20 ஓவர் உலகக்கோப்பை இந்தியா வெற்றி

20 ஓவர் உலகக்கோப்பை இந்தியா வெற்றி

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டித்தொடரின் லீக் ஆட்டத்தில் இன்று பரம போட்டியாளர்களான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. டாஸ் ஜெயித்த இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி பாகிஸ்தானின் இன்னிங்சை தொடங்கிய கமரன் அக்மல்  8 ரன்களில் ரன் அவுட்டானார். ஹபீஸ் 15 ரன்களில் அவுட்டானார். பாகிஸ்தானின்  விக்கெட்டுகள் அடுத்தடுத்த இடைவெளியில் விழுந்தன. முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக உமர் அக்மல் 33 ரன்கள் எடுத்தார்.

131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகார் தவானும் ரோகித் ஷர்மாவும் சிறப்பான தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர். எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கோலியும் ரெய்னாவும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

முடிவில் 9 பந்துகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. கோலி 36 ரன்களுடனும் ரெய்னா 35 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டித்தொடரின் லீக் ஆட்டத்தில் இன்று பரம போட்டியாளர்களான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. டாஸ் ஜெயித்த இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி பாகிஸ்தானின் இன்னிங்சை தொடங்கிய கமரன் அக்மல்  8 ரன்களில் ரன் அவுட்டானார். ஹபீஸ் 15 ரன்களில் அவுட்டானார். பாகிஸ்தானின்  விக்கெட்டுகள் அடுத்தடுத்த இடைவெளியில் விழுந்தன. முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக உமர் அக்மல் 33 ரன்கள் எடுத்தார்.

131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகார் தவானும் ரோகித் ஷர்மாவும் சிறப்பான தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர். எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கோலியும் ரெய்னாவும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

முடிவில் 9 பந்துகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. கோலி 36 ரன்களுடனும் ரெய்னா 35 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்
https://goo.gl/hjQRmB






15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்