VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கான கவுன்சிலிங் ஜனவரி 3-ந்தேதி தொடங்குகிறது. ஆனால் 2-ந்தேதி தான் பள்ளிக்கூடங்கள் திறப்பதால் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான சான்றிதழை பள்ளியில் பெறமுடியாமல் திணறுகிறார்கள்.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அரசுப்பணி நியமனங்களில் 20 சதவீதம் பேர் தமிழ் வழியில் படித்தவர்களாக இருக்கவேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இந்தநிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு 1870 பேர்களை தேர்ந்து எடுத்துள்ளது. அவர்களில் 20 சதவீதத்தினர் தமிழ் வழியில் படித்தவர்கள். தேர்ந்து எடுக்கப்பட்ட 1870 பேர்களுக்கும் அவர்கள் படித்த சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கவுன்சிலிங் ஜனவரி மாதம் 3 மற்றும் 4 தேதிகளில் சென்னை பாரி முனையில் உள்ள அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதற்கான அழைப்பிதழ்களை தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அனுப்பி உள்ளது. அவ்வாறு அனுப்பப்பட்ட கடிதத்தில் அவர்கள் தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ் பெறுவதற்கான பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது கல்லூரியின் முதல்வர் கையப்பம் இடவேண்டும்.

ஆனால் சான்றிதழ் பெறுவதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களில் பலர் படித்த ஊர்களில் இல்லை. உதாரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் படித்தவர்கள் திருமணமாகி சென்னையில் வசிக்கிறார்கள். அதுபோல சென்னையில் படித்தவர்கள் நெல்லையில் வசிக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு நேற்று முன்தினம் அழைப்பு வந்துள்ளது. சிலருக்கு நேற்று அழைப்பு வந்துள்ளது.

இவர்கள் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் பெற அவர்கள் படித்த பள்ளிகளை அல்லது கல்லூரிகளை தொடர்பு கொண்டனர். சிலர் நேரில் சென்று பார்த்தனர். ஆனால் பள்ளிகள் அனைத்தும் ஜனவரி 2 அல்லது 3 தேதிகளில்தான் திறக்கின்றன. இப்போது அரையாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை ஆகும்.

இதனால் தமிழ் வழியில் படித்து வி.ஏ.ஓ.தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ் வழியில்படித்ததற்கான சான்றிதழ் பெற முடியாமல் திணறுகிறார்கள். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

3-ந்தேதி கவுன்சிலிங் நடைபெறுகிறது. தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ் இல்லாமல் எப்படி செல்வது. சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கவுன்சிலிங் தேதியை இன்னும் ஒருவாரத்திற்கு தள்ளிப்போட்டால்தான் நல்லது அதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் உடனே வெளியிடவேண்டும். இல்லை என்றால் எங்களுக்கு கிடைத்த வேலை என்னவாகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  

https://goo.gl/2fYagg






04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்