tamilkurinji logo


 

8 வாலிபர்களை காதலில் வீழ்த்திய இளம்பெண் அவரது தாய் தம்பி கைது,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news
செய்திகள் >>> தமிழகம்

8 வாலிபர்களை காதலில் வீழ்த்திய இளம்பெண் அவரது தாய் தம்பி கைது

First Published : Friday , 12th January 2018 08:50:20 PM
Last Updated : Friday , 12th January 2018 08:50:20 PM


8 வாலிபர்களை காதலில் வீழ்த்திய இளம்பெண் அவரது தாய் தம்பி கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

திருமண ஆசை காட்டி என்ஜினீயர்கள், பணக்கார வாலிபர்களை மயக்கி கோடிக் கணக்கில் மோசடி செய்த கோவையை சேர்ந்த சுருதி(வயது 21) என்ற இளம் பெண்ணை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.திருமண ஆசை காட்டி என்ஜினீயர்கள், பணக்கார வாலிபர்களை மயக்கி கோடிக் கணக்கில் மோசடி செய்த கோவையை சேர்ந்த சுருதி(வயது 21) என்ற இளம் பெண்ணை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இவரது மோசடிக்கு தாய் சித்ரா(47), இவரது 2-வது கணவர் பிரசன்னா வெங்கடேஷ்(37), தம்பி சுபாஷ்(19) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

சுருதி உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர்.

சுருதி ஆடி போனால் ஆவணி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை.


சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போனதால் ஏமாற்றமடைந்த சுருதி தனது தாயுடன் சேர்ந்து பணக்கார வாலிபர்களை வலையில் வீழ்த்தி கோடிக்கணக்கில் மோசடி செய்து ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார்.

நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டிய சுருதி கைதியாக மாறியதன் பின்னணி மற்றும் அவரது மோசடி லீலைகள் குறித்து போலீசார் கூறியதாவது:-

சுருதியின் சொந்த ஊர் கடலூர். இவரது தந்தை வியாபாரம் செய்து வந்தார். புதுச்சேரியில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்த இவர் ஆங்கில பேச்சில் அசத்துவார். திடீரென இவரது தந்தை விபத்தில் இறந்து விட்டார். அதன்பிறகு இவர்களது வாழ்க்கை தலை கீழாக மாறியது.

இதுவரை வாழ்ந்த ஆடம்பர வாழ்க்கை தடைபட்டதும் சுருதியின் தாயார் சித்ரா திருமண தகவல் மையம் நடத்த தொடங்கினார். அப்போது தான் திருமண புரோக்கரான பிரசன்னாவின் அறிமுகம் கிடைத்தது.

அவர் இணைய தளத்தில் திருமண வரன் தேடி விண்ணப்பிக்கும் பணக்கார வாலிபர்கள், என்ஜினீயர்கள் குறித்து சித்ராவுக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் மோசடி செய்தால் போலீசில் புகார் கொடுக்க மாட்டார்கள், நாம் மாட்டிக்கொள்ள மாட்டோம் என கூறி அதற்கான திட்டத்தையும் வகுத்து கொடுத்துள்ளார்.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட சுருதி, இந்த திட்டத்துக்கு சம்மதித்து தனது புகைப்படங்களை பணக்கார வாலிபர்களுக்கு அனுப்பி உள்ளார்.

சினிமா நடிகை போல தோற்றமளிக்கும் சுருதியின் அழகில் மயங்கி வாலிபர்கள் தொடர்பு கொண்டதும் அவர்களுடன் வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் சுருதி நட்பை வளர்ப்பார். அப்போது தனது கவர்ச்சி படங்களை அவர்களுக்கு அனுப்பி மயக்குவார்.

திருமணம் செய்தால் சுருதியை தான் திருமணம் செய்வேன் என்ற முடிவுக்கு வாலிபர்கள் வரும் போது, தனது தாய்க்கு மூளையில் கட்டி உள்ளது, ஆபரேசனுக்கு பணம் தேவைப்படுகிறது என கூறி லட்சக்கணக்கில் பணம் கறப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இதற்காக உண்மையிலேயே தனது தாய் சித்ராவுக்கு மூளையில் கட்டி இருப்பது போன்று மருத்துவ ஆவணங்களையும் தயார் செய்து வைத்துள்ளார்.

வெளிநாட்டு டாக்டர்களிடம் தனது தாய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என கூறி, தனது வலையில் வீழ்ந்தவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை கறந்துள்ளார்.

அந்த பணத்தில் குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு சென்று அங்கு ஆடம்பர ஓட்டல்களில் தங்கியும், சுற்றுலா சென்றும் சொகுசாக வாழ்ந்துள்ளனர்.

இவர்களிடம் ஏமாந்த பால முருகன் ஜெர்மனியில் என்ஜினீயராக வேலை பார்த்தார். அவர் சுருதியின் தாய் சித்ராவுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக குடும்பத்துடன் லண்டனுக்கு டிக்கெட் எடுத்து கொடுத்தார்.

அதன்படி கடந்த ஆண்டு சுருதி தனது குடும்பத்தினருடன் லண்டன் சென்று வந்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் இருந்தே இவர்கள் மோசடியில் இறங்கி உள்ளனர். சென்னை புதுவண்ணை பகுதியை சேர்ந்த விஜய் என்ற வாலிபர் கொடுத்த புகாரின் பேரில் 2011-ம் ஆண்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாகை மயிலாடுதுறையை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது புகாரின்பேரில் 2014-ல் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

2016-ல் நாமக்கல் பரமத்தி வேலூரை சேர்ந்த சந்தோஷ்குமாரிடம் ரூ.43 லட்சம் மோசடி செய்ததாக கோவை மாநகர குற்றப் பிரிவு போலீசில் வழக்கு, நாமக்கலை சேர்ந்த சசிகுமாரிடம் ரூ.22 லட்சம், நாகையை சேர்ந்த சுந்தரிடம் ரூ.15 லட்சம், சிதம்பரத்தை சேர்ந்த அருள்குமரகுரு ராஜா என்பவரிடம் 20 பவுன் நகைகள், திண்டுக்கல்லை சேர்ந்த ராஜ்கமலிடம் ரூ.21 லட்சம் என இதுவரை 8 மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளது.

ஒவ்வொருவரிடம் பணம் கறந்ததும் அங்கிருந்து இடத்தை மாற்றி அடுத்த இடத்துக்கு சென்று விடுவார்கள். மேலும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பெயரில் பழகி வந்துள்ளார்.

தற்போது சேலம் மாவட்டம் சித்தூர் அருகே உள்ள எடப்பள்ளியை சேர்ந்த பாலமுருகன் என்ற என்ஜினீயரிடம் ரூ.41 லட்சம் மோசடி செய்ததாக கொடுத்த புகாரின்பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இவர்களை கைது செய்துள்ளனர்.

சுருதியும், அவரது தாயும் இவர்களை போல மேலும் பல பணக்கார வாலிபர்களை மோசடி செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த மோசடிக்கு மேலும் பலர் உடந்தையாக இருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர்.

இதற்காக சுருதியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோர்ட்டில் மனுதாக்கல் செய்து அனுமதி பெறுவதற்கு தேவையான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

8 வாலிபர்களை காதலில் வீழ்த்திய இளம்பெண் அவரது தாய் தம்பி கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
8 வாலிபர்களை காதலில் வீழ்த்திய இளம்பெண் அவரது தாய் தம்பி கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
8 வாலிபர்களை காதலில் வீழ்த்திய இளம்பெண் அவரது தாய் தம்பி கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in