tamilkurinji logo
 

நீட் அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை - தமிழகத்திற்கு விலக்கு இல்லை: நீதிமன்றம் உத்தரவு,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

நீட் அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை - தமிழகத்திற்கு விலக்கு இல்லை: நீதிமன்றம் உத்தரவு

First Published : Tuesday , 22nd August 2017 07:29:58 PM
Last Updated : Tuesday , 22nd August 2017 07:29:58 PM


நீட் அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை - தமிழகத்திற்கு விலக்கு இல்லை: நீதிமன்றம்  உத்தரவு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட வரைவை தமிழக அரசு மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இதற்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவித்ததையடுத்து 3 அமைச்சகங்கள் ஒப்புதலும் அளித்து விட்டன. எனவே, அவசர சட்டத்தற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அவசர சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கலந்தாய்வை உடனடியாக நடத்த உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் நளினி சிதம்பரமும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் எடுக்கப்படும் முடிவுகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இரு தரப்பினரும் பாதிக்காத வகையில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடத்தப்படும்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என தெரிவித்தார். மேலும், தமிழக அரசின் அவசர சட்ட வரைவை ஏற்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

இதையடுத்து, நீட் தேர்வின் அடிப்படையில் தான் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என கூறிய உச்ச நீதிமன்றம், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை உடனடியாக தொடங்க வேண்டும் என உத்தரவிட்டது. செப்டம்பர் 4-ம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நீட் அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை - தமிழகத்திற்கு விலக்கு இல்லை: நீதிமன்றம்  உத்தரவு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

நீட் அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை - தமிழகத்திற்கு விலக்கு இல்லை: நீதிமன்றம்  உத்தரவு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

நீட் அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை - தமிழகத்திற்கு விலக்கு இல்லை: நீதிமன்றம்  உத்தரவு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கமல் ஒரு மரபணு விதை; இந்தியாவில் அதை விதைப்பதில்லை- அமைச்சர் ஜெயக்குமார்
கமல் மரபணு மாற்றப்பட்ட விதை; தமிழகத்தில் நாம் அதை விதைப்பதில்லை என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.காகிதப் பூக்கள் மலரலாம் ஆனால் மணக்காது என ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சூசகமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில்

மேலும்...

 அப்துல் கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தைத் தொடங்கினார் கமல்ஹாசன்
ராமேசுவரத்தில் கணேஷ் மகாலில் நடைபெற்ற மீனவர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார். கமல்ஹாசனை சந்தித்து மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை மனு அளித்துப் பேசினர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கமலிடம் மீனவர்கள்

மேலும்...

 காகிதப் பூக்கள் மலரலாம்; மணக்காது: ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து ஸ்டாலின்
தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சி காகிதப் பூக்கள் மலரலாம், ஆனால் மணக்காது என்று திமுக  செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார். திமுக நிர்வாகிகளை தொடர்ந்து சந்திக்கும்  நிகழ்ச்சி குறித்து தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், கோடி தொண்டர்களின் குரல்

மேலும்...

 ஆட்சியே சரியில்லை நான் எப்படி அதிமுக தலைவர்களை சந்திப்பேன் - நடிகர் கமல்ஹாசன்
ஆட்சியே சரி இல்லை என்று சொல்லும் நான் எப்படி ஆளும் அதிமுக தலைவர்களை சந்திப்பேன் என சீமானுடனான சந்திப்புக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் பேட்டியளித்துள்ளார். அப்போது இருவரும் அரசியலில் இணைந்து செயல்படுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in