tamilkurinji logo


 

20 ஓவர் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது இந்தியா,
செய்திகள் >>> விளையாட்டு

20 ஓவர் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது இந்தியா

First Published : Sunday , 30th March 2014 09:23:59 PM
Last Updated : Sunday , 30th March 2014 09:23:59 PM


20 ஓவர் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது இந்தியா,

 20 ஒவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு மிர்புரில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் (குரூப்2) மோதின. இந்தியா ஏற்கனவே அரைஇறுதி சுற்றை எட்டிய நிலையில், ஆஸ்திரேலியா அந்த வாய்ப்பை பறிகொடுத்து விட்டபடியால் இது ‘பயிற்சி’ ஆட்டமாகவே அமைந்தது.

இந்திய அணியில் ஷிகர் தவான், முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரஹானே, மொகித் ஷர்மா இடம் பெற்றனர். ஆஸ்திரேலிய அணியில் ஜேம்ஸ் பவுல்க்னெர் நீக்கப்பட்டு, கேமரூன் ஒயிட் சேர்க்கப்பட்டார்.

இந்த தொடரில் முதல் முறையாக இந்திய கேப்டன் டோனி  டாசை இழந்தார். டாசில் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார்.

ரஹானேவும், ரோகித் ஷர்மாவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆட வந்தனர். பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய ரோகித் ஷர்மாவின் பேட்டிங்குக்கு ஆயுசு வெறும் 4 பந்து தான். அடுத்து களம் இறங்கி அணியை ஓரளவு சரிவில் இருந்து மீட்ட விராட் கோலி 23 ரன்னிலும் (22 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரஹானே 19 ரன்னிலும் (16 பந்து, 2 பவுண்டரி) வெளியேறினர்.  சுரேஷ் ரெய்னா (6 ரன்) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியதால், இந்தியா 66 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை (11.3 ஓவர்) இழந்து தவிப்புக்குள்ளானது.

இதற்கு மத்தியில் யுவராஜ்சிங் தடுமாற்றத்துடன் அணியை தூக்கி நிறுத்த போராடிக் கொண்டிருந்தார். அவரும், கேப்டன் டோனியும் கைகோர்த்த பிறகு தான் மைதானத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் களை கட்டியது. சுழற்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் முயர்ஹெட்டின் ஒரே ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை யுவராஜ்சிங் தூக்கியடித்து அசத்தினார். டோனியும் ரசிகர்களை குஷிப்படுத்த தவறவில்லை. ஸ்டார்க்கின் பந்து வீச்சில் அவர் அடித்த ஒரு சிக்சர், எல்லைக்கோடு அருகே படம் பிடித்துக் கொண்டிருந்த கேமிராமேனை நோக்கி பதம் பார்க்க சீறிச் சென்றது. அதிர்ஷ்டவசமாக கேமிராவை நகர்த்திக் கொண்டு தன்னையும் பாதுகாத்துக் கொண்டார்.

தனது மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கவனமுடன் ஆடிய யுவராஜ்சிங், வாட்சனின் பந்து வீச்சில் மறுபடியும் ஒரு இமாலய சிக்சரை பறக்க விட்டு தனது 8–வது அரைசதத்தை கடந்தார்.

யுவி–டோனியின் மிரட்டலடியால் இந்திய அணி 170 ரன்களை தொடுவது போல் தெரிந்தது. ஆனால் கடைசி இரு ஓவர்களில் நமது பேட்ஸ்மேன்கள் சொதப்பி விட்டனர். கடைசி இரு ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே எடுத்ததுடன் 3 விக்கெட்டுகளும் விழுந்தது. இதில் டோனி 24 ரன்னிலும் (20 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்), யுவராஜ்சிங் 60 ரன்னிலும் (43 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட் ஆனதும் அடங்கும். 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மெதுவான தன்மை (ஸ்லோ) கொண்ட இந்த ஆடுகளத்தில் இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை மளமளவென தாரை வார்த்தனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த சுழல் மன்னன் அஸ்வின், எதிரணி வீரர்களை மிரள வைத்தார். அபாயகரமான பேட்ஸ்மேன் கிளைன் மேக்ஸ்வெல் (23 ரன், 12 பந்து, 3 சிக்சர்) அவரது பந்தை ‘ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்’ அடிக்க முயற்சித்து கிளீன் போல்டு ஆனது இதில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தொடக்கம் முதல் கடைசி வரை ஊசலாடிய ஆஸ்திரேலியா இறுதியில் 16.2 ஓவர்களில் 86 ரன்களில் முடங்கியது. இதனால் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் தொடர்ந்து 2–வது முறையாக ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். அஸ்வின் ஒரு இன்னிங்சில் 4 விக்கெட் எடுப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த உலக கோப்பையில் தோல்வியே சந்திக்காமல் ராஜநடை போட்டுக் கொண்டிருக்கும் இந்திய அணிக்கு இது 4–வது வெற்றியாகும். ஏற்கனவே பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளையும் தோற்கடித்து இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு இது 3–வது மரண அடியாகும்.

20 ஓவர் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது இந்தியா, 20 ஓவர் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது இந்தியா, 20 ஓவர் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது இந்தியா,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்

மேலும்...

 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள

மேலும்...

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது.  10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்

மேலும்...

 3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் இழந்ததுஇந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in