tamilkurinji logo
 

புற்று நோய் செல்களை அழிக்கும் கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் ,curry leaves medicinal benefits karuveppilai medicinal uses in tamil Health Benefits of Curry Leaves in TamilTamil Karuveppilai Medicinal Uses Benefits

curry,leaves,medicinal,benefits,karuveppilai,medicinal,uses,in,tamil,Health,Benefits,of,Curry,Leaves,in,TamilTamil,Karuveppilai,Medicinal,Uses,Benefits



புற்று நோய் செல்களை அழிக்கும் கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்

First Published : Wednesday , 19th July 2017 06:00:56 PM
Last Updated : Wednesday , 19th July 2017 06:17:19 PM


புற்று நோய் செல்களை அழிக்கும் கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் ,curry leaves medicinal benefits karuveppilai medicinal uses in tamil Health Benefits of Curry Leaves in TamilTamil Karuveppilai Medicinal Uses Benefits

தினசரி உணவுகளில் எப்போதும் இடம்பெறும் பொருள் கறிவேப்பிலை. .


முடி கொட்டுவதைத் தவிர்க்க, செரியாமையைப் போக்க, அமீபியாசிஸ் (Amebiasis) எனப்படும் ஒரு வகை வயிற்றுப்போக்கைக் குணப்படுத்த, வயோதிகத்தில் வரும் 'அல்சைமர்’ (Alzheimer) எனும் ஞாபக மறதியைக் குறைக்க எனப் பல பிரச்னைகளுக்கும் தீர்வாக இருக்கிறதாம் கறிவேப்பிலை.

இந்திய சமையலில் வாசனைக்குச் சேர்க்கப்படும் கறிவேப்பிலை, பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கும் தன்மை உடையது என என்பதை ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

கறிவேப்பிலை ரத்த சர்க்கரை அளவை 42 சதவிகிதமும், ரத்தக் கொழுப்பை 30 சதவிகிதமும் குறைக்கிறது என்கிறது சமீபத்திய ஆய்வு.

சிறு வயதிலேயே இளநரை ஏற்பட்டால், கறிவேப்பிலையோடு சின்ன வெங்காயம் சேர்த்து   அரைத்து  சாப்பிட  வேண்டும் . பித்தம்  கூடினாலோ, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தாலோ, இளநரை உருவாகும். முடியின் கறுமை நிறத்துக்குத் தேவை இரும்புச் சத்து. கறிவேப்பிலையில் இரும்புச் சத்து அதிகம். சின்ன வெங்காயம் ரத்தத்தைச் சுத்திகரித்து, பித்தத்தைக் குறைக்கும். இதனால் இளநரை குறைந்து முடிகள் கறுப்பாகும்.

முடி வளர்ச்சிக்குப் புரதமும் இரும்புச் சத்தும் தேவை. 50 கிராம் உளுந்துடன், 25 கிராம் கறிவேப்பிலையைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர நல்ல முடி வளர்ச்சி கிடைக்கும்.

கறிவேப்பிலையில் உள்ள கார்பஸோல் ஆல்கலாய்டுகள் கருமுட்டை உற்பத்தியைத் தூண்டுகின்றன. 20 கிராம் கறிவேப்பிலையுடன் மூன்று கிராம் சீரகம், ஒரு கிராம் வெந்தயம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். காலையில் வெறும் வயிற்றில் மோர் அல்லது பாலில் இந்தக் கலவையைக் கலந்து குடித்துவந்தால், பித்தச் சூடு மற்றும் கருப்பைச் சூடு நிவர்த்தி ஆகும்.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும்.

இரும்புச் சத்தும் பீட்டா கரோட்டினும் அதிகம் உள்ள கறிவேப்பிலை ரத்த   சோகையை குணப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் ஊக்குவிக்கும்.

வாரத்துக்கு ஒரு முறை, ஒரு பிடி கறிவேப்பிலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சீயக்காய், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து அலசும்போது, கூந்தல் கருகருவென வளர ஆரம்பிக்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ரத்த இழப்பினால் இரும்புச் சத்து குறையும். இதைச் சரிக்கட்டக் கறிவேப்பிலையைவிடச் சிறந்த மருந்து கிடையாது.  

கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.


கறிவேப்பிலை புற்று நோய் செல்களை அழிக்கும் வல்லமை படைத்தது. ரத்த சோகையை குணப்படுத்தும் அதுமட்டுமல்ல. உங்க ஞாபக மறதியையும் குணப்படுத்தும். எப்படி தெரியுமா? இந்த மாதிரி கருவேப்பிலையை சாப்பிட்டுப் பாருங்க.


கறிவேப்பிலை டீ நம்முடைய வாடிக்கையை மாற்றுவதற்க்கென்றே வந்திருக்கிறது

‘கறிவேப்பிலை டீ' தேவையான பொருட்கள் கறிவேப்பிலை - ஒரு கப் தண்ணீர் - 2 கப் சீரகம் - சிறிதளவு வெல்லம் - சிறிதளவு கருப்பு உப்பு - சிறிதளவு செய்முறை : 1.சீரகத்தை வறுத்து அரைத்துக் கொள்ளவும். 2. ஒரு பாத்திரத்தில் கறிவேப்பிலையை போட்டு அதில் இரண்டு கப் தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். 3.நன்றாக கொதித்தவுடன் அதில் வெல்லம் சேர்க்கவும். 4.ஐந்த நிமிடம் கழித்து அதனை இறக்கிவிடலாம். அதில் சிறிதளவு கறுப்பு உப்பு மற்றும் சீரகத் தூளை கலந்து குடிக்கலாம்.

கறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிட்டால் நம் ஞாபக சக்தி அதிகரிக்கிறதென்று ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள் . இதிலுள்ள நார்ச்சத்து,வைட்டமின்,மினரல் உள்ளிட்டவை செரிமானத்திற்கு பெரிதும் உதவுகின்றன. கண்பார்வை அதிகரிக்க, முடி கொட்டாமல் இருக்க, சளித்தொல்லைக்கு,மலச்சிக்கல் என நம் கெட்ட கொழுப்பை கரைக்க, உடல் உபாதைகள் பலவற்றிற்கும் அருமருந்தாய் இருக்கிறது.




புற்று நோய் செல்களை அழிக்கும் கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் ,curry leaves medicinal benefits karuveppilai medicinal uses in tamil Health Benefits of Curry Leaves in TamilTamil Karuveppilai Medicinal Uses Benefits புற்று நோய் செல்களை அழிக்கும் கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் ,curry leaves medicinal benefits karuveppilai medicinal uses in tamil Health Benefits of Curry Leaves in TamilTamil Karuveppilai Medicinal Uses Benefits புற்று நோய் செல்களை அழிக்கும் கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் ,curry leaves medicinal benefits karuveppilai medicinal uses in tamil Health Benefits of Curry Leaves in TamilTamil Karuveppilai Medicinal Uses Benefits
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 உடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்
தூக்கமின்மை, நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் குறைபாடுடைய திட்ட உணவு போன்ற சில விஷயங்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தக்கூடும்..அதற்கு பதிலாக, நீங்கள் உங்களை கவனித்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை

மேலும்...

 ஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்
கோடைகாலத்தில் தாராளமாக கிடைக்கும்   பாகற்காயின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பாகற்காயின் கசப்பு தன்மைக்காகவே இதனை பயன்படுத்த தயங்குவோர் ஏராளம். ஆனால் இதன் இலை, காய், பழம், வேர் என அனைத்துமே மிகுந்த மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. பல்வேறு நோய்களை போக்கும் நோய்

மேலும்...

 குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்
பொதுவாக பாதாம் எல்லோருக்கும் மிகவும் நல்லது. அதிக நார்சத்து, இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல முக்கிய மினரல்களை கொண்டுள்ளது. குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. விட்டமின் ஏ, பி நிறைந்தது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான 33% கால்சியம் கொண்டுள்ளது.பாதாமை அப்படியே

மேலும்...

 இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான உணவுகள் list of foods that lower blood pressure and cholesterol
கெட்ட கொழுப்புக்கள் இரத்தக்குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன. அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in