tamilkurinji logo
 

மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம்: முதல்வர் பழனிசாமி புனித நீராடினார்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம்: முதல்வர் பழனிசாமி புனித நீராடினார்

First Published : Thursday , 21st September 2017 09:01:28 AM
Last Updated : Thursday , 21st September 2017 09:01:28 AM


மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம்: முதல்வர் பழனிசாமி புனித நீராடினார்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் நடைபெற்று வரும் காவிரி மகா புஷ்கரம் விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று புனித நீராடினார்.

மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் கடந்த 12-ம் தேதி தொடங்கிய மகா புஷ்கரம் விழா வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, இங்கு ரூ.2 கோடி மதிப்பில் புதிதாக நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. அதில், ஆழ்குழாய் மூலம் நீர் நிரப்பப்பட்டு, பல லட்சம் பேர் புனித நீராடிச் சென்றுள்ளனர்,

   புனித நீராடிய பிறகு பொதுமக்களை வணங்கும் முதல்வர் பழனிசாமி.

 இந்நிலையில், மகா புஷ்கரம் விழாவுக்காக மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட நீர், நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை துலாக் கட்டத்தை வந்தடைந்தது. அதில் அடித்துவரப்பட்ட குப்பைகள், தூசிகளை பொதுப்பணித் துறையினர் மயிலாடுதுறைக்கு முன்னதாக வலைகள், தடுப்புகள் அமைத்து அகற்றினர். இதனால், துலாக் கட்டத்துக்கு தூய்மையான நீர் வந்து சேர்ந்தது.

நாகையில் நடைபெறும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க புறப்பட்ட முதல்வர் பழனிசாமி மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியின் வடகரைக்கு புனித நீராட நேற்று வந்தார்.


மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் புனித நீராடிய சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால்   -  படம்: ஏ.முரளிதரன்

 
கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த முதல்வர், பின்னர் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஓ.எஸ்.மணியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், பவுன்ராஜ் ஆகியோருடன் துலாக் கட்டத்துக்கு வந்த புதிய நீரில் புனித நீராடினார். தொடர்ந்து, கரையில் உடை மாற்றுவதற்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த அறையில் உடை மாற்றிக்கொண்ட அவர், கரையில் உள்ள தெய்வங்களை வணங்கினார்.

மகா புஷ்கரம் விழாவையொட்டி, துலாக் கட்டத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோரும் புனித நீராடினர்.


மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம்: முதல்வர் பழனிசாமி புனித நீராடினார்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம்: முதல்வர் பழனிசாமி புனித நீராடினார்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம்: முதல்வர் பழனிசாமி புனித நீராடினார்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தினகரனின் தங்கைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
சசிகலா சகோதரி வனிதாமணியின் மகளும் டிடிவி தினகரனின் தங்கை மற்றும் அவரது கணவருக்கு 3 மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகள் சீதளா தேவி, இவர் டிடிவி தினகரனின் சகோதரி ஆவார்.

மேலும்...

 ஒருதலைக்காதல் சென்னையில் இளம்பெண் எரித்துக்கொலை
ஒருதலைக்காதலால் ஆதம்பாக்கத்தில் இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்யபட்டார் தாய் சகோதரி உயிருக்கு போராடி வருகின்றனர்.ஆதம்பாக்கத்தை  சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ரேணுகா.  இவர்களுக்கு  2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். முத்த மகள் இந்துஜா (21), இந்துஜா பட்டதாரி பெண்.

மேலும்...

 குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலைசெய்த தந்தையின் தோழி
குன்றத்தூர் மூன்றாங்கட்டளை பகுதியில் வசிப்பவர் தர்மலிங்கம்(எ) சரவணன். வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ரஞ்சனி என்ற மனைவியும் , 4 வயதில் கோஷிகா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரஞ்சனி பிரிந்து சென்று

மேலும்...

 தமிழக மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிப்பதாக பிரதமர் மோடி உறுதி
சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி. அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்  மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்பட முக்கிய பிரமுகர்கள் வழியனுப்பி வைத்தனர்.பின்னர் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in