tamilkurinji logo
 

நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது லட்சியம்: கமல்ஹாசன் ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது லட்சியம்: கமல்ஹாசன்

First Published : Tuesday , 7th November 2017 07:10:15 PM
Last Updated : Tuesday , 7th November 2017 07:10:15 PM


நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது லட்சியம்: கமல்ஹாசன் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

30 ஆண்டுகளுக்கு முன்பு எனது நற்பணி மன்றத்தினருக்கு நல்லதை தேடி செய்ய வேண்டும் என்பதற்காக குறைகளை தீர்ப்போம் வா என்று ஒரு புத்தகம் எழுதி இருந்தேன்.


அது மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. எல்லோரும் முயன்றால் நல்லது செய்ய முடியும். தவறான ஆட்களிடம் தானத்தை கொடுப்பது கூட தவறுதான்.

நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது லட்சியம். மக்கள் பிரச்சினையை அறிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன்.

அனைத்து மக்களையும் தெரிந்து கொள்வதற்காகவே இந்த சுற்றுப்பயணம். அக்கிரமம் நிகழும் போது அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.


தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் பழுதாக உள்ளது என்று கருதுகிறேன். அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்.


ஊடகங்கள் சொல்லாகவும், செயல்களாகவும் இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நியாயத்திற்கான குரலை வலுப்படுத்த வேண்டும் என்பதில் தின்னமாக நம்புகிறேன்.


கட்சியை தொடங்கும் முன்பு அடித்தளத்தை பலப்படுத்த வேண்டும். அஸ்திவாரம் பலமாக இருப்பதாக கருதுகிறேன். கட்சியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை தொடங்கிவிட்டேன். கட்சியின் பெயரை இப்போதே அறிவிக்க வேண்டியது அவசியம் இல்லை. அவசரமும் இல்லை.

மக்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்காகவும், பிரச்சினைகளை தெரிந்து கொள்வதற்காகவும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய முடிவு செய்துள்ளேன். நல்ல தமிழகத்தை உருவாக்குவதே எனது கனவு. பிரச்சினைகளுக்கு எதிராக நியாயமான குரலை வலுப்படுத்த வேண்டும்.

சினிமா எடுப்பதற்கே ஆறு மாதங்கள் முன்னேற்பாடுகள் செய்பவன் நான். அரசியல் அதைவிட பெரிய பணி. நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் நேரம் வந்து விட்டது.

எனது சுற்றுப்பயணத்தை முடித்ததும் முறையான அறிவிப்பை வெளியிடுவேன். நான் அரசியலுக்கு வந்தாலும், அதிகாரத்தில் இருந்தாலும் எனக்கு எதிராக கேள்வி கேட்க முடியும். தமிழகத்திற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் புதிய பயணத்தை தொடங்குவதற்கு முன்பு மக்களை சந்திப்பது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது லட்சியம்: கமல்ஹாசன் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது லட்சியம்: கமல்ஹாசன் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது லட்சியம்: கமல்ஹாசன் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சினிமா படப்பிடிப்பில் மயங்கி விழுந்த இயக்குனர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி
புதுக்கோட்டையில் நடந்த சினிமா படப்பிடிப்பின் போது இயக்குனர் மகேந்திரன் மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ‘புகழேந்தி என்னும் நான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மேலும்...

 பாலியல் தொல்லை கொடுத்த பட அதிபர் மீது சுருதி ஹரிகரன் புகார்
தமிழ் பட அதிபர் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார்” என்று நடிகை சுருதி ஹரிகரன் புகார் கூறினார்.கேரளாவை சேர்ந்தவர் நடிகை சுருதி ஹரிகரன். இவர் நெருங்கி வா முத்தமிடாதே என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். நிபுணன், ரா ரா ராஜசேகர்,

மேலும்...

 தேர்தலில் கமலுடன் கூட்டணியா? ரஜினிகாந்த் பதில்
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தார். தனது ரசிகர் மன்றம் மூலமாக கட்சி பணிகள் குறித்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி கட்சியின் பெயரை வெளியிட்டு, தமிழகம்

மேலும்...

 வைரமுத்து தனி மனிதர் அல்ல; இயக்குனர் பாரதிராஜா அறிக்கை
தமிழகத்தில் எழுத்து, பேச்சு, கருத்து சுதந்திரம் எல்லாம் இல்லாமல் போய்விட்டது என்றும் வைரமுத்து என்பவர் தனி மனிதர் அல்ல, தமிழகத்தின் பெரு அடையாளம் என்றும் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில், தனிமனித உரிமை பறிக்கப்பட்டு, எவ்வளவோ

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in