20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது இந்தியா

20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது இந்தியா
ஐசிசி 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில், இலங்கையை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டு முதல் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி கூடுதலாக ஐந்து புள்ளிகள் பெற்று 115 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா ஐந்து புள்ளிகள் குறைந்து 110 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு பின்தங்கியது.

பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்றொரு இந்திய வீரரான ரவிச்சந்திர அஸ்வின் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹால்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இலங்கையின் குசேல் பெரேராவும், தென் ஆப்பிரிக்காவின் டுமினியும் முதல் முறையாக முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளனர்.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாமுவேல் பத்ரி அணியின் சக வீரரான சுனில் நரேனை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ளார். 109 புள்ளிகளைப் பெற்று 855 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இவர், சகவீரரான சுனில் நரேனை விட 45 புள்ளிகள் கூடுதலாக பெற்றுள்ளார்.

தற்போது நடந்து வரும் உலகக் கோப்பையில் மொத்த பரிசுத் தொகை 3 மில்லியன் டாலராகும். கோப்பையை கைப்பற்றும் அணிக்கு 1.1 மில்லியன் டாலரும், இரண்டவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 5 லட்சத்து 50 ஆயிரம் டாலரும் பிரித்து வழங்கப்படும்.
https://goo.gl/XLFGFn






15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்