tamilkurinji logo
 

3 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற போலீஸ் ஏட்டு கைது,IRB policeman, who killed 3, arrested

IRB,policeman,,who,killed,3,,arrestedசெய்திகள் >>> இந்தியா

3 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற போலீஸ் ஏட்டு கைது

First Published : Wednesday , 17th January 2018 08:48:42 PM
Last Updated : Wednesday , 17th January 2018 08:48:42 PM


3 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற போலீஸ் ஏட்டு கைது,IRB policeman, who killed 3, arrested

 புனே அருகே போலீஸ் ஏட்டு 3 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் தாவந்தில் மாநில ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர், சஞ்சய் ஷிண்டே. இவர் நேற்று தாவந்தில் உள்ள நகர் மோரி பகுதியில் திடீரென ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.


இதில், அந்த நபரை துப்பாக்கி குண்டு துளைத்தது. இதனால், நிலைகுலைந்த அவர், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துபோனார்.

இதைத்தொடர்ந்து, போரவாகி பகுதிக்கு சென்ற போலீஸ் ஏட்டு சஞ்சய் ஷிண்டே, அங்கு மேலும் இருவரை கண்மூடித்தனமாக சுட்டார். இதனால், அவர்களும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தனர்.

மக்கள் கூட்டம் அதிகமான இடங்களில், அடுத்தடுத்து 15 நிமிட இடைவெளியில் அரங்கேறிய இந்த சம்பவத்தால், பொதுமக்கள் பதை பதைப்பில் ஆழ்ந்தனர்.

இதையடுத்து, அப்பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த சஞ்சய் ஷிண்டே, கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.

தகவல் அறிந்து வந்த போலீசார், பலியான 3 பேரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அவர்களது பெயர் கோபால் ஷிண்டே, பிரசாந்த் பவார் மற்றும் அனில் ஜாதவ் என்பது தெரியவந்தது.

இதனிடையே, வீட்டுக்குள் பதுங்கி இருந்த சஞ்சய் ஷிண்டேயை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

விசாரணையில், கோபால் ஷிண்டே அவருக்கு மிகவும் நெருங்கிய உறவினர் என்பதும், முன்விரோதம் காரணமாக இந்த பயங்கர சம்பவத்தை அவர் அரங்கேற்றியதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


3 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற போலீஸ் ஏட்டு கைது,IRB policeman, who killed 3, arrested 3 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற போலீஸ் ஏட்டு கைது,IRB policeman, who killed 3, arrested 3 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற போலீஸ் ஏட்டு கைது,IRB policeman, who killed 3, arrested
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 உலுக்கும் நிபா வைரஸ்: கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் உயிரிழப்பு
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவியுள்ளதை புனேயில் உள்ள தேசிய வைரலாஜி சோதனைக்கூடும் உறுதி செய்துள்ளது. நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளதால் மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.கேரளாவில் கடந்த சில தினங்களாக நிபா வைரஸ் பரவி

மேலும்...

 கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அச்சம், உயிரிழந்தவர்களின் சடலம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அச்சம் அதிகரித்து உள்ளது, வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் சடலம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக கடந்த சில நாட்களில் 10 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் இரண்டு பேருக்கு நிபா

மேலும்...

 என்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்
சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பலத்தைக் குலைத்து அடித்து நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிங் கிறிஸ் கெய்ல் நேற்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய ஆட்டம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.கிறிஸ் கெய்லை ஏலம்

மேலும்...

 காதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்
திருமணம் செய்வதற்காக ரூ. 6.74 லட்சத்தைத் திருடிய இளைஞரைத் திருமணம் செய்யக் காதலி மறுத்ததால், ஆத்திரத்தில் அந்த இளைஞர் ரூ. 5லட்சத்தை தீயிட்டு எரித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜிதேந்திரகோயல்(22வயது). இவர் ஒரு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in