tamilkurinji logo
 

ஜெயலலிதா டிச.4-ம் தேதி மாலையே இறந்துவிட்டார்: சசிகலா சகோதரர் பகீர் தகவல்,Sasikala's brother Dhivakaran reveals Jaya died one day before official declaration

Sasikala's,brother,Dhivakaran,reveals,Jaya,died,one,day,before,official,declaration



செய்திகள் >>> தமிழகம்

ஜெயலலிதா டிச.4-ம் தேதி மாலையே இறந்துவிட்டார்: சசிகலா சகோதரர் பகீர் தகவல்

First Published : Wednesday , 17th January 2018 08:30:14 PM
Last Updated : Wednesday , 17th January 2018 08:30:14 PM


ஜெயலலிதா டிச.4-ம் தேதி மாலையே இறந்துவிட்டார்: சசிகலா சகோதரர் பகீர் தகவல்,Sasikala's brother Dhivakaran reveals Jaya died one day before official declaration

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4-ம் தேதி மாலை 5.15 மணிக்கே இறந்துவிட்டார் என்று சசிகலாவின் சகோதரர் தினகரன் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு செப்.22 அன்று இரவு உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சை பெற்றும், பலனின்றி டிச.5-ம் தேதி இரவு மரணம் அடைந்தார். இது அதிகாரபூர்வமாக அரசு சார்பிலும், மருத்துவமனை நிர்வாகம் சார்பிலும் அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா மரணத்திலும் அளிக்கப்பட்ட சிகிச்சையிலும் மர்மம் இருக்கிறது என்று ஓபிஎஸ், தீபா உள்ளிட்ட பலரும் குற்றம் சாட்டினர்.

விசாரணை கேட்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். நாங்கள் யாரும் ஜெயலலிதாவை ஒருநாள் கூட பார்க்கவில்லை இட்லி சாப்பிட்டதாக சொன்னதெல்லாம் உண்மைக்கு புறம்பானது என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசிய பேச்சால் சர்ச்சை வலுத்தது.

75 நாட்கள் சிகிச்சையில் எங்கள் யாரையும் அனுமதிக்கவில்லை என்று அமைச்சர்களும் குற்றம் சாட்டினர். இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 


இந்த ஆணையம் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரித்து வருகிறது. தினகரன், கிருஷ்ணபிரியா, சசிகலா உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த டிச.20 அன்று அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சி ஒன்றை வெற்றிவேல் வெளியிட்டு அதை ஆணையத்திலும் ஒப்படைத்தார்.

இந்நிலையில் இன்று மன்னார்குடியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன் புது சர்ச்சையை தனது பேச்சின் மூலம் தொடங்க ிவைத்துள்ளார்.

மன்னார்குடியில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பேசிய திவாகரன் கூறியதாவது:

''முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிச.4-ம் தேதி மாலை 5.15 மணிக்கே உயிரிழந்துவிட்டார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதை அறிவிக்காமல் காலம் தாழ்த்தியது.

அப்போது நான் ஏன் அறிவிக்காமல் காலம் தாழ்த்துகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அப்போலோ குழுமத்தின் கிளைகள் தமிழகம் முழுவதும் உள்ளன.

அதற்கெல்லாம் பாதுகாப்பு வேண்டும் அதை கொடுக்கச் சொல்லுங்கள் என்றனர். இதுப்பற்றி ஆறுமுக சாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பினால் தாம் தகவல் அளிக்கக்த் தயார்'' என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா மரண சர்ச்சையில் மேலும் ஒரு சர்ச்சையாக புதிதாக திவாகரன் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர், தலைமைச் செயலர், மருத்துவமனை நிர்வாகம் என அனைவருக்கும் இந்தப் பேச்சால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா டிச.4-ம் தேதி மாலையே இறந்துவிட்டார்: சசிகலா சகோதரர் பகீர் தகவல்,Sasikala's brother Dhivakaran reveals Jaya died one day before official declaration ஜெயலலிதா டிச.4-ம் தேதி மாலையே இறந்துவிட்டார்: சசிகலா சகோதரர் பகீர் தகவல்,Sasikala's brother Dhivakaran reveals Jaya died one day before official declaration ஜெயலலிதா டிச.4-ம் தேதி மாலையே இறந்துவிட்டார்: சசிகலா சகோதரர் பகீர் தகவல்,Sasikala's brother Dhivakaran reveals Jaya died one day before official declaration
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in