tamilkurinji logo
 

நாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது,Near-Namakkal-5-North-Western-province-robbers-arrested tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Near-Namakkal-5-North-Western-province-robbers-arrested,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

நாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது

First Published : Thursday , 14th December 2017 07:28:35 PM
Last Updated : Thursday , 14th December 2017 07:28:35 PM


நாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது,Near-Namakkal-5-North-Western-province-robbers-arrested tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோடு, டைடல் பார்க் அருகே ஆக்சிஸ் வங்கி உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் கடந்த 10-ந்தேதி அதிகாலையில் கொள்ளையர்கள் நுழைந்து ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 26 லட்சத்து 70 ஆயிரத்து 200 -ஐ கொள்ளையடித்து சென்றனர்.

அதுபோல் அன்று இரவு பீளமேட்டில் தனியார் கல்லூரி அருகே உள்ள ஆக்சில் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. அன்று அதிகாலை 1.15 மணிக்கு தண்ணீர் பந்தல் ரோட்டில் இன்டஸ்இன்ட் வங்கி ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து ரூ.3.5 லட்சத்தை கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றது.

போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பீளமேடு போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநில கொள்ளையர்கள் தான் என்பது தெரியவந்தது.

இந்த கொள்ளையர்களை கூண்டோடு பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 6 பேர் நாமக்கல்  வழியாக  வட மாநிலங்களுக்கு தப்பி செல்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நாமக்கல் கீரம்பூர் சுங்கச்சாவடியில் கோவை மற்றும் நாமக்கல்லை சேர்ந்த போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாலை 5 மணி அளவில் வெளிமாநில பதிவு எண் கொண்ட இரண்டு சொகுசு கார்களை போலீசார் மடக்கி பிடித்தனர். முதலில் வந்த  காரில்  2 பேரை விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரனாக இந்தியில் பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார்  2 பேரை கைது செய்து  காரை பறிமுதல் செய்தனர். பின் தொடர்ந்து வந்த மற்றொரு கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் பறந்து சென்றது.  அந்த காரை போலீசார் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். எனினும் அவர்களை பிடிக்க முடியவில்லை.

சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொம்மைக் குட்டைமேடு என்ற இடத்தில் உள்ள  இந்தியன் வங்கி ஏ.டி.எம் அருகில் காரை நிறுத்திவிட்டு அதிலிருந்த 3 பேரும்  வெவ்வேறு  திசைகளில் தப்பி ஓடினர்.  

இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தலைமையில் ஏரளமாள போலீசார் குவிக்கப்பட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு மற்றும் 2-க் கும் மேற்பட்ட டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என 50க்கும் மேற்பட்ட போலீசார் பொம்மைகுட்டை  மேடு, மேற்கு பாலப்பட்டி மற்றும் சுற்றுவட்டார  பகுதியில் துப்பறியும்  மோப்பநாய் உதவியுடன்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது  துப்பறியும் மோப்பநாய்  ஒன்று கொள்ளையனின்  கால் தடத்தை மொப்பம் பிடித்தது கொண்டு ஓடியது. மேற்கு பாலப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு  மோப்ப நாய்  ஓடி சென்று  நின்றது.  

அந்த  வீட்டின்  மேல் மொட்டை மாடியில்  கொள்ளையன் ஒருவன் பதுங்கியிருந்தது தெரியவந்தது. அவனை பிடிக்க போலீசார் முதலில்  வீட்டை  சுற்றி வளைத்தனர்.

அந்த வீட்டை சுற்றிலும் ஏராளமான வீடுகள் நிறைந்திருந்ததால் உடனடியாக வீட்டுக்குள் சென்றால் வேறு  வீட்டுக்குள்  புகுந்து தப்பி சென்று விடுவான் என கருதி போலீசார் உடனடியாக வீட்டுக்குள்  செல்லவில்லை.

அது மட்டுமல்லாமல் கொள்ளையன்  கையில்  ஏதேனும் பயங்கர ஆயுதங்கள் வைத்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டது.

