7 வயது சிறுவனின் உடலில் வெடிகுண்டு கட்டிவிட்ட தீவிரவாதிகள்

7 வயது சிறுவனின் உடலில் வெடிகுண்டு கட்டிவிட்ட தீவிரவாதிகள்
ஈராக் நாட்டில் வசித்து வரும் 7 வயது சிறுவனின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராக்கில் உள்ள மொசூல் நகரில்  ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த மார்ச் 18-ம் திகதி அன்று சந்தேகத்திற்குரிய 7 வயது சிறுவனை ராணுவ வீரர்கள் பிடித்துள்ளனர்.

கால்பந்து வீரர்கள் அணியும் உடையில் இருந்த சிறுவனிடம் தவறு இருப்பதை உணர்ந்த ஓர் ராணுவ வீரர் அவனது உடைகளை நீக்கியுள்ளார்.அப்போது, சிறுவனின் உடலை சுற்றி வெடிகுண்டு ஒன்று கட்டப்பட்டிருந்ததை கண்டு ராணுவ வீரர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர், சிறுவனுக்கு தைரியம் கொடுத்த வீரர் அவனது உடைகளை முழுவதுமாக நீக்கிவிட்டு வெடிகுண்டை செயலிழக்க முயன்றுள்ளார்.


வெடிகுண்டில் இணைக்கப்பட்டிருந்த கம்பிகளை துண்டித்துவிட்டு அவற்றை முழுமையாக நீக்கி சிறுவனை காப்பாற்றியுள்ளார்.

சிறுவனிடம் விசாரணை செய்தபோது ஐ.எஸ் தீவிரவாதிகள் அவனை கடத்தி தாக்குதல் நடத்த தயார்ப்படுத்தியதும் தெரியவந்துள்ளது.சிறுவனை மீட்ட ராணுவ வீரர்கள் அவனது குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளனர்.
https://goo.gl/kJKhDN


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே