tamilkurinji logo
 

போலீஸ் கட்டுப்பாட்டில் போயஸ் இல்லம்:வெளிநபர்கள், பத்திரிக்கையாளர்கள் செல்ல தடை,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Jayalalithaa's house opens to public with lot of restrictions

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்Jayalalithaa's,house,opens,to,public,with,lot,of,restrictions


செய்திகள் >>> தமிழகம்

போலீஸ் கட்டுப்பாட்டில் போயஸ் இல்லம்:வெளிநபர்கள், பத்திரிக்கையாளர்கள் செல்ல தடை

First Published : Friday , 18th August 2017 12:18:17 PM
Last Updated : Friday , 18th August 2017 12:18:17 PM


போலீஸ் கட்டுப்பாட்டில் போயஸ்  இல்லம்:வெளிநபர்கள், பத்திரிக்கையாளர்கள் செல்ல தடை,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Jayalalithaa's house opens to public with lot of restrictions


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் முழுவதும் தற்போது போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து போயஸ் தோட்டத்தில் தங்கியிருந்த சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

மன்னார்குடி ஆட்களை வெளியேற்றிபின் போலீஸ் கட்டுப்பாட்டில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் வந்தது. நினைவு இல்லம் ஆக்குவதன் முதல் நடவடிக்கையாக சசிகலா ஆட்கள் வெளியேற்றப்பட்டனர்.

போயஸ் இல்லத்துக்குள் வெளி ஆட்கள் செல்வதற்கும் தடை விதித்துள்ளது போலீஸ். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று நேற்று மாலை அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று காலை முதல் இந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

100க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை 6 மணி முதலே இந்த பணியை தொடங்கியிருக்கிறார்கள். இந்த பகுதியை பொறுத்தவரை, ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எவ்வளவு பாதுகாப்பு செய்யப்பட்டிருந்ததோ, அதே போன்ற ஒரு நிலைமை தான் தற்போது காணப்படுகிறது.

பிரதான சாலையில் இருந்து போயஸ் கார்டனை நோக்கி உள்ளே வரக்கூடிய சாலை, அதாவது வேதா இல்லத்தில் இருந்து 1000 கிலோ மீட்டர் தொலைவுக்கு வெளி ஆட்களோ, வாகனங்களோ செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே போல் செய்திகளை சேகரிக்க செல்லக்கூடிய செய்தியாளர்களுக்கும் இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வீட்டிற்கு அருகில் செல்லமுடியாத ஒரு நிலையும் ஏற்பட்டுள்ளது.

இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன என்று காவல்துறை அதிகாரிகளை கேட்டால், நினைவில்லமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பின் காரணமாக பொதுமக்களுடைய வரத்து இன்றே இருக்கக்கூடும் என்ற அச்சமும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு அரசுக்கு உரிமையில்லை என்றும், இது தங்களுடைய பூர்வீக சொத்து. எனவே நீதிமன்றத்தை நாடி இந்த சொத்தை மீட்க போராடுவதற்கு தயார் என்று தெரிவித்திருக்கிறார். ஒரு வேலை தீபா தனது ஆதரவாளர்களுடன் இங்கே வந்தால், ஏதேனும் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் தான் போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்த வேலையாட்களில் பெரும்பாலானோர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சசிகலா மற்றும் தினகரனின் ஆதரவாளர்கள். அவர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டு, இப்போதைக்கு தோட்ட வேலை செய்யக்கூடிய ஒரு சில நபர்களை தவிர, மற்ற அனைவருமே வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.


 அதுமட்டுமல்லாமல் வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னால் இங்கே ஒரு 10 பேர் எப்போதும் அடியாட்களை போலவே இருப்பது வழக்கம். அவர்கள் அனைவரையும் போலீசார் தற்போது வெளியேற்றியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக போயஸ் தோட்ட இல்லம் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


போலீஸ் கட்டுப்பாட்டில் போயஸ்  இல்லம்:வெளிநபர்கள், பத்திரிக்கையாளர்கள் செல்ல தடை,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Jayalalithaa's house opens to public with lot of restrictions
போலீஸ் கட்டுப்பாட்டில் போயஸ்  இல்லம்:வெளிநபர்கள், பத்திரிக்கையாளர்கள் செல்ல தடை,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Jayalalithaa's house opens to public with lot of restrictions
போலீஸ் கட்டுப்பாட்டில் போயஸ்  இல்லம்:வெளிநபர்கள், பத்திரிக்கையாளர்கள் செல்ல தடை,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Jayalalithaa's house opens to public with lot of restrictions
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in