tamilkurinji logo


 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் சுருண்டது பாகிஸ்தான்,cricket news tamil sports news

cricket,news,tamil,sports,news




செய்திகள் >>> விளையாட்டு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் சுருண்டது பாகிஸ்தான்

First Published : Tuesday , 1st April 2014 10:58:11 PM
Last Updated : Tuesday , 1st April 2014 11:02:14 PM


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் சுருண்டது பாகிஸ்தான்,cricket news tamil sports news

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் சுருண்டது பாகிஸ்தான்
உலககோப்பை டி20 தொடரின் சூப்பர் 10 சுற்று கடைசி லீக் ஆட்டத்தில், பாகிஸ்தானை 84 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அரை இறுதிக்கு முன்னேறியது. மிர்பூர், தேசிய ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட் செய்தது. கிறிஸ் கேல் 5, வேய்ன் ஸ்மித் 8 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினர். சிம்மன்ஸ் 20 ரன் எடுத்து அப்ரிடி சுழலில் கிளீன் போல்டானார். சாமுவேல்ஸ் 31 ரன் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆனார். ராம்தின் 5 ரன் எடுத்தார்.

இந்த நிலையில், வேய்ன் பிராவோ - கேப்டன் சம்மி ஜோடி 6வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தது. இருவரும் இணைந்து 32 பந்தில் 71 ரன் சேர்த்து மிரட்டினர். பிராவோ 46 ரன் எடுத்து (26 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) ரன் அவுட் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன் குவித்தது. சம்மி 42 ரன் (20 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ரஸ்ஸல் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 17.5 ஓவரில் 82 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

ஹபீஸ் 19, மக்சூட், அப்ரிடி தலா 18, தன்வீர் 14 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். பத்ரீ, சுனில் தலா 3, சான்டோகி, ரஸ்ஸல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 2வது பிரிவில் 6 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்த வெஸ்ட் இண்டீஸ், அரை இறுதியில் நாளை இலங்கையை எதிர்கொள்கிறது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் சுருண்டது பாகிஸ்தான்,cricket news tamil sports news 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் சுருண்டது பாகிஸ்தான்,cricket news tamil sports news 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் சுருண்டது பாகிஸ்தான்,cricket news tamil sports news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்

மேலும்...

 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள

மேலும்...

 மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர்

மேலும்...

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது.  10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in