tamilkurinji logo
 

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை

First Published : Thursday , 21st September 2017 08:55:37 AM
Last Updated : Thursday , 21st September 2017 08:55:37 AM


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதுதொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக கவர்னரை சந்தித்து மனு அளித்தார். அதில் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னருக்கு உத்தரவிடக்கோரி ஏற்கனவே தி.மு.க. செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த 14-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் கபில்சிபல், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அரசை வெற்றி பெற வைக்கும் முயற்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். இதைதொடர்ந்து 20-ந் தேதி வரை(அதாவது நேற்று) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்பட 18 பேரை கடந்த 18-ந் தேதி சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து வெற்றிவேல் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கும், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கும் நீதிபதி எம்.துரைசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் துஷ்யந்த் தவே, சல்மான் குர்ஷித் மற்றும் சென்னை ஐகோர்ட்டு மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் ஆகியோரும், சபாநாயகர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் அரிமா சுந்தரமும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதனும், தமிழக கவர்னர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் ராகேஷ் திரிவேதியும், மு.க.ஸ்டாலின் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் கபில்சிபல், அமரேந்தர்சரண் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இதன்பின்பு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

இந்த வழக்கில் ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது. அதேபோன்று மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தக்கூடாது.

இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக முதல்-அமைச்சர், சபாநாயகர், சட்டசபை செயலாளர், அரசு கொறடா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை அடுத்த மாதம்(அக்டோபர்) 4-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காதலனுடன் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி சின்ன செங்காத்தாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கன். கூலித்தொழிலாளி. இவரது மகள் பவித்ரா

மேலும்...

 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் பதவி காலி...?
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் வெற்றி பெற்ற 18 தொகுதிகள் காலி என அறிவிக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஜெயந்தி பத்மநாபன்( குடியாத்தம்) , கோதண்டபாணி(திருப்போரூர்), முருகன்(அரூர்), உமா மகேஷ்வரி(விளாத்தி குளம்), பாலசுப்பிரமணி (ஆம்பூர்),வெற்றிவேல்( பெரம்பூர்), சுந்தர்ராஜ்(ஓட்டப்பிடாரம்), தங்கதுரை(நிலக்கோட்டை),

மேலும்...

 சசிகலா நீக்கம் வலிமையான நடவடிக்கை - நடிகர் கமல்ஹாசன்
பிரபல இணையதளம் ஒன்றிற்கு  அளித்துள்ள சிறப்பு பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் கூறி இருப்பதாவது:-சமீபத்தில் கேரள முதல்வரை சந்தித்தேன். அதற்காக, நான் கம்யூனிஸ்டு கட்சியில் சேரப் போவதாக கூறினர். நான் பல்வேறு கட்சி தலைவர்களுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்து இருக்கிறேன். ஆனால்

மேலும்...

 தொழிலாளி மகள் டாக்டராகக் கூடாதா - அனிதாவின் தந்தை சண்முகம் கதறல்
தொழிலாளியின் மகள் டாக்டராகக் கூடாதா எனக் கேட்டு கண்ணீர் விட்டுக் கதறிய அனிதாவின் தந்தை சண்முகத்தின் கதறல் அனைவரையுமே கலங்கச் செய்தது.மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு சிறுவயதிலிருந்தே அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு வந்த அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in