tamilkurinji logo
 

மின்சாரம் தாக்கி மேடையிலேயே உயிரிழந்த பிரபல பாடகி,Barbara Weldens: 5 things to know about French singer

Barbara,Weldens:,5,things,to,know,about,French,singer


செய்திகள் >>> உலகம்

மின்சாரம் தாக்கி மேடையிலேயே உயிரிழந்த பிரபல பாடகி

First Published : Friday , 21st July 2017 06:19:42 PM
Last Updated : Friday , 21st July 2017 06:19:42 PM


மின்சாரம் தாக்கி மேடையிலேயே உயிரிழந்த பிரபல பாடகி,Barbara Weldens: 5 things to know about French singer

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல பாடகி மின்சாரம் தாக்கி மேடையிலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பார்பரா வெல்டன்ஸ் (35) பிரபல் பாடகர்.. வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாடல்களை பாடி உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து பல விருதுகளையும் வென்றுள்ளார்.


இந்நிலையில், மேற்கு பிரான்ஸில் உள்ள கவுர்டன்  என்ற  நகரில் கடந்த புதன் கிழமை அன்று இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்பரா மேடையில் நின்று உணர்ச்சிகரமாக பாடியுள்ளார். அப்போது, காலநிலை மோசமாக இருந்ததாகவும், இடி மின்னல் அடித்ததாகவும் கூறப்படுகிறது.


மேடையில் பார்பரா பாடிக்கொண்டு இருந்தபோது திடீரென அவரது உடல் தூக்கிப்போட்டது போல் கீழே விழுந்துள்ளார்.


சுற்றி நின்றவர்கள் பார்பராவை மீட்டு முதல் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், அசம்பாவிதம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பில் அவர் மேடையிலேயே உயிரை விட்டுள்ளார்.


மேடையில் பார்பராவை மின்சாரம் தாக்கியதால் அவர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


பார்பராவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி மேடையிலேயே உயிரிழந்த பிரபல பாடகி,Barbara Weldens: 5 things to know about French singer மின்சாரம் தாக்கி மேடையிலேயே உயிரிழந்த பிரபல பாடகி,Barbara Weldens: 5 things to know about French singer மின்சாரம் தாக்கி மேடையிலேயே உயிரிழந்த பிரபல பாடகி,Barbara Weldens: 5 things to know about French singer
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நேபாளத்தில் விமானம் தரையிறங்கிய போது தீ விபத்து 77 பேர் உயிரிழப்பு
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த 17 பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  காத்மாண்டு திருபுவன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. வங்கதேச தலைநகரில் இருந்து வந்த

மேலும்...

 கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக முகமது ஷமி மனைவி குற்றசாட்டு
கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக அவர் மனைவி ஹசின் ஜகான் குற்றம்சாட்டியுள்ளார். ஷமி பல பெண்களுடன் 'சாட்' செய்த விவரங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், ஹசின் ஜகான். முதலில் இதை பார்த்த பலரும் ஹசின்

மேலும்...

 அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு
அந்தமான் தீவு பகுதிகளில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.அந்தமான் தீவு பகுதிகளில் இன்று காலை 8.09 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டரில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.இந்நிலநடுக்கம் 10 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டு உள்ளது.  நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம்

மேலும்...

 சக்திவாய்ந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் கார்
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கேனவெரல் ஏவு தளத்தில் இருந்தில் உலகிலேயே மிகச் சக்திவாய்ந்த, மிகப் பெரிய ராக்கெட்டை தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நேற்று விண்ணில் செலுத்தியது.இந்த மெகா ராக்கெடுடன் டெஸ்லா நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் காரும் பயணிக்கிறது.அமெரிக்காவைச் சேர்ந்த

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in