tamilkurinji logo


 

7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9 முதல் ஜுன் 3 வரை நடக்கிறது,India or SA? IPL 7 to be held from April 9 to June 3

India,or,SA?,IPL,7,to,be,held,from,April,9,to,June,3




செய்திகள் >>> விளையாட்டு

7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9 முதல் ஜுன் 3 வரை நடக்கிறது

First Published : Friday , 14th February 2014 12:15:40 AM
Last Updated : Friday , 14th February 2014 12:15:40 AM


7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9 முதல் ஜுன் 3 வரை நடக்கிறது,India or SA? IPL 7 to be held from April 9 to June 3


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் தொடங்கி மே அல்லது ஜுன் முதல் வாரம் முடிவடையும். இந்த வருடம் ஐ.பி.எல். சீசன்-7 நடைபெறுகிறது.

இந்திய பாராளுமன்றத்திற்கு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் பாதுகாப்பு கருதி ஐ.பி.எல். போட்டி தள்ளிப்போகலாம் அல்லது தேர்தலுக்கு முன்னரே நடத்தப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் ஐ.பி.எல். நிர்வாகம், ஐ.பி.எல். சீசன்-7 குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும் என்றும் தேர்தலுக்காக தேதி மாற்றப்படாது என்றும் கூறியது. ஆனால், இந்தியாவை வெளியில் நடத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் நேற்று தொடங்கி இன்று வரை நடைபெற்றது. அதன்பின் ஐ.பி.எல். சேர்மன் பிஸ்வால் கூறியதாவது:-

ஐ.பி.எல். சீசன்-7 போட்டிக் குறித்து கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தினோம். இறுதியில் ஏப்ரல் 9-ந் தேதி தொடங்கி ஜுன் 3-ந்தேதி வரை நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம். போட்டியை இந்தியாவில் நடத்துவதா அல்லது தென் ஆப்பிரிக்காவில் நடத்துவதா என்பது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் பேசிய பின் அறிவிப்போம்.

நாங்கள் பெரும்பாலான போட்டிகளை இந்தியாவில் நடத்த விரும்புகிறோம். பாதுகாப்பு அமைச்சகத்தின் பதில் எங்களுக்கு சாதகமாக இருந்தால் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் நடத்துவோம். பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவில் நடத்த சம்மதம் தெரிவிக்கவில்லையென்றால் எங்களது அடுத்த திட்டம் தென் ஆப்பிரிக்காதான்.

மேலும் இரண்டு இடங்களை தேர்வு செய்துள்ளோம். அதை இப்போது தெரிவிக்க இயலாது. மத்திய அமைச்சகத்தின் பதிலுக்குப்பின் போட்டிக்கான இடம், அட்டவணை அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு முன் 2009-ம் ஆண்டு இந்திய தேர்தல் நடந்தபோது, ஐ.பி.எல். சீசன்-2 தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9 முதல் ஜுன் 3 வரை நடக்கிறது,India or SA? IPL 7 to be held from April 9 to June 3
7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9 முதல் ஜுன் 3 வரை நடக்கிறது,India or SA? IPL 7 to be held from April 9 to June 3
7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9 முதல் ஜுன் 3 வரை நடக்கிறது,India or SA? IPL 7 to be held from April 9 to June 3
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்

மேலும்...

 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள

மேலும்...

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது.  10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்

மேலும்...

 3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் இழந்ததுஇந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in