tamilkurinji logo
 

4-வது திருமணம் செய்ய முயன்ற ராணுவ வீரர் கைது,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

4-வது திருமணம் செய்ய முயன்ற ராணுவ வீரர் கைது

First Published : Tuesday , 24th October 2017 11:52:47 AM
Last Updated : Tuesday , 24th October 2017 11:52:47 AM


4-வது திருமணம் செய்ய முயன்ற ராணுவ வீரர் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news



3 பெண்களை ஏமாற்றிவிட்டு 4-வது திருமணம் செய்ய முயன்ற ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தாலிகட்டும் நேரத்தில் முதல் மனைவி போலீசில் சிக்க வைத்தார்.

மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகா லக்கி குப்பே கிராமத்தை சேர்ந்தவர் சிவமஞ்சு (வயது 42). ராணுவ வீரரான இவர் பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2007-ம் ஆண்டு வரலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.


வரலட்சுமி பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்த சமயத்தில் சிவமஞ்சு 2-வதாக கனகாலு கிராமத்தை சேர்ந்த ஆஷா ராணி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதை அறிந்த வரலட்சுமி சிவமஞ்சுவுடன் தகராறு செய்து பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் ஆஷா ராணியுடன் திருமணம் நடந்த சில மாதங்களிலேயே சிவமஞ்சு 3-வது திருமணமும் செய்துகொண்டார். இந்த நிலையில் 4-வதாக மைசூரு கோகுலம் பகுதியை சேர்ந்த பால் வியாபாரியின் மகளை திருமணம் செய்ய சிவமஞ்சு முடிவு செய்தார். இவர்களது திருமணம் நேற்று முன்தினம் மைசூரு விஜயநகரில் உள்ள யோகா நரசிம்மசாமி கோவில் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்தையொட்டி கோவில் மண்டபத்திலேயே உற்றார், உறவினர்கள் சாப்பிட மதிய விருந்து தயாராகிக் கொண்டிருந்தது.

மேலும் தாலிக்கட்டும் நேரம் நெருங்கி வந்தது. அந்த சமயத்தில் ஒரு பெண் கோவில் மண்டபத்துக்கு வந்தார். அவர், அங்கு கூடியிருந்தவர்களிடம் நான் தான் சிவமஞ்சுவின் முதல் மனைவி என்றும், தனது பெயர் வரலட்சுமி என்றும் கூறினார். மேலும் அவர், சிவமஞ்சு தன்னை உள்பட 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டதாகவும், தற்போது 4-வது திருமணம் செய்ய சிவமஞ்சு முயன்று இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதை கேட்டறிந்த மணமகள் வீட்டார் உடனே திருமணத்தை நிறுத்தினர். மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் விஜயநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், வரலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், சிவமஞ்சு என்னையும், மேலும் 2 பெண்களையும் ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு தற்போது 4-வது திருமணம் செய்ய இருப்பதாக கூறினார்.

இதைதொடர்ந்து சிவமஞ்சுவை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே திருமணம் நின்றதால், மணமகள் வீட்டாரும், சிவமஞ்சுவின் உறவினர்களும் அங்கிருந்து சோகத்துடன் புறப்பட முயன்றனர். அவர்களை கோவில் நிர்வாகத்தினர் சமாதானப்படுத்தி திருமணத்துக்காக தயாரான உணவை அனைவருக்கும் பரிமாறினர்.

இதுதொடர்பாக விஜயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான சிவமஞ்சுவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தாலி கட்டும் நேரத்தில் 4-வது திருமணத்தை தடுத்துநிறுத்தி ராணுவ வீரரை முதல் மனைவி போலீசில் சிக்க வைத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4-வது திருமணம் செய்ய முயன்ற ராணுவ வீரர் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
4-வது திருமணம் செய்ய முயன்ற ராணுவ வீரர் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
4-வது திருமணம் செய்ய முயன்ற ராணுவ வீரர் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 3வது திருமணம் செய்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்
முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக் ஈ இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான் 3வது முறையாக திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான்.  கடந்த 1992ம் ஆண்டு உலக கோப்பையை இவரது

மேலும்...

 காதல் திருமணம் செய்த இளம் பெண் வங்காளத்தில் மர்மமான முறையில் மரணம்
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மகள் பூர்ணாதேவி (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த ரிமுஷேக்

மேலும்...

 லஞ்சம் வாங்கிய பணத்தை விழுங்கிய பெண் போலீஸ் அதிகாரி
 மகாராஷ்ட்ராவில் கோலாபூரின் சந்த்காத் காவல் நிலையத்தில் லஞ்ச பணத்தை பெண் போலீஸ் அதிகாரி விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.லஞ்ச ஒழிப்பு துறையிடம் இருந்து தப்பிக்க தான் வாங்கிய 300 ரூபாய் லஞ்ச பணத்தை வாயில் விழுங்க முயற்சி செய்த பெண்

மேலும்...

 ரூ.11,600 கோடி மோசடி: யார் இந்த நிரவ் மோடி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடியும், ரூ.11 ஆயிரத்து 600 கோடி சட்டவிரோத பரிவர்த்தனையும் செய்த வகையில் இன்று நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் நபராக வைர வியாபாரி நிரவ் மோடி(வயது47) மாறியுள்ளார்.ரூ.11 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உடையவர்,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in