21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்

21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்
பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (ஆக.16) காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணா மேனன் பார்க் வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இருவரும் வாஜ்பாய் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இன்று காலை , வாஜ்பாய் உடலுக்கு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், மக்களவை சபாநாயகர் தம்பிதுரை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை 9-30 மணிக்கு வாஜ்பாய்  அங்கிருந்து,  அலங்கரிக்கப்பட்ட ராணுவ ஊர்தியில் டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 9-30 மணிக்கு புறபட்ட  ஊர்தி பாரதீய ஜனதா அலுவலகத்திற்கு 11.00 மணிக்கு வந்து சேர்ந்தது.  அங்கு  வாஜ்பாய் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அங்கு பிரதமர் மோடி, பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்  உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட  பாரதீய ஜனதா தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர் .

பாஜக தலைமை அலுவலகத்தில் உள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு, பூடான் மன்னர் ஜிக்மே கேஷர் நம்கேல் வாங்சுக் அஞ்சலி செலுத்தினார்.

அங்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும்,  இறுதி ஊர்வலத்திற்கான பணிகள் நடைபெற்றது. 1.45 மணிக்கு மேல்  வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

தேசிய கொடி போர்த்தப்பட்ட வாஜ்பாய் உடல், அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில், பாஜக அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக யமுனை நதி தீரத்தில் அமைந்துள்ள, ராஜ்காட்-விஜய்காட் பகுதிக்கு கிளம்பியது. எந்த கட்சிக்காக இடையறாது உழைத்தாரோ அந்த கட்சி அலுவலகத்தில் இருந்து பிரியாவிடை பெற்றார் வாஜ்பாய்.

பாஜக அலுவலகம் மற்றும், ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தலம் நடுவேயான தூரம், 4 கி.மீயாகும். இருப்பினும், வாஜ்பாய் உடல் செல்லும் வாகனத்தின் அருகே, பிரதமர் நரேந்திர மோடி நடந்தபடியே, சென்றார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் அவருடன் நடந்து சென்றார். தங்கள் தலைவர் வாஜ்பாய் மீது வைத்திருந்த அளப்பறிய மரியாதை காரணமாக, காரை தவிர்த்துவிட்டு, தொண்டர்களோடு, வாஜ்பாயுடன் மோடியும், அமித்ஷாவும் நடந்து சென்றனர்.

மாலை 4 மணியளவில், விஜய்காட்-ராஜ்காட் பகுதியில் பெரிய தலைவர்கள் இறுதி சடங்கு செய்ய உருவாக்கப்பட்டுள்ள ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தலம் பகுதிக்கு வாஜ்பாய் உடல் வந்து சேர்ந்தது. வாஜ்பாய்க்கு இறுதி சடங்குகள் தொடங்கின.  பூடான் நாட்டு மன்னர் உள்ளிட்ட வெளிநாட்டு முக்கிய தலைவர்கள்  இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, அவரது இறுதிச்சடங்கில் கண்ணீர்விட்டு அழுதார். வாஜ்பாய் உடலை பார்த்து பிரதமர் மோடி கண்ணீர் விட்டார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி
தொடர்ந்து  பிரதமர் மோடி, ராகுல்காந்தி, பூடான் மன்னர் ஜிக்மே வாங்க்சு,  பூடான் மன்னர் ஜிக்மே கேஷர் நம்கேல்,ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அமித் கர்சாய் . வங்கதேச அமைச்சர் அபுல் ஹாசன் மகமூத் அலி, இலங்கை அமைச்சர் லட்சுமண் கிரியல்லா  அத்வானி, அமித்ஷா , முன்னள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி, அவரது பேத்தி  நிகர்க்காவிடம்  வழங்கப்பட்டது.  உறவினர்கள்  இறுதிச்சடங்கு நடத்தினர். வேத மந்திரங்கள் ஓதி அவருக்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டது.

பின்னர் தகன மேடையில் அவரது உடல் வைக்கப்பட்டது.   முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யபட்டது.  முன்னதாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.
https://goo.gl/dTCLUc


02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை

18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை