10 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் மனீஷா கொய்ராலா, சஞ்சய் தத்

10 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் மனீஷா கொய்ராலா, சஞ்சய் தத்
2010-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் ‘பிரஸ்தானம்’ ஆகும். இந்தப் படம் இந்தியில் ரீ-மேக் ஆகவுள்ளது.

இந்த இந்தி ரீ-மேக்கில் சஞ்சய் தத் மகனாக அலி ஃபாஸல் நடிக்கிறார், ஆமிரா தஸ்துர், அலி ஃபாஸலின் ஜோடி. இந்தப் படத்தில் சஞ்சய் தத்தின் மனைவியாக நடிக்க மனீஷா கொய்ராலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தின் ஷூட்டிங், சஞ்சய் தத்தின் தாயாரான நர்கிஸ் தத்தின் 89வது பிறந்த தினத்தில் லக்னோவில் ஜூன் 1-ம் தேதி தொடங்குகிறது.

பெரோஸ் கானின் 1992-ம் ஆண்டு வெளியான ஆக்‌ஷன் படமான யல்காரில் முதன் முதலில் சஞ்சய் தத், மனீஷா கொய்ராலா சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு ஹிட் ஜோடியான இவர்கள் சனம், கர்டூஸ், காஃப், பாகி ஆகிய படங்களிலும் சேர்ந்து நடித்தனர்.

கடைசியாக 2008-ல் அஃப்சல் கானின் ரொமான்ஸ் படமான மெஹ்பூபாவில் சஞ்சய் தத், மனீஷா கொய்ராலா சேர்ந்து நடித்தனர், அதன் பிறகு படங்கள் இல்லை.

தற்போது இவர்கள் மீண்டும் இணையும் செய்தியை உறுதி செய்த பட இயக்குநர் தேவ கட்டா (இவர்தான் 2010 தெலுங்கு படமான பிரஸ்தானத்தை இயக்கியவர்) “10 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கின்றனர்,


இந்தத் திரைக்கதைக்கு சஞ்சய் தத்தின் ஜோடியாக மனீஷா கொய்ராலா நிச்சயம் வெகுபொருத்தமாக இருப்பார்” என்றார்.

பிரஸ்தானம் படத்திற்கு 3 பிலிம்ஃபேர் விருதுகள் மற்றும் நந்தி விருதுகள் கிடைத்தன. இந்தப் படம் ஒரு பொலிடிக்கல் திரில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://goo.gl/PRN8Kv


01 Nov 2018

2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்

01 Nov 2018

மலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்

31 Oct 2018

செருப்பால் தாக்கி சண்டையிட்ட பிரபல நடிகரின் 2 மனைவிகள்

25 Oct 2018

மீடூ புகார்: மார்கழிக் கச்சேரியிலிருந்து நீக்கப்பட்ட இசைக்கலைஞர்கள்

25 Oct 2018

தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு நடிகர் அர்ஜூன் வழக்கு

24 Oct 2018

இயக்குநர் சுசிகணேசன் மீது நடிகை அமலாபாலும் METOO புகார்

22 Oct 2018

சில பேர் மீதான #MeToo புகார்கள் அதிர்ச்சி அளிக்கின்றது: ஏ.ஆர்.ரஹ்மான்

16 Oct 2018

வாய்ப்புக்காக சமரசமா? - ‘சுசிலீக்ஸ்’ புகாருக்கு பாடகி சின்மயி விளக்கம்

11 Oct 2018

கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன்

11 Oct 2018

பாடகி சின்மயின் பாலியல் புகாருக்கு வைரமுத்து விளக்கம்