tamilkurinji logo
 

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை - ராஜஸ்தானில் அதிரடி சட்டம்,Rajasthan clears Bill awarding death to rapists of girls below 12 yearstamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Rajasthan,clears,Bill,awarding,death,to,rapists,of,girls,below,12,yearstamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை - ராஜஸ்தானில் அதிரடி சட்டம்

First Published : Friday , 9th March 2018 07:26:41 PM
Last Updated : Friday , 9th March 2018 07:26:41 PM


12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை - ராஜஸ்தானில் அதிரடி சட்டம்,Rajasthan clears Bill awarding death to rapists of girls below 12 yearstamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் மசோதா ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் இன்று நிறைவேறியது.

ஏற்கனவே, ஹரியானா, மத்தியப் பிரதேச அரசுகள் அரசு தூக்குதண்டனை விதிக்கும் சட்டத்தை இயற்றி உள்ள நிலையில், இப்போது ராஜஸ்தான் அரசும் சட்டம் கொண்டு வந்துள்ளது.

மேலும், மஹாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களும் இதேபோன்று சட்டம் இயற்ற ஆலோசனை நடத்தி வருகின்றன.

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் கடந்த புதன்கிழமை கிரிமினல் சட்டத் திருத்த மசோதா 2018 கொண்டுவரப்பட்டது. இந்த மசோதாவில் கூறியிருப்பதாவது, ‘ 12 வயது வரை உள்ள சிறுமிகள், முதல் பெண்கள் வரை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கலாம் அல்லது குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்க வேண்டும். அல்லது சிறை தண்டனையை வாழ்நாள் முழுவதும் நீட்டித்து இருக்க வேண்டும்’ என்று கொண்டுவரப்பட்டது.

மேலும், 376 டிடி எனும் பிரிவு கூடுதலாகச் சேர்க்கப்பட்டது.அதில், ஒரு பெண்ணை, சிறுமியை கூட்டுப்பலாத்காரம் செய்பவர்களுக்கும் இதேபோன்று தூக்கு தண்டனை, அல்லது 14 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கலாம். கூட்டு பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை வாழ்நாள் முடியும்வரை சிறையில் அடைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மசோதா ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து விரைவில் ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் அனுப்பப்பட்டு சட்டமாகும்.

இது குறித்து ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் ஜிசி கட்டாரியா ஜெய்பூரில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், ‘ ராஜஸ்தான் மாநில குற்றவியல் சட்டத்தில் இரு திருத்தங்கள் கொண்டு வந்துள்ளோம்.

அதில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பது, மற்றொரு 14 ஆண்டுகள் கண்டிப்பாக சிறையில் இருந்தாலும், அவர் வாழ்நாள்வரை வெளி உலகத்துக்கு வராமல் சிறையிலேயே காலத்தை கழிக்க வேண்டும் என்பதாகும் இந்த திருத்தத்துக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது’ என்று தெரிவித்தார்.

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை - ராஜஸ்தானில் அதிரடி சட்டம்,Rajasthan clears Bill awarding death to rapists of girls below 12 yearstamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை - ராஜஸ்தானில் அதிரடி சட்டம்,Rajasthan clears Bill awarding death to rapists of girls below 12 yearstamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை - ராஜஸ்தானில் அதிரடி சட்டம்,Rajasthan clears Bill awarding death to rapists of girls below 12 yearstamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பிரதமர் மோடியும் ஊழல்வாதிதான் பா.ஜனதாவை தாக்கிய ராகுல் காந்தி
காங்கிரஸ் மாநாட்டில் 50 நிமிடங்கள் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசினார்.   ராகுல் காந்தி பேசுகையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம், பிஎன்பி மோசடி, பொருளாதார நிலை, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் பிற விவகாரங்களில்

மேலும்...

 மூன்று மக்களவை தொகுதிகளிலும் பா.ஜ.க தோல்வி - சமாஜ்வாடி வெற்றி
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர், புல்புர் மற்றும் பீகார் மாநிலம் அராரியா மக்களவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. கோரக்பூர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் உபேந்திர தத் சுக்லாவை சுமார் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளர்

மேலும்...

 உ.பி.யில் தள்ளுவண்டியில் சடலத்தை இழுத்து சென்ற அவலம்
உத்தரபிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் வழங்காததால் இறந்த மனைவியின் உடலை தள்ளு வண்டியில் வைத்து கூலி தொழிலாளி ஒருவர் 5 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. மைன்புரி மாவட்டம் ஹரிகாபூர் கிராமத்தைச் சேர்ந்த கன்ஹாயாலால் மனைவி சோனிக்கு நேற்று காலை திடீரென்று

மேலும்...

 சிறையில் செல்பி எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட விசாரணைக்கைதிகள்
உத்தரபிரதேச மாநிலத்தில் விசாரணை கைதிகள் மூன்று பேர் சிறை வளாகத்தினுள் செல்பி எடுத்து அதனை பேஸ்புக்கில் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரின் மாவட்ட சிறையிலிருக்கும் விசாரணை கைதிகள் மூன்று பேர் சிறை வளாகத்தினுள் செல்பி எடுத்து அதனை பேஸ்புக்கில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in