tamilkurinji logo


 

free software for Backup your blogspot,software for Backup your blogger blogspot

software,for,Backup,your,blogger,blogspot




free software for Backup your blogspot

First Published : Wednesday , 30th November 2011 06:23:47 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


free software for Backup your blogspot,software for Backup your blogger blogspot

ஒரு பதிவராக நமது பிளாக்கை பத்திரமாக வைத்துக் கொள்வது சில சமயங்களில் சற்று சிரமமான காரியம்தான். நமது ஒவ்வொரு இடுகைகளும் நமது எண்ணங்களின், சிந்தனைகளின், ஆராய்ச்சிகளின் வெளிப்பாடாக உள்ளது என்பதும், இவையனைத்தும் நமது அந்தரங்க டைரியை விட மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம் என்பதனையும் எவராலும் மறுக்க முடியாது. 


உங்கள் பிளாக்கில் நூற்றுக் கணக்கில் இடுகைகளை வைத்திருப்பீர்கள், திடீரென ஒரு நாளில் இவையனைத்தும் தொலைத்து விட்டு அடடா என் பிளாக்கை காணோமே.. இடுகைஎல்லாம் போச்சே என்று புலம்பி கொண்டிருப்பது சிலருக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

இதற்கு ஒரு நல்ல தீர்வாக Blogger Backup எனும் சுதந்திர இலவச மென்பொருள் அமைந்துள்ளது ஒரு வரப்பிராசாதம் தான். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.)

இந்த சிறிய மென்பொருள் கருவியை தரவிறக்கி பதிந்து கொண்ட பிறகு இதனை திறந்து, 
 
Available Blogs என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Add/Update/Remove blog என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். 

இனி Log into Blogger to get and add your blogs டேபில் உங்கள் பிளாக்கர் கணக்கின் பயனர் பெயர் மற்றும் கடவு சொல்லை கொடுத்து கீழே உள்ள பட்டனை க்ளிக் செய்யுங்கள். அல்லது OR Manually add or edit a Blogger blog டேபை க்ளிக் செய்யுங்கள். (நான் கீழே உள்ள விளக்கப் படங்களில் இரண்டாவது முறையை கொடுத்துள்ளேன்.) 

இரண்டாவது வழியில்Blog Title/Name, Blogger Blog URL ஆகியவற்றை கொடுங்கள், Blogger Feed URL தெரிந்தால் கொடுங்கள், இல்லையெனில் Get Feed URL பட்டனை அழுத்தி பெற்றுக்கொண்டு, Add/Update Blog பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 

இனி அடுத்த திரை உங்கள் ப்ளாக் விவரங்களை காட்டும், இதில், உங்கள் வன்தட்டில் எந்த ட்ரைவில் உள்ள ஃபோல்டரில்  சேமிக்க வேண்டும் என்பதை கொடுங்கள். மேலும் பின்னூட்டங்களை சேமிக்க வேண்டுமெனில், Save Comments check box ஐ டிக் செய்யுங்கள். இப்படி சேமிக்கும் இடுகைகளை ஒரே கோப்பில் சேமிக்க வேண்டுமா அல்லது ஒவ்வொரு இடுகைக்கும் ஒவ்வொரு கோப்பை உருவாக்க வேண்டுமா என்பதை Save posts as format என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் தேர்வு செய்து கொள்ளுங்கள். மேலதிக விவரங்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி மாறிக் கொண்டு Backup posts என்ற பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 


இப்பொழுது உங்கள் பிளாக்கில் உள்ள ஒவ்வொரு இடுகைகளும், பின்னூட்டங்களும் Backup ஆக துவங்கும். இது அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை, எனது பிளாக்கில் 240 க்கு மேற்பட்ட இடுகைகளை Backup எடுக்க ஐந்து நிமிடங்கள் கூட எடுத்துக் கொள்ளவில்லை. 

 
இப்படி பேக்கப் எடுக்கும் பொழுது உங்கள் ஒவ்வொரு இடுகைகளும் ஒவ்வொரு XML கோப்புகளாக உங்கள் கணினியில் சேமிக்கப் படுகிறது. 


அவ்வளவுதான்! இனி எப்பொழுதாவது உங்கள் இடுகைகளை தொலைத்து விட்டு 'அடடா வடை போச்சே!.. என்று தலையில் கை வைப்பதை விட்டுவிட்டு மௌஸில் கை வைத்து, இதே மென்பொருள் கருவியை பயன் படுத்தி உங்கள் இடுகைகளை Restore செய்து கொள்ளுங்கள்.   



free software for Backup your blogspot,software for Backup your blogger blogspot free software for Backup your blogspot,software for Backup your blogger blogspot free software for Backup your blogspot,software for Backup your blogger blogspot
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வீடியோ எடிட்டிங், ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய இலவச மென்பொருள்...
வணக்கம் நண்பர்களே..! இன்றையப் பதிவில் ஒரு அருமையான வீடியோ எடிட்டிங் மென்பொருளைப் பற்றிப் பார்ப்போம். வீடியோவை எடிட் செய்ய இந்த வகையான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அவ்வாறான இலவச மென்பொருள்களில் பயன்மிக்க ஒன்றுதான் Corel VideoStudio Pro X5. இந்த மென்பொருளைப்

மேலும்...

 பயர்பாக்ஸ் இயக்கத்தினை வேகப்படுத்துவது எவ்வாறு!
பல பயனாளர்கள், தங்களின் மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசர் முன்பு இயங்கியதைக் காட்டிலும் மெதுவாக இயங்குவதாகவும், சில வேளைகளில் கிராஷ் ஆகி நிற்பதாகவும்கேள்விகளை எழுப்பி உள்ளனர். இது போன்ற தகவல்களைப் படிக்கையில், ஆமாம், எனக்குக் கூட இது போல ஏற்படுகிறது என்று ஒத்துக்

மேலும்...

 பைலின் துணைப் பெயர் (Extension) காட்டப்பட
பொதுவாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைல்களின் பட்டியலைக் காண்கையில், பைலின் முதல் பெயர் மட்டுமே காட்டப் படும். ஒரே பெயரில் வெவ்வேறு பார்மட்டில் பைல் இருப்பின், நமக்கு எது எந்த பைல் என்று தெரியாது. எடுத்துக்காட்டாக, ஒரே பெயரில், வேர்ட், ஸிப், ஜேபெக்

மேலும்...

 பிளாக்கர் பிளாக்கில் METATAG இணைப்பது எப்படி?
நமக்கு அதிக வாசகர்கள் விளம்பரம் மற்றும் திரட்டிகள் வழியாக வரலாம்.  ஆனால் விளம்பரங்கள் மற்றும் திரட்டிகளினால் வரும் வாசகர்களால் நமது வலைபதிவு/வலைதளத்தின்  Rank உயராது.  Search Engine வழியாக அதிக வாசகர்கள் வந்தால்தான் நமது வலைபதிவு/வலைதளத்தின் Rank உயரும்.  Search Engine

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in