tamilkurinji logo
 

மன நலம் பாதித்த 20 வயது மகளை கொலை செய்த தந்தை,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

மன நலம் பாதித்த 20 வயது மகளை கொலை செய்த தந்தை

First Published : Thursday , 21st September 2017 09:44:18 AM
Last Updated : Thursday , 21st September 2017 09:44:18 AM


மன நலம் பாதித்த 20 வயது மகளை கொலை செய்த தந்தை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


சென்னை நெற்குன்றம், செல்லியம்மன் நகர், ஆடி வீதியை சேர்ந்தவர் ஆதிகேசவன் (48), ஆட்டோ டிரைவர்.  இவரது மனைவி மோகனா (40). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களது மகள் கவுசல்யா (20), மகன் அஜித் (18). கவுசல்யா பல ஆண்டுகளாக  உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்.  அஜித் கல்லூரியில் படித்து வருகிறார்.  


கவுசல்யாவுக்கு  தாய் மோகனா வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி மோகனா வெளியூர் சென்றதால் மகள் கவுசல்யாவை நெற்குன்றத்தில் உள்ள கணவரிடம் விட்டுவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் கவுசல்யாவுக்கு வலிப்பு மற்றும் வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஆதிகேசவன், கவுசல்வாயின் கழுத்தை பிளாஸ்டிக் கயிற்றினால் இறுக்கி கொன்றுவிட்டார். பிறகு கோயம்பேடு மார்க்கெட் காவல் நிலையத்தில் ஆதிகேசவன் சரணடைந்தார்.

போலீசார் அவரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு கவுசல்யாவின் சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில் ஆதிகேசவன் போலீசாரிடம் கூறியதாவது: என் மகள் கவுசல்யா  சிறு வயதில் இருந்தே மனநலம் மற்றும் வலிப்பு  நோயால்  பாதிக்கப்பட்டிருந்தார்.

மனைவி திடீரென கவுசல்யாவை என்னிடம் கொண்டு வந்து விட்டுச் சென்றுவிட்டார்.   சம்பவத்தன்று  கவுசல்யா வலிப்பு நோய் மற்றும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாள்.

சிறிது நேரம் கழித்து அவளை குளிக்க அழைத்தபோது  வரமறுத்து அடம்பிடித்தாள். உடனே.  பக்தத்து வீட்டில் உள்ள பாட்டியை அழைத்து அவளை குளிக்க வைக்க சொன்னேன். பாட்டி வந்து அழைத்தபோதும் குளிக்க மறுத்து அடம் பிடித்தாள்.

பின்னர் என்ன செய்கிறோம் என்று தெரியாது தன்னுடைய ஆடைகளையெல்லாம் களைந்து விட்டாள். இதனால் மிகவும் மனவேதனை அடைந்த நான்  இவள் உயிருடன் இருந்தாலும் ஒண்ணுதான், இல்லாததும் ஒண்ணுதான் என்று நினைத்து  கயிரை எடுத்து கவுசல்யாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டேன்.

இவ்வாறு ஆதிகேசவன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். கோயம்பேடு  போலீசில் சரணடைந்த ஆதிகேசவன் மீது  குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரிக்கிறார்.


மன நலம் பாதித்த 20 வயது மகளை கொலை செய்த தந்தை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

மன நலம் பாதித்த 20 வயது மகளை கொலை செய்த தந்தை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

மன நலம் பாதித்த 20 வயது மகளை கொலை செய்த தந்தை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காதலனுடன் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி சின்ன செங்காத்தாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கன். கூலித்தொழிலாளி. இவரது மகள் பவித்ரா

மேலும்...

 மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம்: முதல்வர் பழனிசாமி புனித நீராடினார்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் நடைபெற்று வரும் காவிரி மகா புஷ்கரம் விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று புனித நீராடினார்.மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் கடந்த 12-ம் தேதி தொடங்கிய மகா புஷ்கரம் விழா வரும் 24-ம் தேதி வரை

மேலும்...

 சசிகலா நீக்கம் வலிமையான நடவடிக்கை - நடிகர் கமல்ஹாசன்
பிரபல இணையதளம் ஒன்றிற்கு  அளித்துள்ள சிறப்பு பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் கூறி இருப்பதாவது:-சமீபத்தில் கேரள முதல்வரை சந்தித்தேன். அதற்காக, நான் கம்யூனிஸ்டு கட்சியில் சேரப் போவதாக கூறினர். நான் பல்வேறு கட்சி தலைவர்களுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்து இருக்கிறேன். ஆனால்

மேலும்...

 மாணவி அனிதா தற்கொலைக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் - மு.க. ஸ்டாலின்
மாணவி அனிதா தற்கொலைக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடிய அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்த சம்பவம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in