8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்

8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும்  கொலையாளி வாக்குமூலம்
மத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று தெரிவித்துள்ளார்.

2005-06 முதல் நடந்த லாரி ஓட்டுநர்கள் கொலை, பிறகு கொள்ளை, பயங்கரத் திருட்டு ஆகியவற்றில் பிரதான குற்றவாளி ஆதேஷ் கம்ரா. இவர் தையல்காரராக இருந்து சீரியல் கில்லரானவர்.

இவரது மாமா அசோக் கம்ரா ஒரு பயங்கரக் கொலையாளி, இவர் குறைந்தது 100பேர்களையாவது கொலை செய்திருப்பார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இவருடன் சேர்ந்துதான் ஆதேஷ் கம்ரா கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டார்.

2007ல் முதன் முதலாக கொள்ளைக் கூட்டத்தில் சேர்ந்து லாரி ஒன்றை முற்றிலும் கொள்ளை அடித்தனர். ஆனால் அப்போது ஓட்டுநரைக் கொலை செய்யவில்லை, காரணம் குற்ற உலகிற்கு ஆதேஷ் அப்போது புதுமுகம்.

அதன் பிறகு சினிமா போல் இவர் கொள்ளைக் கூட்டத்தில் பெரிய ஆளானார். முதல் திருட்டை நடத்திய போது எந்த ஒரு சாட்சியமும் இருக்கக் கூடாது, போலீஸ் நம்மை கண்டுபிடிக்கவே கூடாது என்று நினைத்த ஆதேஷ் கம்ரா முதல் கொள்ளையில் லாரி ஓட்டுநரைக் கொன்றார், பிறகு தொடர்ச்சியாக லாரிகளைக் கொள்ளை அடிக்கும் போதெல்லாம் ஓட்டுநர்களைக் கொலை செய்து மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறினார்.
செப்.8ம் தேதி இவரை போலீஸில் காவலில் எடுத்தது. 2007 முதல் 2018 வரை நெடுஞ்சாலைகளில் கொலை,கொள்ளைகளில் ஈடுபட்டார். இவரை சாதாரண திருடன் என்றே முதலில் கருதினர் கடைசியில் லாரி ஓட்டுநர், க்ளீனர் பலரைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்

இந்நிலயில் தந்தையின் அன்பின்மை, கொடூரம் ஆகியவையே தான் இப்படி ஆனதற்குக் காரணம் என்கிறார் ஆதேஷ், “என் மீது யாரும் அக்கறைக் காட்டவிலை. நான் என்னுள் ஆழ்ந்து போனேன், என்னுள் கோபக்கனல் தெறித்து எழத் தொடங்கியது. ஆனால் இது என்னை இவ்வளவு வன்முறையாளனாக மாற்றும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்றார்.

போலீஸ் தரப்பில் இவர் தந்தைப் பற்றி கூறும்போது, ஆதேஷ் கம்ராவின் தந்தை குலாப் கம்ரா, இவர் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர், வீட்டிலும் மிலிட்டரி டிசிப்ளின் என்ற ராணுவ ஒழுக்கம்தான். குழந்தைப் பருவத்திலிருந்தே ஆதேஷை அவர் கடுமையாக நடத்தியுள்ளார். பிரம்படி, தூக்கி வீசுவது, வீட்டை விட்டு வெளியே துரத்துவது என்று அவர் சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் கொடூரமாக நடந்து கொண்டுள்ளார். இந்த குழந்தைப் பருவ கொடூரங்கள் இவர் மனதில் ஆழமாகப் பதிய இந்த வன்முறைகளை மீண்டும் மீண்டும் தன் மனதில் எண்ணியெண்ணிப் பார்த்து கொலை மனத்தை வளர்த்துக் கொண்டுள்ளார் கம்ரா. மேலும் கொலைகள் குறித்து எந்த ஒரு வருத்தமும் கம்ராவுக்கு இல்லை. இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.https://goo.gl/goYN3Y


02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை

18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை