3 ஆண்டுகள் தீவிரவாதிகளிடம் பாலியல் அடிமையாக இருந்து தப்பிய இளம்பெண்

3 ஆண்டுகள்  தீவிரவாதிகளிடம்  பாலியல் அடிமையாக இருந்து தப்பிய இளம்பெண்
தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் அங்கிருந்து தப்பி தற்போது வழக்கறிஞராக பணியாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஜெர்மனி நாட்டில் புகலிடம் கோரி சென்றுள்ள யாஸிதி இனத்தை சேர்ந்த தலால் (20) என்ற இளம்பெண் தான் இம்முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.


கடந்த 2014-ம் ஆண்டு ஈராக் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தபோது ஐ.எஸ் தீவிரவாதிகளால் இப்பெண் கடத்தப்பட்டார்.பின்னர் 3 ஆண்டுகளாக பாலியல் அடிமையாகவே அவரை தீவிரவாதிகள் நடத்தி வந்துள்ளனர். இந்த 3 ஆண்டுகளில் இளம்பெண் 9 தீவிரவாதிகளால் கற்பழிக்கப்பட்டு கர்ப்பம் அடைந்துள்ளார்.


எனினும், கடுமையான போராட்டங்களை எதிர்க்கொண்டு அப்பெண் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளார்.


சிறுவயது முதல் பெண்களின் உரிமைக்காக போராடும் வழக்கறிஞராக பணியாற்ற வேண்டும் என்ற கனவு கொண்ட அவர் ஜெர்மனி நாட்டில் புகலிடம் கோரி சென்றுள்ளார்.

தற்போது ஜெர்மனியில் உள்ள படேன் நகரில் வசித்து வரும் அவருக்கு அங்குள்ள மனித உரிமைகள் அமைப்புகள் உதவி வருகின்றன.

பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து அவர்களின் பாதுகாப்பிற்காக விரைவில் வழக்கறிஞராக பணியில் அமர்வேன் என தலால்  நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

https://goo.gl/dgBa4U


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே