tamilkurinji logo
 

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news



செய்திகள் >>> தமிழகம்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை

First Published : Thursday , 21st September 2017 08:55:37 AM
Last Updated : Thursday , 21st September 2017 08:55:37 AM


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதுதொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக கவர்னரை சந்தித்து மனு அளித்தார். அதில் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னருக்கு உத்தரவிடக்கோரி ஏற்கனவே தி.மு.க. செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த 14-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் கபில்சிபல், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அரசை வெற்றி பெற வைக்கும் முயற்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். இதைதொடர்ந்து 20-ந் தேதி வரை(அதாவது நேற்று) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்பட 18 பேரை கடந்த 18-ந் தேதி சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து வெற்றிவேல் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கும், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கும் நீதிபதி எம்.துரைசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் துஷ்யந்த் தவே, சல்மான் குர்ஷித் மற்றும் சென்னை ஐகோர்ட்டு மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் ஆகியோரும், சபாநாயகர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் அரிமா சுந்தரமும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதனும், தமிழக கவர்னர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் ராகேஷ் திரிவேதியும், மு.க.ஸ்டாலின் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் கபில்சிபல், அமரேந்தர்சரண் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இதன்பின்பு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

இந்த வழக்கில் ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது. அதேபோன்று மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தக்கூடாது.

இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக முதல்-அமைச்சர், சபாநாயகர், சட்டசபை செயலாளர், அரசு கொறடா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை அடுத்த மாதம்(அக்டோபர்) 4-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நிர்மலா தேவி விவகாரம்; பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்: நடிகை குஷ்பு
பேராசிரியை நிர்மலா தேவியின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் செல்போனில் பேசியதாக வந்த புகாரையடுத்து கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி (46)

மேலும்...

 அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை
விருதுநகரில் தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர், மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவதாக வெளியான ஆடியோ பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று 4 மாணவிகளை பேராசிரியை கட்டாயப் படுத்தும் பேச்சு ‘வாட்ஸ்-

மேலும்...

 மக்களுக்கு அமைதியையும், எல்லையில் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை: பிரதமர் மோடி
நாட்டு மக்களுக்கு அமைதியையும், எல்லையில் பாதுகாப்பையும் வழங்குதற்கு அரசு கடமைப்பட்டுள்ளது. அதற்காக ராணுவம், பாதுகாப்பு பிரிவினருக்கு தேவையான கருவிகளை மேம்படுத்துவது அவசியமாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள திருவிடந்தையில் பாதுகாப்புத் துறை சார்பில் ‘டெபெக்ஸ்போ-2018’

மேலும்...

 மோடி வருகைக்கு எதிர்ப்பு: இணையத்தை மிரட்டிய தமிழர்கள்.. உலக டிரெண்டிங்கில் நம்பர் 1 #GoBackModi
மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து GoBackModi என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இருந்தது அந்த ஹேஷ்டேக் உலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது. பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, சென்னை விமானநிலையம் வந்திறங்கினார்.பிரதமர் மோடி, விமான நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in