tamilkurinji logo
 

எங்கள் தர்மயுத்தத்துக்கு கமல் ஆதரவு தர வேண்டும்: மாஃபா பாண்டியராஜன்,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

எங்கள் தர்மயுத்தத்துக்கு கமல் ஆதரவு தர வேண்டும்: மாஃபா பாண்டியராஜன்

First Published : Wednesday , 16th August 2017 07:57:30 PM
Last Updated : Wednesday , 16th August 2017 07:57:30 PM


எங்கள் தர்மயுத்தத்துக்கு கமல் ஆதரவு தர வேண்டும்: மாஃபா பாண்டியராஜன்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

நடிகர் கமல்ஹாசன் எங்களது தர்மயுத்தத்துக்கு ஆதரவு தர வேண்டும் என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சார்ந்த மாஃபா பாண்டியராஜன் கூறியதாவது:

''கமல் பொது விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார். ஜல்லிக்கட்டு போராட்டம் நிகழ்ந்தபோது ஓபிஎஸ்ஸிடம் கமல் மூன்று முறை தொலைபேசியில் பேசினார். கமல் சொன்ன கருத்துகளைக் கேட்டுக்கொண்ட ஓபிஎஸ் ஜல்லிகட்டு பிரச்சினைக்கு ஒரு உன்னதமான தீர்வு கண்டார். அப்போது கமல் ஓபிஎஸ்ஸிடம் நல்ல தொடர்பில் இருந்தார்.

இப்போது கமல் ட்வீட்டைப் பொறுத்தவரையில் 140 எழுத்துகளுக்குள் கருத்தை சொல்ல வேண்டி இருப்பதால் பல விஷயங்கள் இப்படியும் புரிந்து கொள்ளலாம் அப்படியும் புரிந்து அகொள்ளலாம் என்கிற மாதிரி உள்ளன. அதனால் நாங்கள் எப்போது ரியாக்ட் பண்ண வேண்டுமோ அப்போது மட்டும் ரியாக்ட் செய்கிறோம்.

முன்னதாக, கட்சியில் மலிந்திருக்கும் ஊழல் என்று கருத்து சொன்னதும் ஓபிஎஸ் வரவேற்றார். தற்போது முரசொலி மேடையில் இருந்துவிட்டு, ஊழல் பற்றி சொல்கிறார். ஊழலின் ஊற்றுக்கண்ணில், ஊழலின் உச்சகட்ட இடத்தில் நின்றுகொண்டு ஊழலை ஒழிப்போம் என்று கூறுவது போலித்தனமாக உள்ளது. அதை நாங்கள் பதிவு செய்திருக்கிறோம்.

திமுகவையும், அதிமுகவும் ஒரு நிலையில் வைத்துப் பார்க்கும் தொனியில் கமல் ட்வீட்கள் இருக்கின்றன. கமல் பொது வாழ்வுக்கு பொதுவெளிக்கு வந்து எல்லாவற்றையும் முழுமையாகப் பார்க்க வேண்டும். அதிமுக-வின் 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். அவர் எங்கள் தர்மயுத்தத்துக்கு ஆதரவு தர வேண்டும். எங்கள் யுத்தத்தில் பங்குபெற வேண்டும்.

தொண்டர்களின் கோரிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் நிறைவேறாமல் இணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது.

எங்களின் முதல் கோரிக்கை எடப்பாடி பழனிசாமி அணியினரால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2-வது கோரிக்கையும் நிறைவேற்றினால் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கும். அதற்கான சூழல் வேகமாக வரும் என அம்மா அணியினர் கூறுவதை வரவேற்கிறோம். விரைவில் அடுத்த கட்டத்துக்கு பேச்சுவார்த்தை நகர வாய்ப்புள்ளது'' என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.


எங்கள் தர்மயுத்தத்துக்கு கமல் ஆதரவு தர வேண்டும்: மாஃபா பாண்டியராஜன்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
எங்கள் தர்மயுத்தத்துக்கு கமல் ஆதரவு தர வேண்டும்: மாஃபா பாண்டியராஜன்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
எங்கள் தர்மயுத்தத்துக்கு கமல் ஆதரவு தர வேண்டும்: மாஃபா பாண்டியராஜன்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு:மேலூர் விவசாயிகள் போராட்டம் வாபஸ்
மேலூர் பகுதி விவசாயத்துக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் மதுரை - சென்னை நான்குவழிச்சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மாற்றுப் பாதையில்

மேலும்...

 1 முதல் பிளஸ் 2 வரையிலான வரைவு பாடத் திட்டம் வெளியீடு
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான புதிய வரைவு பாடத்திட்ட தொகுப்பு நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ளார்.பாடத்திட்டம் குறித்து கல்வியாளர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு அவை பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக

மேலும்...

 சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி
சசிகலாவின் கணவர் நடராஜன் 1994-ம் ஆண்டு லண்டனிலிருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார்.  இந்த கார் 1993–ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்றும், பயன்படுத்தப்பட்ட பழைய வாகனம் என்றும், போலி ஆவணங்களை தயாரித்து, காரை இறக்குமதி செய்துள்ளார். இதன்மூலம் ரூ.1

மேலும்...

 தினகரனின் தங்கைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
சசிகலா சகோதரி வனிதாமணியின் மகளும் டிடிவி தினகரனின் தங்கை மற்றும் அவரது கணவருக்கு 3 மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகள் சீதளா தேவி, இவர் டிடிவி தினகரனின் சகோதரி ஆவார்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in