tamilkurinji logo
 

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை ,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Floods-in-Courtallam-Waterfalls-Tourists-are-banned

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்,Floods-in-Courtallam-Waterfalls-Tourists-are-banned


செய்திகள் >>> தமிழகம்

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

First Published : Wednesday , 30th August 2017 11:19:51 AM
Last Updated : Wednesday , 30th August 2017 11:19:51 AM


குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை  ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Floods-in-Courtallam-Waterfalls-Tourists-are-banned

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த ஆண்டு ஆரம்பம் முதலே சீசன் போதுமானதாக இல்லை.


அருவிகளிலும் இடைஇடையே தண்ணீர் அதிகமாக விழுவதும், பின்னர் குறைவாக விழுவதுமாக இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே இருந்தது.

வழக்கமாக ஆகஸ்டு மாதம் 15-ந் தேதியுடன் குற்றாலம் சீசன் முடிவுக்கு வந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட மாறுதலாக உள்ளது.


அதாவது சீசன் காலங்களில் எல்லாம் தண்ணீர் குறைவாகவே விழுந்தது. சீசன் முடியும் தருவாயில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கடந்த 10 நாட்களாக குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது.


இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.


கடந்த வாரம் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நேற்று காலையில் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி விழுந்தது. ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். குற்றாலம் வந்திருந்த குறைவான சுற்றுலா பயணிகளும் பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி ஆகியவற்றில் ஆனந்தமாக குளித்துச் சென்றனர்.


வெள்ளப்பெருக்கு குறைந்ததும் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.



குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை  ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Floods-in-Courtallam-Waterfalls-Tourists-are-banned
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை  ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Floods-in-Courtallam-Waterfalls-Tourists-are-banned
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை  ,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Floods-in-Courtallam-Waterfalls-Tourists-are-banned
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 sample test
sample test

மேலும்...

 இரட்டை குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை
கோவையை அடுத்த சூலூர் காடம்பாடியை சேர்ந்தவர் வீரபத்திரன்(வயது 26). பொக்லைன் ஆபரேட்டர்.இவரது மனைவி பாண்டியராணி(24). இவர்களுக்கு 2½ வயதில் ராமன், லட்சுமணன் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்த பாண்டியராணி கடந்த சில நாட்களுக்கு முன்பு

மேலும்...

 மன நலம் பாதித்த 20 வயது மகளை கொலை செய்த தந்தை
சென்னை நெற்குன்றம், செல்லியம்மன் நகர், ஆடி வீதியை சேர்ந்தவர் ஆதிகேசவன் (48), ஆட்டோ டிரைவர்.  இவரது மனைவி மோகனா (40). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகள் கவுசல்யா (20), மகன்

மேலும்...

 காதலனுடன் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி சின்ன செங்காத்தாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கன். கூலித்தொழிலாளி. இவரது மகள் பவித்ரா

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in