tamilkurinji logo


 

2வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்- அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்,‘Lorries-strike-on-2nd-day.tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

‘Lorries-strike-on-2nd-day.tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,,




செய்திகள் >>> தமிழகம்

2வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்- அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

First Published : Saturday , 21st July 2018 01:28:47 PM
Last Updated : Saturday , 21st July 2018 01:28:47 PM


2வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்- அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்,‘Lorries-strike-on-2nd-day.tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும், 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய சரக்கு போக்குவரத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 4 நாட்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. பின்னர் மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்காத அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் இதே கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி தலைமையில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது லாரி உரிமையாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு தரப்பில் 3 மாதம் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை லாரி உரிமையாளர்கள் ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே திட்டமிட்டபடி நாடு முழுவதும் நேற்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும் என்று தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகப்பா அறிவித்தார்.

அதன்படி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசில் அங்கம்வகிக்கும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். இந்த போராட்டம் 2-வது நாளாக நீடிக்கிறது.

தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளன. வடமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டு, பருப்பு வகைகள் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் கொண்டுவருவது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும். போராட்டம் நீடிப்பதால், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


2வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்- அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்,‘Lorries-strike-on-2nd-day.tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema  2வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்- அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்,‘Lorries-strike-on-2nd-day.tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema  2வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்- அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்,‘Lorries-strike-on-2nd-day.tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,

மேலும்...

 முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in