால் தந்தை, அக்காவை அம்மிக்கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த கோயில்மாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (65), விவசாயி.

இவரது மகள்கள் கல்யாணி(40), சித்ரா(30). மகன் சிவனேசன்(32). கணவருடன் ஏற்பட்ட கருத்து  வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து கல்யாணி கடந்த 2 ஆண்டுகளாக தந்தை வீட்டில் வசித்து வந்தார்.


மகன் சிவனேசனுக்கும் திருமணமாகிவிட்டது. இவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

சிவனேசன் தினமும் தந்தை, அக்கா, தங்கையிடம்  சண்டைபோட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டில் இருந்த சிவனேசன், செலவுக்கு பணம் தருமாறு தந்தை ராமச்சந்திரனிடம் கேட்டார். ஆனால் அவர் பணம் தரவில்லை.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சிவனேசன், அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து ராமச்சந்திரன் தலையில் போட்டுள்ளார்.

இதனை தடுக்க வந்த கல்யாணியையும் அம்மிக்கல்லால் தாக்கியுள்ளார்.


இதில் படுகாயம் அடைந்த தந்தையும்,  மகளும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிந்து சிவனேசனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

செலவுக்கு பணம் தர மறுத்ததால் தந்தை மற்றும் அக்காவை அம்மிக்கல்லால் தாக்கி வாலிபர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அம்மிக்கல்லால் தந்தை, அக்காவை கொடூர கொலை செய்த வாலிபர்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
அம்மிக்கல்லால் தந்தை, அக்காவை கொடூர கொலை செய்த வாலிபர்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
அம்மிக்கல்லால் தந்தை, அக்காவை கொடூர கொலை செய்த வாலிபர்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கமல் தலைப்புச் செய்தியாகலாம்; தலைவராக முடியாது: தமிழிசை
நடிகர் கமல் அரசியல் கட்சி ஆரம்பிப்பது தலைப்புச் செய்திகளாக இருக்கலாம், ஆனால் அவர் ஒருபோதும் தலைவராக முடியாது என தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறார்.நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கியுள்ளார். இன்று மாலை அவர் தனது கட்சிப் பெயர், கட்சியின்

மேலும்...

 கமல் ஒரு மரபணு விதை; இந்தியாவில் அதை விதைப்பதில்லை- அமைச்சர் ஜெயக்குமார்
கமல் மரபணு மாற்றப்பட்ட விதை; தமிழகத்தில் நாம் அதை விதைப்பதில்லை என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.காகிதப் பூக்கள் மலரலாம் ஆனால் மணக்காது என ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சூசகமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில்

மேலும்...

 அப்துல் கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தைத் தொடங்கினார் கமல்ஹாசன்
ராமேசுவரத்தில் கணேஷ் மகாலில் நடைபெற்ற மீனவர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். கமல்ஹாசனை சந்தித்து மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை மனு அளித்துப் பேசினர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கமலிடம் மீனவர்கள்

மேலும்...

 8-ம் வகுப்பு மாணவியிடம் காதலை தெரிவித்த ஆசிரியர் கைது
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மேல்நாரியப்பனூரில் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நிர்மல்(வயது 48) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.கடந்த 14-ந் தேதி பள்ளியில் ஆசிரியர்கள் லாரன்ஸ், ஜான்பிரான்சிஸ் ஆகியோர் காதலர் தினத்தை கொண்டாடினார். அந்த பள்ளியில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in