73 வயது பெண்ணை திருமணம் செய்த 15 வயது சிறுவன்

73 வயது பெண்ணை திருமணம்   செய்த  15 வயது சிறுவன்
இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் காராங் என்டா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் செலாமெட் ரியாடி (15).

சமீபத்தில் இவன் மலேரியா காய்ச்சலால் கடும் அவதிப்பட்டான். அப்போது அவனை அண்டை வீட்டில் வசிக்கும் 75 வயது மூதாட்டி ரொகாயா பின்டி கியாகஸ் முகமது ஜாக்பார் என்பவர் நல்ல முறையில் கவனித்துக் கொண்டார்.

இவரது அன்பு செலாமெட் ரியாடியை கவர்ந்தது. அதுவே நாளடைவில் காதலாக மாறியது.

அதை தொடர்ந்து சிறுவன் செலாமெட் மூதாட்டி ரொகாயாவை திருமணம் செய்ய முடிவு செய்து அதற்கான ஏற்பாட்டை செய்தான். அதை அறிந்த அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றனர்.

தங்களது திருமணத்தை நிறுத்தினால் தற்கொலை செய்வோம் என மிரட்டினர். அதையடுத்து இவர்கள் திருமணம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவர்களின் சொந்த கிராமமான காராங் என்டாக்கில் நடந்தது.

அதில் குடும்பத்தினர் உள்பட கிராம மக்கள் வந்து வாழ்த்தினர். சிறுவனை திருமணம் செய்த மூதாட்டி எராகியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார்.

சிறுவன் செலாமெட்டின் தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே, அவனது தாய் வேறு ஒருவரை மறுமணம் செய்து கொண்டார். இதனால் அவனுக்கு தாயின் அன்பும், பாசமும் கிடைக்கவில்லை.

அன்புக்கு ஏங்கிய அவன் மலேரியா காய்ச்சலில் விழுந்த போது ரொகியாவின், அன்புக்கு அடிமையாகி அவரையே திருமணம் செய்து கொண்டான்.


https://goo.gl/atzriT


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே