tamilkurinji logo
 

திருவனந்தபுரம் பகவதி அம்மன் கோவிலில் 40 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர்,Thiruvananthapuram Bhagavthi amman kovil pongal

Thiruvananthapuram,Bhagavthi,amman,kovil,pongal


திருவனந்தபுரம் பகவதி அம்மன் கோவிலில் 40 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர்

First Published : Tuesday , 26th February 2013 08:52:49 PM
Last Updated : Tuesday , 26th February 2013 08:52:49 PM


திருவனந்தபுரம் பகவதி அம்மன் கோவிலில் 40 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர்,Thiruvananthapuram Bhagavthi amman kovil pongal

திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதியம்மன் கோயிலில் நடந்த பொங்கல் விழாவில் 40 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர்.

திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதியம்மன் கோயில் கேரளாவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் வருடந்தோறும் மாசி மாதத்தில் 10 நாட்கள் பொங்கல் திருவிழா நடைபெறும்.திருவிழாவின் 9ம் நாளன்று நடக்கும் பொங்கலிடும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கலிடுவார்கள். இதனால் இக்கோயில் ‘பெண்களின் சபரிமலை‘ என்று அழைக்கப்படுகிறது.

இவ்வருட பொங்கல் விழா கடந்த 18ம் தேதி தொடங்கியது. 9ம் நாளான நேற்று பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக, இரு தினங்களுக்கு முன்பே கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெண்கள் வந்து குவிய தொடங்கினர். நேற்று காலை 10.45 மணியளவில் கோயில் தந்திரி தினேசன் நம்பூதிரிபாடு கோயில் கருவறையிலிருந்து தீபத்தை எடுத்து மேல்சாந்தி ஹரிஸ்குமாரிடம் கொடுத்தார். பின்னர் மேல்சாந்தி தலைமையில் பூசாரிகள் கோயில் முன் வைக்கப்பட்டிருந்த அடுப்பில் தீ மூட்டினர்.

இந்த நேரத்தில் கோயில் மணி ஒலிக்கப்பட்டதும், கோயிலை சுற்றிலும் 10 கி.மீ சுற்றளவில் குவிந்திருந்த 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் குலவை சத்தத்துடன் பொங்கலிட தொடங்கினர். அப்போது திருவனந்தபுரம் நகர் பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதைத் தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு கோவிலில் உச்சபூஜையும், அம்மனுக்கு பொங்கல் நிவேத்யம் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் சுமார் 230–க்கும் மேற்பட்ட பூசாரிகள், பெண்கள் பொங்கல் வைத்த பல்வேறு இடங்களுக்குச் சென்று, பொங்கல் பானைகளுக்கு புனித நீர் தெளித்தனர். விமானப்படை ஹெலிகாப்டர் மூலம், வானத்தில் பறந்தபடி, பொங்கல் பானைகள் மீது பல வண்ண மலர்கள் தூவப்பட்டன.

பொங்கல் வழிபாடு நிகழ்ச்சியில் சினிமா நடிகைகள் சிப்பி, சுனுலட்சுமி, சரண்யா, சீமா.ஜி.நாயர், சுதாநாயர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். கோவில் வளாகம் மற்றும் சுமார் 50–க்கும் மேற்பட்ட இடங்களில் ரகசிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டிருந்தது.


திருவனந்தபுரம் பகவதி அம்மன் கோவிலில் 40 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர்,Thiruvananthapuram Bhagavthi amman kovil pongal திருவனந்தபுரம் பகவதி அம்மன் கோவிலில் 40 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர்,Thiruvananthapuram Bhagavthi amman kovil pongal திருவனந்தபுரம் பகவதி அம்மன் கோவிலில் 40 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர்,Thiruvananthapuram Bhagavthi amman kovil pongal
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால்

மேலும்...

 அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை
மதாந்தோறும் வரும் அமாவாசை தினமானது இறந்த நமது முன்னோர்களுக்கு  விரதம் இருக்க ஏற்ற நாளாகும்இவற்றில் ஆடி அமாவாசை தை அமாவாசை மகாளய அமாவாசை  முக்கியமானவை.  முன்றில் ஆடி அமாவாசை மிகவும் விசேஷமானது.ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்;

மேலும்...

 திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
திருப்பதியில் ஏழுமலை யானை தரிசிக்க கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. நேற்று தர்ம தரிசனம் செய்யும் பக்தர்கள் தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்றனர். 64 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்த நிலையில் ஏராளமான

மேலும்...

 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்
மதுரை சித்திரை திருவிழாவில் வேதமந்திரங்கள் முழங்க மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இன்று காலை நான்கு மாசிவீதிகளில் தோரோட்டம் நடைபெறுகிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று  முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்திற்காக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in