tamilkurinji logo
 

சசிகலா நீக்கம் வலிமையான நடவடிக்கை - நடிகர் கமல்ஹாசன் ,Kamal hasan

Kamal,hasan


செய்திகள் >>> தமிழகம்

சசிகலா நீக்கம் வலிமையான நடவடிக்கை - நடிகர் கமல்ஹாசன்

First Published : Thursday , 14th September 2017 07:07:16 PM
Last Updated : Thursday , 14th September 2017 07:07:16 PM


சசிகலா நீக்கம்  வலிமையான நடவடிக்கை - நடிகர் கமல்ஹாசன் ,Kamal hasan

பிரபல இணையதளம் ஒன்றிற்கு  அளித்துள்ள சிறப்பு பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் கூறி இருப்பதாவது:-

சமீபத்தில் கேரள முதல்வரை சந்தித்தேன். அதற்காக, நான் கம்யூனிஸ்டு கட்சியில் சேரப் போவதாக கூறினர். நான் பல்வேறு கட்சி தலைவர்களுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்து இருக்கிறேன். ஆனால் எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை.

அரசியலில் மாற்றம் வேண்டும். புதிய சூழ்நிலை உருவாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து இந்த மாற்றம் தொடங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏன் தமிழகம் என கேட்கலாம். ஏதாவது ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கிறேன். முதலில் எனது வீட்டிலிருந்து அதை தொடங்கலாம் என்று நினைக்கிறேன். அதேநேரம், மாற்றத்தை கொண்டு வர எவ்வளவு தாமதம் ஆனாலும் பரவாயில்லை.

அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனிக்கட்சிதான் தொடங்குவேன். இது எனது விருப்பத்தின் பேரில் நடக்கப்போவது கிடையாது, கட்டாயத்தின் பேரில் நடக்கப்போகிறது. ஏனெனில் எனது கொள்கைகளுடன் எந்த கட்சியின் சித்தாந்தங்களும் முழுமையாக பொருந்தவில்லை.

சசிகலாவை அதிமுக பதவியிலிருந்து வெளியேற்றியது மாற்றத்திற்கான வலிமையான நடவடிக்கை என்றுதான் பார்க்கிறேன். ஆனால் இது ஒரு தொடக்கம் தான். சசிகலா நீக்கம் போன்ற மாற்றங்களை வரவேற்கிறேன் . தமிழக அரசியல் மாறி வருகிறது இது எனது நம்பிக்கைக்கு உரம் சேர்க்கிறது.
 இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.


சசிகலா நீக்கம்  வலிமையான நடவடிக்கை - நடிகர் கமல்ஹாசன் ,Kamal hasan சசிகலா நீக்கம்  வலிமையான நடவடிக்கை - நடிகர் கமல்ஹாசன் ,Kamal hasan சசிகலா நீக்கம்  வலிமையான நடவடிக்கை - நடிகர் கமல்ஹாசன் ,Kamal hasan
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி
சசிகலாவின் கணவர் நடராஜன் 1994-ம் ஆண்டு லண்டனிலிருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார்.  இந்த கார் 1993–ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்றும், பயன்படுத்தப்பட்ட பழைய வாகனம் என்றும், போலி ஆவணங்களை தயாரித்து, காரை இறக்குமதி செய்துள்ளார். இதன்மூலம் ரூ.1

மேலும்...

 தினகரனின் தங்கைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
சசிகலா சகோதரி வனிதாமணியின் மகளும் டிடிவி தினகரனின் தங்கை மற்றும் அவரது கணவருக்கு 3 மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகள் சீதளா தேவி, இவர் டிடிவி தினகரனின் சகோதரி ஆவார்.

மேலும்...

 மாணவியை மிரட்டிய நடிகை புவனேஷ்வரியின் மகன் கைது
நடிகை புவனேஷ்வரியின் 23 வயது மகனை சென்னையில் திருமங்கலம் போலீஸார் கைது செய்தனர். 3-வது ஆண்டு பல்மருத்துவம் படிக்கும் பெண்ணை பெட்ரொல் ஊற்றிக் கொளுத்துவேன் என்று மிரட்டியதால் திருமங்கலம் போலீஸார் மிதுன் ஸ்ரீநிவாசனைக் கைது செய்தனர்.திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி இதுகுறித்துக்

மேலும்...

 யூ.பி.எஸ்.சி. தேர்வில் காப்பி அடித்த ஐ.பி.எஸ்.அதிகாரி வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 சிவில் சர்வீசஸ் பணிகளில் 985 பதவி இடங்களை நிரப்புவதற்கான முதன்மை தேர்வு கடந்த அக்டோபர் 28–ந்தேதி தொடங்கி நவம்பர் 5–ந்தேதி வரை நடந்தது. சென்னை உள்பட

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in