tamilkurinji logo
 

தலைமை ஆசிரியை வற்புறுத்தலால் அழுதுகொண்டே பள்ளிக் கழிப்பறையை சுத்தம் செய்த மாணவிகள்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

தலைமை ஆசிரியை வற்புறுத்தலால் அழுதுகொண்டே பள்ளிக் கழிப்பறையை சுத்தம் செய்த மாணவிகள்

First Published : Wednesday , 29th November 2017 07:15:25 PM
Last Updated : Wednesday , 29th November 2017 07:15:25 PM


தலைமை ஆசிரியை வற்புறுத்தலால் அழுதுகொண்டே பள்ளிக் கழிப்பறையை சுத்தம் செய்த மாணவிகள்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

திருவள்ளூரில் பள்ளிக் கழிப்பறையை மாணவிகளே சுத்தம் செய்ததாக எழுந்துள்ள புகாரை அடுத்து, குற்றச்சாட்டு உண்மையெனில் தலைமை ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் ஜே.என்.சாலை அருகில் நகராட்சி அலுவலகம் எதிரே இயங்கிவருகிறது ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. இங்கு சுமார் 950 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் மொத்தம் பத்து கழிப்பறைகள் உள்ளன.

இந்தக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய, அரசு சார்பில் மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பணியாளர் இதற்கென நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமேகலை கடந்த வெள்ளிக்கிழமை அன்று (நவ. 24) ஒவ்வொரு வகுப்பின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியில் இருக்கும் மாணவிகளை அழைத்துள்ளார். அந்த மாணவிகளே தங்கள் கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று  மணிமேகலை உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

அத்துடன் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யாவிட்டால் பள்ளியில் இருந்து நீக்கிவிடுவேன் என்று அவர் மாணவிகளைக் கட்டாயப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதனால் மாணவிகளே எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் கழிப்பறைகளைச் சுத்தம் செய்தனர். அழுதுகொண்டே அவர்கள் கழிப்பறைகளைச் சுத்தமாக்கும் புகைப்படங்களும் வெளியாகின.
இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு நேற்று (திங்கட்கிழமை) மாணவிகளின் பெற்றோர், பள்ளித் தலைமை ஆசிரியையிடம் சென்று இதுகுறித்து விசாரித்தனர். அப்போது, அதிகம் பேசினால் மாணவிகளைப் பள்ளியில் இருந்து நீக்கிவிடுவேன் என்று தலைமை ஆசிரியை மணிமேகலை மிரட்டியதாகப் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். இதனையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமேகலை மீதான குற்றச்சாட்டு உண்மையெனில், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்

தலைமை ஆசிரியை வற்புறுத்தலால் அழுதுகொண்டே பள்ளிக் கழிப்பறையை சுத்தம் செய்த மாணவிகள்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

தலைமை ஆசிரியை வற்புறுத்தலால் அழுதுகொண்டே பள்ளிக் கழிப்பறையை சுத்தம் செய்த மாணவிகள்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

தலைமை ஆசிரியை வற்புறுத்தலால் அழுதுகொண்டே பள்ளிக் கழிப்பறையை சுத்தம் செய்த மாணவிகள்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 2018-ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பில் சேர மே 6-ம் தேதி நீட் தேர்வு : சி.பி.எஸ்.இ. அறிவிப்பு
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. தனியார் மருத்துக் கல்லூரிகள் கொள்ளை லாபம் அடிப்பதைத் தடுக்கவும், கல்வியின் தரத்தை உயர்த்தவும், இந்த தேர்வு முறையை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.ஆனால், சி.பி.எஸ்.இ. தரத்தில் கேள்வித்தாள்

மேலும்...

 “ஊழல் செய்வதில்தான் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்” விஜயகாந்த்
பஸ் கட்டண உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், ஊழல் செய்வதில்தான் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் சிவகாசியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது விஜயகாந்த் பேசினார்.பட்டாசு தொழிலை பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி

மேலும்...

 காலில் விழுவது போல் நடித்து எம்.எல்.ஏ. வை கீழே தள்ளி தாக்கிய வாலிபர்
போளூரில் நேற்று அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க கலசபாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் சென்றார்.திருமண மண்டபத்தின் முன்பு சென்றபோது வாலிபர் ஒருவர் ஆசிர்வாதம் பெறுவதுபோல் அவரது காலில் விழுந்தார். திடீரென அவர் எம்.எல்.ஏ.வின் இரு

மேலும்...

 அரசு பஸ் கட்டண உயர்வு எதிரொலி: ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
அரசு பஸ் கட்டண உயர்வுக்குப் பிறகு மின்சாரம் மற்றும் வெளியூர் விரைவு ரயில்களில் கணிசமாகக் கூட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, கூடுதல் ரயில்கள் இயக்குவது தொடர்பாக தெற்கு ரயில்வே ஓரிரு நாளில் முடிவு செய்யவுள்ளது.தமிழக அரசு மாற்றியமைத்துள்ள புதிய கட்டண நிலவரப்படி, சென்னை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in