tamilkurinji logo


 

கேரளாவில் கனமழைக்கு ஒரேநாளில் 7 பேர் பலி,Kerala Rains: Latest News, Photos, Videos on Kerala Rains

Kerala,Rains:,Latest,News,,Photos,,Videos,on,Kerala,Rains




செய்திகள் >>> இந்தியா

கேரளாவில் கனமழைக்கு ஒரேநாளில் 7 பேர் பலி

First Published : Wednesday , 18th July 2018 12:08:48 PM
Last Updated : Wednesday , 18th July 2018 12:08:48 PM


கேரளாவில் கனமழைக்கு ஒரேநாளில் 7 பேர் பலி,Kerala Rains: Latest News, Photos, Videos on Kerala Rains

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.


பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், சூறைக்காற்றால் மரங்கள் முறிந்தன. மேலும், பலத்த காற்று வீசுவதால் மின்கம்பங்கள் சரிந்தது. மழை வெள்ளத்தால் ஆறு, கால்வாய், கழிவநீர் ஒடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.


இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக கேரளாவில் நான்கு மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மழை காரணமாக நேற்று ஒரேநாளில் 7 பேர் பலியாகி உள்ளனர். கோட்டயம் பகுதியை சேர்ந்த ஆலன்ஜினு (வயது 14) ஓடையில் தவறி விழுந்தும், கோழிக்கோடை சேர்ந்த தீபு (34) குளத்தில் மூழ்கியும் பலியானார்கள். ஆலப்புழாவை சேர்ந்த பாபு (62), மலப்புரம் பத்ரோஸ் (44) ஆகியோர் மின்னல் தாக்கியதால் பலியானார்கள்.

அதேபோல கொல்லத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (62) மரம் விழுந்தும், மலப்புரத்தை சேர்ந்த நாராயணன் (73), கொச்சியை சேர்ந்த முகம்மது ரகீம் (22) ஆகியோர் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பலியானார்கள்.

கேரளாவில் கடலும் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. விழிஞ்ஞம் பகுதியில் நடைபெற்று வரும் துறைமுகப் பணியும் இந்த மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த பாலமும் கடல் சீற்றம் காரணமாக இடிந்து கடலில் விழுந்துவிட்டது. இதை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.


கேரளாவில் கனமழைக்கு ஒரேநாளில் 7 பேர் பலி,Kerala Rains: Latest News, Photos, Videos on Kerala Rains கேரளாவில் கனமழைக்கு ஒரேநாளில் 7 பேர் பலி,Kerala Rains: Latest News, Photos, Videos on Kerala Rains கேரளாவில் கனமழைக்கு ஒரேநாளில் 7 பேர் பலி,Kerala Rains: Latest News, Photos, Videos on Kerala Rains
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை

மேலும்...

 நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணிஇல்லை : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி

மேலும்...

 ஜிவாதான் என் மனஅழுத்தத்தைப் போக்குபவள்: தோனி உருக்கம்
என் மகள் ஜிவாதான் என் மனஅழுத்தத்தை போக்கும் மருந்து, மூன்றரை வயதிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் என்று மகேந்திர சிங் தோனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்தோனியின் மூன்றரை வயது மகள் ஜிவா. சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்

மேலும்...

 கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழையால் அம்மாநில அணைகள் விரைவாக நிரம்பி வருவதால் கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி என கர்நாடக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in