tamilkurinji logo
 

குதிரைகளை பிற்பாடு பேரம் பேசலாம். நீட்தேர்வை உடனே பேசுங்கள் " - கமல் வேண்டுகோள்,Kamal tweet about neet news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Kamal,tweet,about,neet,news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


குதிரைகளை பிற்பாடு பேரம் பேசலாம். நீட்தேர்வை உடனே பேசுங்கள் " - கமல் வேண்டுகோள்

First Published : Sunday , 13th August 2017 07:19:51 PM
Last Updated : Sunday , 13th August 2017 07:19:51 PM


குதிரைகளை பிற்பாடு பேரம் பேசலாம். நீட்தேர்வை  உடனே பேசுங்கள்

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் நலன் கருதி உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.


தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அரசியல் மற்றும் பல்வேறு அமைப்புகளும் பல கட்டப்  போராட்டங்கள் நடத்திவருகின்றன. கட்சியினர் பலர் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டம், ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டம் என நடத்தி வருகின்றனர்.


 அதேபோல், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும், மாணவ அமைப்புகளும் பல விதமான கோரிக்கைப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ’நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க முடியாது.


தமிழக அரசு விலக்கு வேண்டுமென அவசரச்சட்டம் இயற்றினால் மட்டும் மத்திய அரசு, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு அளித்து ஆதரவு அளிக்கும்’ என மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்திலேயே சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதேசமயத்தில் இந்த நீட் தேர்வு விவகாரம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதில், ‘நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம்.குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


குதிரைகளை பிற்பாடு பேரம் பேசலாம். நீட்தேர்வை  உடனே பேசுங்கள் குதிரைகளை பிற்பாடு பேரம் பேசலாம். நீட்தேர்வை  உடனே பேசுங்கள் குதிரைகளை பிற்பாடு பேரம் பேசலாம். நீட்தேர்வை  உடனே பேசுங்கள்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ரூ 8.5 கோடி கடனை எப்போது செலுத்துவீர்கள் - லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
கோச்சடையான் படத்துக்கான கடனை எப்போது செலுத்துவீர்கள் என நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் கோச்சடையான். ஏ.ஆர்.ரகுமான் இசையில், தீபிகா படுகோன்

மேலும்...

 நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி
 சென்னை சைதாப்பேட்டையில் நடந்த விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசும் போது நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாட செய்தியாகிவிட்டது. பிரபல நடிகர்கள் என்பதால் அவர்கள் (ரஜினி, கமல்) எல்லாம் தெரிந்தவர்கள் என்று மக்கள் நம்பிவிட வேண்டாம். அவ்வாறு நினைப்பது

மேலும்...

 அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
திரை உலகில் ‘உலகநாயகன்’ எனும் அடையாளத்துடன் வலம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியல் களத்தில் குதித்து உள்ளார். தனது கட்சியின் பெயரை வருகிற 21-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள முன்னாள்

மேலும்...

 ‘என்னையும் ஏமாற்றினார் நிரவ் மோடி’- நடிகை பிரியங்கா சோப்ரா
நிரவ் மோடியின் நகைக்கடைகளுக்கு சர்வதேச அளவில் விளம்பரத் தூதராக இருந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விளம்பரத்தில் நடத்த பணத்தை தராமல் நிரவ் மோடி ஏமாற்றிவிட்டார் என பிரியாங்கா புகார் தெரிவித்துள்ளார்.பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 280 கோடி மோசடியும், சட்டவிரோதமாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in