tamilkurinji logo
 

ஆர்.கே.நகர் வேட்பு மனு நிராகரிப்பு:தேர்தல் அலுவலகம் அருகே விஷால் திடீர் சாலை மறியல்,Actor-Vishal-stages-sit-in-Dharna-near-RK-nagar-bypoll.

Actor-Vishal-stages-sit-in-Dharna-near-RK-nagar-bypoll.



செய்திகள் >>> தமிழகம்

ஆர்.கே.நகர் வேட்பு மனு நிராகரிப்பு:தேர்தல் அலுவலகம் அருகே விஷால் திடீர் சாலை மறியல்

First Published : Tuesday , 5th December 2017 07:30:46 PM
Last Updated : Tuesday , 5th December 2017 07:30:46 PM


ஆர்.கே.நகர்  வேட்பு மனு நிராகரிப்பு:தேர்தல் அலுவலகம் அருகே விஷால் திடீர் சாலை மறியல்,Actor-Vishal-stages-sit-in-Dharna-near-RK-nagar-bypoll.

 ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி. மு.க., தி.மு.க., டி.டி.வி. தினகரன் அணி, பா.ஜ.க., நடிகர் விஷால், நாம் தமிழர் கட்சி, ஜெ.தீபா ஆகியோருக்கு இடையே  7 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வரை 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கடைசி நாளான நேற்றும் சிலர் மனுதாக்கல் செய்தனர். முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பிரதான கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கரு.நாகராஜன் நேற்று மனுதாக்கல் செய்தார். சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கும் நடிகர் விஷால், ஜெ.தீபா ஆகியோரும் நேற்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நபரை அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பத்து பேர் முன்மொழிய வேண்டும்.

ஆனால், விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்ததாக காணப்படும் பத்து பெயர்களில் விஷாலை முன்மொழியாத இரு பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று பிற்பகல் வாக்கில் விஷாலின் வேட்புமனுவை ஏற்க கூடாது என தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.


 இதை தொடர்ந்து சுமார் இரண்டரை மணி நேரம் அவரது மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்ட பின்னர் இன்று மாலை இந்த அறிவிப்பு வெளியானதால் பெரும் பரபரப்பு உருவானது.

இதைதொடர்ந்து, ஆர்.கே. நகர் தேர்தல் அலுவலகத்துக்கு மாலை ஐந்தரை மணியளவில் விரைந்து வந்த நடிகர் விஷால் தன்னை ஆதரித்து முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும், எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதில் நியாயமில்லை என்றும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வாக்குவாதம் செய்தார். இதை அவர் ஏற்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

இதை தொடர்ந்து தேர்தல் அலுவலகம் அருகே தனது ஆதரவாளர்களுடன் தண்டையார் பேட்டை சாலையில் அமர்ந்து நடிகர் விஷால் திடீர் மறியலில் ஈடுபட்டார். விரைந்துவந்த போலீசார் விஷாலிடம் சமரசம் பேசி தேர்தல் அலுவகத்துக்குள் அழைத்து சென்றனர். அங்கு தேர்தல் அதிகாரியிடன் விஷால் தற்போது பேசி வருகிறார்.




ஆர்.கே.நகர்  வேட்பு மனு நிராகரிப்பு:தேர்தல் அலுவலகம் அருகே விஷால் திடீர் சாலை மறியல்,Actor-Vishal-stages-sit-in-Dharna-near-RK-nagar-bypoll. ஆர்.கே.நகர்  வேட்பு மனு நிராகரிப்பு:தேர்தல் அலுவலகம் அருகே விஷால் திடீர் சாலை மறியல்,Actor-Vishal-stages-sit-in-Dharna-near-RK-nagar-bypoll. ஆர்.கே.நகர்  வேட்பு மனு நிராகரிப்பு:தேர்தல் அலுவலகம் அருகே விஷால் திடீர் சாலை மறியல்,Actor-Vishal-stages-sit-in-Dharna-near-RK-nagar-bypoll.
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நிர்மலா தேவி விவகாரம்; பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்: நடிகை குஷ்பு
பேராசிரியை நிர்மலா தேவியின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் செல்போனில் பேசியதாக வந்த புகாரையடுத்து கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி (46)

மேலும்...

 கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி
கடலூர் மாவட்டம் தியாகவள்ளியை அடுத்த நொச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 28). விவசாயி. இவரது மனைவி செந்தமிழ்செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.தங்கபாண்டியனின் தாய்-தந்தை மற்றும் சகோதரர் மருதுபாண்டி அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு

மேலும்...

 அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை
விருதுநகரில் தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர், மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவதாக வெளியான ஆடியோ பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று 4 மாணவிகளை பேராசிரியை கட்டாயப் படுத்தும் பேச்சு ‘வாட்ஸ்-

மேலும்...

 போனில் கதறி அழுத சிம்பு: 'அவரது மனிதாபிமானத்துக்கு நன்றி'- வைகோ உருக்கம்
தனது மருமகன் சிகிச்சையில் இருந்தபோது பேசிய நடிகர் சிம்பு போனில் கதறி அழுததாக வைகோ உருக்கமாக நன்றி தெரிவித்தார்.தமிழகத்தில் காவிரி பிரச்சினை தீயாகப் பற்றி எரிகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல தொண்டர்கள் தீக்குளித்து வருகின்றனர். சிலர் தீக்குளிப்பு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in