tamilkurinji logo
 

பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவரும் பலி,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவரும் பலி

First Published : Friday , 8th December 2017 07:49:26 PM
Last Updated : Friday , 8th December 2017 07:49:26 PM


பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவரும் பலி,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் தீக்காயமடைந்து உயிரிழந்தார்.

குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் தீக்காயமடைந்து உயிரிழந்தார்.

இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–


சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே தாலுகா பேச்சகானபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் ஆச்சாரி (வயது 28). இவருடைய மனைவி ரூபா (22). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மகேஷ் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது.

இதனால் அவர், தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால், கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவும் மகேஷ், மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரை ரூபா கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதன்காரணமாக மனமுடைந்த ரூபா, வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார்.

இதனால் அவருடைய உடலில் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகேஷ், அவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.

அப்போது அவருடைய உடலிலும் தீப்பிடித்து எரிந்தது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேரின் உடல்களிலும் பிடித்து எரிந்த தீயை அணைத்து, குடிபண்டே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குடிபண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவரும் பலி,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவரும் பலி,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவரும் பலி,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காலில் விழுவது போல் நடித்து எம்.எல்.ஏ. வை கீழே தள்ளி தாக்கிய வாலிபர்
போளூரில் நேற்று அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க கலசபாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் சென்றார்.திருமண மண்டபத்தின் முன்பு சென்றபோது வாலிபர் ஒருவர் ஆசிர்வாதம் பெறுவதுபோல் அவரது காலில் விழுந்தார். திடீரென அவர் எம்.எல்.ஏ.வின் இரு

மேலும்...

 ராணுவ மரியாதையுடன் தமிழக வீரர் சுரேஷின் உடல் சொந்த ஊரில் அடக்கம்
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷ் உடல் அரசு மரியாதையுடன் இன்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில்

மேலும்...

 வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மெரினாவில் மீண்டும் போராட்டம்
 'பிழைப்பிற்காக பெண்களை வர்ணித்து பாட்டு எழுதும் வைரமுத்துவுக்கு, ஆண்டாள் குறித்து அவதுாறு பேச எந்த தகுதியும் இல்லை. அவர், மன்னிப்பு கேட்காவிட்டால், மெரினாவில் மீண்டும் போராட்டம் வெடிக்கும்' என, இந்து மக்கள் கூட்டத்தில் எச்சரிக்கை விடப்பட்டது.சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், பாடலாசிரியர்

மேலும்...

 மறைந்த பத்திரிகையாளர் ஞாநி உடல் மருத்துவக் கல்லூரியிடம் தானமாக ஒப்படைப்பு
மறைந்த பத்திகையாளர், அரசியல் விமர்சகர் ஞாநியின் உடல் அவரது விருப்பத்தின்படி சென்னை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்க எடுத்து செல்லப்பட்டது.பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 64.கடந்த சில காலமாகவே

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in