tamilkurinji logo
 

‘பத்மாவதி’ படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் இந்து ஆர்வலர்கள் மிரட்டல் ,Padmavati row: Hindu activists in Agra threaten violence if Bhansali film is released

Padmavati,row:,Hindu,activists,in,Agra,threaten,violence,if,Bhansali,film,is,released


‘பத்மாவதி’ படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் இந்து ஆர்வலர்கள் மிரட்டல்

First Published : Friday , 10th November 2017 07:43:47 PM
Last Updated : Friday , 10th November 2017 07:43:47 PM


‘பத்மாவதி’ படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் இந்து ஆர்வலர்கள் மிரட்டல் ,Padmavati row: Hindu activists in Agra threaten violence if Bhansali film is released

நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பத்மாவதி’ படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் என ஆக்ரா இந்து ஆர்வலர்கள் மிரட்டல் விடுத்து உள்ளனர்.


இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ள படம், ‘பத்மாவதி’.
வரலாற்று பின்னணியை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில், நடிகர்கள் ரண்வீர் சிங் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.


இந்த படம் டிசம்பர் 1–ந் தேதி திரைக்கு வருகிறது. பத்மாவதி படத்தில் வரலாற்றை தவறாத சித்தரித்து இருப்பதாகவும், இந்த படம் வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

‘பத்மாவதி’ படத்தை தடை விதிக்க கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. அலாகாபாத் ஐகோர்ட்டும் இதுதொடர்பான வழக்கை முன்னெடுக்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பத்மாவதி’ படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் என ஆக்ரா இந்து ஆர்வலர்கள் மிரட்டல் விடுத்து உள்ளனர். பத்மாவதி படத்தை வெளியிட்டால் கடும் விளைவுகள் நேரிடும் என திரையரங்குகளுக்கு இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்து உள்ளது.

பத்மாவதி திரைப்படம் திரையில் வெளியாவதற்கு முன்னதாகவே ராஜஸ்தான், குஜராத், மராட்டியம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விமர்சனங்களையும், சர்ச்சையையும், எதிர்ப்பையும் சந்தித்து உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ராஜ்புத் இனத்தினர்கள் பெருமளவில் கிடையாது, இருப்பினும் இந்து அமைப்புகள் தரப்பில் எதிர்ப்பை சந்தித்து உள்ளது.

பல்வேறு அரசியல் அமைப்புகள் தரப்பிலும் பத்மாவதி திரைப்படம் வெளியிடுவதற்கு எதிராக மிரட்டல் வெளியாகி உள்ளது.

இந்து ஜக்ரான் மஞ்ச் அமைப்பின் மாவட்ட தலைவர் அமித் சவுதாரி பேசுகையில், இந்து கலாச்சாரத்திற்கு எதிரான திரைப்படங்களை எதிர்ப்போம் என கூறிஉள்ளார்.

முன்னாள் உத்தரபிரதேச மாநில மந்திரி மற்றும் பா.ஜனதா தலைவர் ராஜா மகேந்திர அரிதிமான் சிங், இது ராஜ்புத் இனத்தவர்களின் கெளவுரம் சம்பந்தப்பட்ட விஷயம் அனைத்து திரையரங்குகளிலும் படத்தை தடை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

 ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்திலும் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.


‘பத்மாவதி’ படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் இந்து ஆர்வலர்கள் மிரட்டல் ,Padmavati row: Hindu activists in Agra threaten violence if Bhansali film is released ‘பத்மாவதி’ படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் இந்து ஆர்வலர்கள் மிரட்டல் ,Padmavati row: Hindu activists in Agra threaten violence if Bhansali film is released ‘பத்மாவதி’ படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் இந்து ஆர்வலர்கள் மிரட்டல் ,Padmavati row: Hindu activists in Agra threaten violence if Bhansali film is released
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பெரிய பாண்டியன் நினைவிடத்தில் நின்றபோது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது : நடிகர் கார்த்தி
பவாரியா கொள்ளையர்களை தீரமுடன் பிடித்த போலீஸாரின் கதையில் வீரமுள்ள உதவி கமிஷனராக நடித்தபோதே இவ்வளவு கடினமான பணியையா போலீஸார் செய்தனர் என்று பிரமித்தேன். அதே போன்ற பணியில் உயிர் நீத்த பெரியபாண்டியனின் ஈரமுள்ள கல்லறைமுன் நிற்கும் போது மனம் பதைபதைத்துப் போனது

மேலும்...

 நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு ரூ.220 கோடி சொத்து
கிரிக்கெட் வீரர் விராட் கோலியை மணந்த நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு ரூ.220 கோடி சொத்து இருப்பதாகவும் கணவருடன் ரூ.34 கோடி மதிப்புள்ள சொகுசு வீட்டில் குடியேற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இத்தாலியில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை மணந்த இந்தி

மேலும்...

 மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தற்போது மீண்டும் சந்திக்கும் நாட்களை வெளியிட்டிருக்கிறார்.கடந்த மே மாதம் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து சந்தித்தார் ரஜினிகாந்த். மேலும்

மேலும்...

 காதலி அனுஷ்காவை கரம்பிடித்தார் விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தனது நீண்ட நாள் காதலியான அனுஷ்கா சர்மாவை இன்று திருமணம் செய்தார்.இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in