tamilkurinji logo
 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் மனு,AIADMK merger: 19 MLAs supporting TTV Dinakaran meet Governor ..news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

AIADMK,merger:,19,MLAs,supporting,TTV,Dinakaran,meet,Governor,..news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் மனு

First Published : Tuesday , 22nd August 2017 12:54:04 PM
Last Updated : Tuesday , 22nd August 2017 12:54:04 PM


தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் மனு,AIADMK merger: 19 MLAs supporting TTV Dinakaran meet Governor ..news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்கக்கோரி கடிதம் அளித்தனர்.


அதிமுகவில் பிரிந்திருந்த பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்று ஒன்றாக இணைந்தனர். ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், பாண்டியராஜன் அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.


அ.தி.மு.க. அணிகள் இணைப்பு விழா நடந்த அதே சமயத்தில் டி.டி.வி.தினகரன் வீட்டில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் திரண்டு ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் நேற்று இரவு ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சில நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணிகள் இணைந்தது குறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும் ஆளுநரை இன்று காலை சந்திக்க உள்ளதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து ஆளுநரை சந்திப்பதற்கு முன்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சென்னை சேத்துபட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. பின்னர் அங்கிருந்து அடையாறில் உள்ள தினகரன் இல்லத்திற்கு சென்று ஆலோசனை நடத்தினர். அப்போது விளாத்திகுளம் எம்.எல்.ஏ. உமா மகேஸ்வரி தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனால், இணைப்புக்கு பின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்தது.

இந்நிலையில், காலை சரியாக 10 மணிக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் மாளிகைக்குள் சென்றனர். ஆளுநர் வித்யாசாகர் ராவுடனான இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்ததாக தெரிகிறது. அப்போது ஆளுநரிடன் தங்களது கோரிக்கை கடிதத்தை அளித்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன் கென்னடி, முதலமைச்சர் பழனிசாமி சரிவர செயல்படாததால், அவரை மாற்ற ஆளுநரிடம் கோரிக்கை விடுக்க உள்ளோம் என்றார். அதேபோல், முதலமைச்சரை மாற்றக் கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம் என்று எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ. ஜக்கையன் கூறுகையில், ஆட்சியை கவிழ்ப்பது எங்கள் நோக்கம் அல்ல. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, எங்கள் பலம் இன்று தெரியவரும் என்று கூறினார்.

இதற்கிடையே, பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுக எம்.பி.யான மைத்ரேயன் ஆளுநரை சந்திப்பதற்காக கவர்னர் மாளிகைக்குள் சென்றார்.


தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் மனு,AIADMK merger: 19 MLAs supporting TTV Dinakaran meet Governor ..news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் மனு,AIADMK merger: 19 MLAs supporting TTV Dinakaran meet Governor ..news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் மனு,AIADMK merger: 19 MLAs supporting TTV Dinakaran meet Governor ..news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இரட்டை குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை
கோவையை அடுத்த சூலூர் காடம்பாடியை சேர்ந்தவர் வீரபத்திரன்(வயது 26). பொக்லைன் ஆபரேட்டர்.இவரது மனைவி பாண்டியராணி(24). இவர்களுக்கு 2½ வயதில் ராமன், லட்சுமணன் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்த பாண்டியராணி கடந்த சில நாட்களுக்கு முன்பு

மேலும்...

 மன நலம் பாதித்த 20 வயது மகளை கொலை செய்த தந்தை
சென்னை நெற்குன்றம், செல்லியம்மன் நகர், ஆடி வீதியை சேர்ந்தவர் ஆதிகேசவன் (48), ஆட்டோ டிரைவர்.  இவரது மனைவி மோகனா (40). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகள் கவுசல்யா (20), மகன்

மேலும்...

 காதலனுடன் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி சின்ன செங்காத்தாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கன். கூலித்தொழிலாளி. இவரது மகள் பவித்ரா

மேலும்...

 மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம்: முதல்வர் பழனிசாமி புனித நீராடினார்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் நடைபெற்று வரும் காவிரி மகா புஷ்கரம் விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று புனித நீராடினார்.மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் கடந்த 12-ம் தேதி தொடங்கிய மகா புஷ்கரம் விழா வரும் 24-ம் தேதி வரை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in