tamilkurinji logo


 

ஓட்டல் அறையில் பிணமாக கிடந்த விமான பணிப்பெண்,Singapore Airlines leading stewardess found dead in San Francisco hotel room

Singapore,Airlines,leading,stewardess,found,dead,in,San,Francisco,hotel,room




செய்திகள் >>> உலகம்

ஓட்டல் அறையில் பிணமாக கிடந்த விமான பணிப்பெண்

First Published : Thursday , 2nd February 2017 07:04:20 PM
Last Updated : Thursday , 2nd February 2017 07:04:20 PM


ஓட்டல் அறையில் பிணமாக கிடந்த விமான பணிப்பெண்,Singapore Airlines leading stewardess found dead in San Francisco hotel room

கலிபோர்னியாவில் உள்ள ஓட்டல் அறையில் விமானப் பணிப்பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலைப் பார்த்து வந்தவர் வனேசா யாப். அவர் சிங்கப்பூரில் இருந்து கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு செல்லும் விமானத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு வந்த யாப்  தன்னுடைய ஓட்டல் அறையில் ஓய்வு எடுத்தார். பணிக்கு நேரமாகியும் அவர் ஓட்டல் அறையை விட்டு வரவே இல்லை.


இதனால் விமான ஊழியர்கள் அவரைத் தேடி ஓட்டல் அறைக்கு சென்றனர்.

அப்போது அவர் ஓட்டல் அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவருக்கு முதலுதவிகள் அளித்த நிலையிலும் அவர் கண்விழிக்கவில்லை.இதைத் தொடர்ந்து அவரை மருத்துவர்கள் சோதித்த போது அவர் ஏற்கனவே இறந்திருப்பது தெரிய வந்தது.

யாப் விமானத்தில் ஏறிய போதே அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சக விமான ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


மேலும், அவர் 15 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் வேலை பார்த்ததாகவும் அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

யாப் இறந்தது தொடர்பாக அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டல் அறையில் பிணமாக கிடந்த விமான பணிப்பெண்,Singapore Airlines leading stewardess found dead in San Francisco hotel room ஓட்டல் அறையில் பிணமாக கிடந்த விமான பணிப்பெண்,Singapore Airlines leading stewardess found dead in San Francisco hotel room ஓட்டல் அறையில் பிணமாக கிடந்த விமான பணிப்பெண்,Singapore Airlines leading stewardess found dead in San Francisco hotel room
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்
உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும்

மேலும்...

 மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.
ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.அவர் நர்சாக பணியாற்றிய

மேலும்...

 தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம்

மேலும்...

 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in