tamilkurinji logo
 

நடிகை சுஷ்மிதா சென் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு,Sushmita Sen appears before economic offences court in Chennainews , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Sushmita,Sen,appears,before,economic,offences,court,in,Chennainews,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


நடிகை சுஷ்மிதா சென் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

First Published : Thursday , 17th August 2017 12:08:28 PM
Last Updated : Thursday , 17th August 2017 12:10:19 PM


நடிகை சுஷ்மிதா சென் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு,Sushmita Sen appears before economic offences court in Chennainews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

வருகிற செப்டம்பர் 18-ந் தேதி எழும்பூர் கோர்ட்டில் நடிகை சுஷ்மிதா சென் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென், கடந்த 2005-ம் ஆண்டு ‘லேண்ட்குரூசர்’ என்ற வெளிநாட்டு சொகுசு காரை ரூ.55 லட்சத்துக்கு விலைக்கு வாங்கினார். இந்த கார், 2004-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பழைய கார் என்று சென்னை துறைமுகத்தில் கூறி, வரி ஏய்ப்பு செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

அதில், இந்த காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த மும்பையை சேர்ந்த ஹரன், வாசு பண்டாரி தமலா ஆகியோர் மீது குற்றம் சுமத்தியிருந்தனர். இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.

இதற்கிடையில், தான் வாங்கிய காருக்கு ரூ.20 லட்சம் வரியை சுஷ்மிதா சென் செலுத்தி விட்டார். மேலும், இந்த வழக்கில் அவர், சுங்கத்துறையினரின் (அரசு தரப்பு) சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் எழும்பூர் கோர்ட்டில் ஏற்கனவே ஆஜராகி சாட்சியம் அளித்து விட்டார்.

இந்தநிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் தரப்பில் சுஷ்மிதாவிடம் குறுக்கு விசாரணை செய்வதற்காக, அவரை நேரில் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.


 இந்த உத்தரவின்படி, அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, சுஷ்மிதா சென்னுக்கு எதிராக கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சுஷ்மிதா சென் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எழும்பூர் கோர்ட்டு பிறப்பித்த பிடிவாரண்டுக்கு ஏற்கனவே தடை விதித்து உள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சுஷ்மிதா சென் சார்பில் ஆஜரான வக்கீல், ‘வருகிற 18-ந் தேதி குறுக்கு விசாரணைக்காக சுஷ்மிதா சென் எழும்பூர் கோர்ட்டில் ஆஜராவார்’ என்று கூறினார். இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, ‘செப்டம்பர் 18-ந் தேதி சுஷ்மிதா சென், எழும்பூர் கோர்ட்டில் ஆஜராகவேண்டும். அன்றே அவரிடம் குறுக்கு விசாரணையை செய்து முடிக்க வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.


நடிகை சுஷ்மிதா சென் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு,Sushmita Sen appears before economic offences court in Chennainews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

நடிகை சுஷ்மிதா சென் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு,Sushmita Sen appears before economic offences court in Chennainews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

நடிகை சுஷ்மிதா சென் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு,Sushmita Sen appears before economic offences court in Chennainews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் : கமல்
 நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் திருவனந்தபுரத்தில் கூறியுள்ளார்.நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா,

மேலும்...

 சிரஞ்சீவி படத்தில் நயன்தாராவின் சம்பளம் ரூ.6 கோடி
சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாரா ரூ.6 கோடி சம்பளம் கேட்டு உள்ளார். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நடிகை நயன்தாரா 2005-ம் ஆண்டு ‘ஐயா’ படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி 12 வருடங்களாக ‘நம்பர் ஒன்’

மேலும்...

 பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்துக் குதறிய காமெடி நடிகை
நகைச்சுவை நடிகை மதுமிதா தனது பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்துக் குதறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்தின் காதலியாக வந்து பிரபலமானவர் மதுமிதா. அந்த படத்தில் சந்தானம் அவரை தேனடை என்று அழைத்தது

மேலும்...

 தொடர்ந்து போராடுங்கள் கேள்வி கேளுங்கள்:கமல்ஹாசன் ஆவேசம்
இந்த அரசியலை இப்படியே விட்டு வைக்கக்கூடாது என கோவையில் திருமண நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். திருமண விழாவாக நினைக்கவில்லை, இது ஆரம்ப விழாவாக எண்ணுகிறேன் எனவும் கமல் கூறியுள்ளார். நாம் நமது வேலை செய்வோம், தேவை வரும்போது கோட்டையை நோக்கி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in