11ம் ஆண்டு ஐ.பி.எல்.திருவிழா மும்பையில் கோலாகலமாக தொடங்கியது
First Published : Saturday , 7th April 2018 08:41:01 PM
Last Updated : Saturday , 7th April 2018 08:41:47 PM
மும்பையில் உள்ள வான்கேடே அரங்கத்தில் 11வது ஐபிஎல் போட்டி கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் தொடங்கியது.
மேலும், துவக்க விழாவில் பல திரைத்துறை பிரபலங்களும் மற்றும் விளையாட்டு வீரா்களும் கலந்து கொண்டனா்.
இன்று முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த போட்டி ரசிகா்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், துவக்க விழாவில் பிரபுதேவாவின் நடனம் நிகழ்ச்சியும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் நட்சத்திரமான ரிதிக் ரோஷனின் நிகழ்ச்சி இறுதியாக நடந்து முடிந்தது.