189 கொலைகளுடன் தொடர்புடைய சைக்கோ பெண் கைது

189 கொலைகளுடன் தொடர்புடைய சைக்கோ பெண் கைது

அமெரிக்காவில் சைக்கோ பெண் ஒருவரை 189 கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். 39 வயதான அமெரிக்க பெண் லாரெட்டா ஜோன்ஸ், நாள்பட்ட ஹார்மோன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

1993 முதல் 2017 இடையே கலிபோர்னியா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இடம்பெற்ற 189 கொலைகளுடன் லாரெட்டா ஜோன்ஸிற்கு தொடர்புள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

ஒரு பெரிய நிதி நிறுவனத்திற்காக கடன் சேகரிப்பாளராக பணியாற்றிய ஜோன்ஸ், கலிபோர்னியாவிலும், அமெரிக்கா எல்லை மாநிலங்களிலும் மற்றும் வடக்கு மெக்ஸிக்கோவிற்கும் பயணம் மேற்கொண்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கலிபோர்னியாவில் இடம்பெற்ற 137 கொலைகள், ஒரேகானில் 16, அரிசோனாவில் 11, நெவாடாவில் 8, மெக்சிக்கோவில் 17 என அனைத்து கொலைகளுடன் ஜோன்ஸிற்கு தொடர்புடையதை போலீசார் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது ஒரு அரிதான நோய் என குறிப்பிட்டுள்ள கலிபோர்னியா மனநல நிறுவன மருத்துவர் அலோன்சோ பிராங்கோ கோன்சலஸ், ஜோன்ஸ் வாழ்நாள் முழுவதும் மனநல மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். எனினும், தற்போது வரை ஜோன்ஸிற்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்
https://goo.gl/GkQL6f


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே