2 நாள் இலங்கை பயணம்: பிரதமர் மோடி கொழும்பு சென்றார்

2 நாள் இலங்கை பயணம்: பிரதமர் மோடி கொழும்பு சென்றார்
2 நாள் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ள பிரமதர் மோடி, இலங்கை அதிபர் சிறிசேனாவை சந்தித்து பேசினார். இலங்கையில் புத்த மத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று கொழும்பு சென்றடைந்த மோடி, இலங்கை பிரதமர் ரணில்விக்ரம சிங்கேவை சந்தித்து பேசினார். இரு நாடுகளுன் நல்லுரவை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை அமைந்ததாக தெரிவித்துள்ளார். எனினும் ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகவில்லை. இதையடுத்து மைத்ரேயபால் சிறிசேனாவையும் சந்தித்து பேசினார். சந்திப்பு குறித்து இலங்கை அதிபர் சிறிசேனா, டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். காலையில் 120 ஆண்டுகள் பழமையான கங்கராமையா கோவிலின் அங்கமாக திகழும் சீமமாளாக புத்த கோவிலுக்கு மோடி சென்றுள்ளார்.

கோவிலின் கருவறைக்குள் சென்ற அவர், அங்கு விளக்கு ஏற்றி வழிபட்டார். இலங்கையின் பாரம்பரிய முறைப்படி நடனமாடி அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். கண்டியில் இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த தமிழ் மக்களுடன் மோடி கலந்துரையாடவுள்ளார். இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள திக்கோயா மருத்துவமனையையும் அவர் திறந்து வைக்கிறார். இலங்கையில் தொடங்கும் சர்வதேச புத்த பூர்ணிமா விழா, வரும் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மோடி கலந்துகொள்கிறார்.
https://goo.gl/p2Sgb6


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே