tamilkurinji logo


 

அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள்: மது விடுதியில் இந்தியரை சுட்டுக் கொன்ற இனவெறியன் கைது,Indian shot dead by American spewing racial slurs in Kansas

Indian,shot,dead,by,American,spewing,racial,slurs,in,Kansas,




செய்திகள் >>> உலகம்

அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள்: மது விடுதியில் இந்தியரை சுட்டுக் கொன்ற இனவெறியன் கைது

First Published : Friday , 24th February 2017 10:36:18 AM
Last Updated : Friday , 24th February 2017 10:36:18 AM


அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள்: மது விடுதியில் இந்தியரை சுட்டுக் கொன்ற இனவெறியன் கைது,Indian shot dead by American spewing racial slurs in Kansas

அமெரிக்காவில் நிறவெறியும் இனவெறியும் மேலோங்கி வருவதற்கு சமீபத்திய ஆதாரமாக அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள் என்று கூவியபடி மதுபான விடுதியில் இந்திய என்ஜினீயரை ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



அமெரிக்காவின் கென்சாஸ் மாநிலத்தின் ஓலாதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றும் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா(32) என்பவர் நேற்று அதே பகுதியில் உள்ள ஆஸ்டின் மதுபான விடுதியில் அமர்ந்தபடி, கான்சாஸ் பல்கலைக்கழக அணி விளையாடிய கூடைப் பந்தாட்ட போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து, ரசித்து கொண்டிருந்தனர்.


மும்முரமான ஆட்டத்தின்போது அங்கே இருந்த ஒருவன், திடீரென தனது கைத்துப்பாக்கியை உருவி அருகில் இருந்த இந்தியர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். ‘என் நாட்டை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூவியபடி அவன் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் ஸ்ரீனிவாஸ் என்ற என்ஜினீயர்
சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.


அவரை காப்பாற்ற முயன்ற சகப் பணியாளரான அலோக் மடசனி என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்த துப்பாக்கி சூட்டை தடுக்க முயன்ற சகப் பணியாளரான இயன் கிரில்லாட்(24) என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்த சம்பவத்துக்கு பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற கொலையாளி, சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் மிசோரியில் உள்ள மதுபான விடுதியில் குடித்துவிட்டு, துப்பாக்கிச் சூட்டில் இருவரை கொன்று விட்டதாக உளறியுள்ளான்.

இதை அறிந்த அந்த விடுதியின் பணியாளர் அளித்த தகவலையடுத்து, விரைந்துவந்த போலீசார் கொலையாளியை கைது செய்தனர்.


கைதான ஆடம் புரின்டன்(51) முன்னாள் கடற்படை வீரர் என தெரியவந்துள்ள நிலையில் இந்த இனவெறி சார்ந்த படுகொலை தொடர்பான தகவல் கிடைத்ததும், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.



அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள்: மது விடுதியில் இந்தியரை சுட்டுக் கொன்ற இனவெறியன் கைது,Indian shot dead by American spewing racial slurs in Kansas அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள்: மது விடுதியில் இந்தியரை சுட்டுக் கொன்ற இனவெறியன் கைது,Indian shot dead by American spewing racial slurs in Kansas அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள்: மது விடுதியில் இந்தியரை சுட்டுக் கொன்ற இனவெறியன் கைது,Indian shot dead by American spewing racial slurs in Kansas
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்
உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும்

மேலும்...

 மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.
ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.அவர் நர்சாக பணியாற்றிய

மேலும்...

 தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம்

மேலும்...

 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in