இதனால்  போலீசார் அந்த கொள்ளையனுடன் சிறிது நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.  கொள்ளையனிடம் வீட்டில் இருந்து கீழே  இறங்கி வருமாறும், நாங்கள் உன்னை எதுவும் செய்ய மாட்டோம்.

பயப்பட வேண்டாம், ஆயுதங்கள் ஏதுவும் இருந்தால் ஒப்படைத்து விடும்படி போலீசார் கூறினார்கள். ஆனால், வீட்டின் மேல் பகுதியில் இருந்து கொள்ளையன் வெளியே வர மறுத்து விட்டான்.

இதையடுத்து போலீசாரும் பொதுமக்களும் சேர்ந்து அதிரடியாக  வீட்டுக்குள்  சென்று  அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவனது பெயர் சுபேதரன் என்பது தெரியவந்தது. அவனை பற்றிய மற்ற எந்த தகவலும் உடனடியாக கிடைக்கவில்லை.

கொள்ளையன் சுபேதரன் அங்கு தயார் நிலையில் வைத்திருந்த ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு தப்பி விடாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் வெவ்வேறு திசைகளில் தப்பி ஓடிய மற்ற 2 கொள்ளையர்களும் எங்காவது பதுங்கி இருக்கிறார்களா? என போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டனர்.


மேற்கு  பாலப்பட்டி காட்டு பகுதியில் அவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த இடத்தை சுற்றி வளைத்து 2 கொள்ளையர்களையும் கைது செய்தனர்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் சினிமாவில் வரும் காட்சிகள் போல் அதிரடியாக  இருந்தது. அடுத்தடுத்து என்ன நடக்கிறதோ? என்பது போன்ற பரபரப்பும் பதட்டமும் நிறைந்து  காணப்பட்டது.

போலீசார்  கொள்ளையர்களை பிடிக்கும் ஒவ்வொரு அதிரடி நடவடிக்கைகளும், வியூகங்களையும் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

வடமாநில கொள்ளையர்களை போலீசார் விரட்டிச் சென்று  மடக்கி   பிடித்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது,Near-Namakkal-5-North-Western-province-robbers-arrested tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது,Near-Namakkal-5-North-Western-province-robbers-arrested tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது,Near-Namakkal-5-North-Western-province-robbers-arrested tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 “ஊழல் செய்வதில்தான் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்” விஜயகாந்த்
பஸ் கட்டண உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், ஊழல் செய்வதில்தான் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் சிவகாசியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது விஜயகாந்த் பேசினார்.பட்டாசு தொழிலை பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி

மேலும்...

 காலில் விழுவது போல் நடித்து எம்.எல்.ஏ. வை கீழே தள்ளி தாக்கிய வாலிபர்
போளூரில் நேற்று அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க கலசபாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் சென்றார்.திருமண மண்டபத்தின் முன்பு சென்றபோது வாலிபர் ஒருவர் ஆசிர்வாதம் பெறுவதுபோல் அவரது காலில் விழுந்தார். திடீரென அவர் எம்.எல்.ஏ.வின் இரு

மேலும்...

 குடி போதையில் தகராறு செய்த கணவனை வெட்டிக்கொன்ற மனைவி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறையை சேர்ந்தவர் செல்வராஜ் (46). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லூர்துமேரி(41). இவர்களுக்கு ஜெனிபர் டயானா(24), ஆனந்தி(23) என்ற 2 மகள்கள், ஆண்டனி(21) என்ற மகன் உள்ளனர். ஜெனிபருக்கு திருமணமாகி அருகில் உள்ள அன்னமங்கலத்தில் வசிக்கிறார். தொழுநோயால்

மேலும்...

 ராணுவ மரியாதையுடன் தமிழக வீரர் சுரேஷின் உடல் சொந்த ஊரில் அடக்கம்
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷ் உடல் அரசு மரியாதையுடன் இன்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in