tamilkurinji.co.in business news daily news from tamilkurinji.co.in http://www.tamilkurinji.co.in Wed, 23 Aug 2017 21:44:20 +0000 FeedCreator 1.7.2 http://www.tamilkurinji.co.in/images_/tamilkurinji_logo.png tamilkurinji.co.in logo http://www.tamilkurinji.co.in business news feed provided by tamilkurinji.co.in. Click to visit. எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/எஸ்பிஐ/வங்கியில்/வீட்டுக்கடனுக்கான/வட்டி/விகிதம்/குறைப்பு//&id=40222 ரூ. 30 லட்சத்திற்கும் குறைவான வீட்டுக்கடனக்கான வட்டி விகிதத்தை 0. 25% குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

இந்தப் புதிய விகிதமானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பிரதமர் மோடியின் கனவான இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மிகக் குறைந்த விலையில் வீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உருவான திட்டம் "அனைவருக்கும் வீடு" என்ற திட்டமாகும்.

மோடியின் இந்த கனவுத் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத் துறை மற்றம் தனியார் துறை வங்கிகளும் தம்முடைய வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்கும் வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாகக் குறைத்து வருகின்றன.

tamilkurinji editor Wed, 10 May 2017 07:13:05 +0000 ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/ரயில்/டிக்கெட்டுகள்//கேஷ்/ஆன்/டெலிவரி/-/ஐஆர்சிடிசி/அறிவிப்பு/&id=40220 இந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது.

ஐஆர்சிடிசி இப்போது 'பே ஆன் டெலிவரி' என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி ஆன்லைன் மூலமாகவோ, ஐஆர்சிடிசி ஆப் மூலமாகவோ ரயில்வே டிக்கெட் பதிவு செய்யும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

tamilkurinji editor Wed, 10 May 2017 07:03:55 +0000 ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/ஜிஎஸ்டி/பதிவு/முறை/விரைவில்/தொடங்கும்/-மத்திய/நிதி/அமைச்சகம்/அறிவிப்பு/&id=40217 சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டிஎன் எனப்படும் இந்த ஒருங்கிணைப்பு முறையில் பதிவு செய்வது கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இந்த வசதியும் முடக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி முதல் ஏப்ரல் 30, 2017 வரையா காலத்தில் மொத்தம் 60 லட்சம் வரி செலுத்துவோர் இந்த ஒருங்கிணைப்பில் பதிவு செய்துள்ளனர்.

இதில் பதிவு செய்வதற்கான முறை மே 1-ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது ஜூலை 1-ம் தேதி முதல்அறிமுகம் செய்யப்பட உள்ளதால் இந்த ஒருங்கிணைப்பில் தங்களை பதிவுசெய்து கொள்ளாத வர்த்தகர்கள், மற்றும் மறைமுக வரி செலுத்துவோர் அனைவரும் பதிவு செய்து கொள்ள ஏதுவாக இந்த ஒருங்கிணைப்பு தளம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமலாகஉள்ள இப்புதிய ஒரு முனைவரி விதிப்பு குறித்த விழிப்புணர்வை வருமான வரித்துறை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மண்டலத்துக்கும் ரூ. 1 கோடி செலவில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று சிடிபிடி ஆணையர்வனஜா எஸ். சர்னா தெரிவித்துள்ளார்.

tamilkurinji editor Wed, 10 May 2017 06:54:39 +0000 மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/மார்ட்மொபியை/வாங்கியது/ஸ்நாப்டீல்/&id=35634 ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல், ஐதராபாத்தை சேர்ந்த மார்ட்மொபியை வாங்கியுள்ளது.

இந்தியாவில்  ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஸ்நாப்டீல் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிறிய அளவிலான வர்த்தகத்துக்கான  வெப்சைட்கள், ஆன்லைன் மொபைல் அப்ஸ்களை மார்ட்மொபி உருவாக்கி வருகிறது.

‘‘எங்களுக்கு வரும் ஆர்டர்களில் 75 சதவீதம் மொபைல்  மூலமாகவே வருகிறது. எனவே, மொபைல் வர்த்தகத்துக்கு மேலும் வலுச்சேர்க்க மார்ட்மொபி எங்களுக்கு உதவும்’’ என்று ஸ்நாப்டீல் தெரிவித்துள்ளது.  எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. tamilkurinji editor Wed, 27 May 2015 15:49:28 +0000 முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி' http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/முதல்முறையாக/9/ஆயிரம்/புள்ளிகளை/தொட்டது/'நிப்டி'/&id=35273 தொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 134 புள்ளிகள் உயர்ந்து 29,593 புள்ளிகளாக நிறைவடைந்தது. இதற்கு முன்பாக கடந்த ஜனவரி 30-ந்தேதி 8996.60 என்ற புதிய உச்சத்தை நிப்டி பதிவு செய்திருந்தது. சனிக்கிழமையன்று வெளியான மத்திய பட்ஜெட் கார்ப்பரேட் பிரெண்ட்லியாகவும், வளர்ச்சிக்கான பட்ஜெட்டாகவும் இருப்பதாக பெரும்பாலான முதலீட்டாளர்கள் கருதியதால் டிரேடிங் சென்டிமெண்ட் பாசிட்டிவ்வாக மாறியது.

கடந்த 4 வர்த்தக தினங்களில் மட்டும் சென்செக்ஸ் 850 புள்ளிகள் உயர்ந்திருப்பது நினைவு கூரத்தக்கது.
tamilkurinji editor Tue, 03 Mar 2015 00:59:41 +0000 புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/புதிய/உச்சத்தை/எட்டியது/சென்செக்ஸ்;/28/ஆயிரம்/புள்ளிகளை/தொட்டது/&id=34674 புதன்கிழமை காலை பங்கு வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையக 28,000 புள்ளிகளை தொட்டது. அதே போல, நிப்டியும் 8,363 புள்ளிகளை தொட்டு புதிய உச்சத்தை அடைந்தன.

இன்று காலை சென்செக்ஸ் 141.57 புள்ளிகள் உயர்ந்து 28,001.95 என்ற நிலையிலும், நிப்டி 39.50 புள்ளிகள் உயர்ந்து 8,363.65 என்ற நிலையிலும் உயர்ந்து வர்த்தகம் ஆனது. tamilkurinji editor Tue, 04 Nov 2014 18:04:35 +0000 தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/தொடர்ந்து/6-வது/நாளாக/இந்திய/பங்குச்சந்தைகள்/உயர்வு/&id=34612 சென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன.

இந்நிலையில், அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் மத்திய அரசின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின் மீதுள்ள எதிர்பார்ப்பினாலும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் தொடர்ந்து 6-வது நாளாக அதாவது வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று 49 புள்ளிகள் உயர்ந்து 26,900-ஐ தொட்டது.

குறிப்பாக, பொதுத்துறை, வங்கித்துறை பங்குகளின் விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டியும் 19.30 புள்ளிகள் உயர்ந்து 8,033.85-ஐ தொட்டது.

பாலிபிராதிபதா-வை ஒட்டி பங்குச்சந்தைகளுக்கு வெள்ளிக்கிழமையன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆசியப்பங்குச் சந்தைகளும் இன்று காலை சிறிது உயர்வுடனேயே வர்த்தகத்தை துவங்கியிருக்கிறது. tamilkurinji editor Sun, 26 Oct 2014 19:29:46 +0000 தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/தங்கம்/விலை//சரிவு//-/ஒரே/மாதத்தில்/சவரனுக்கு/1352/ரூபாய்/குறைந்தது/&id=34302 பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இன்று தங்கத்தின் விலை ரூபாய் 20000க்கும் கீழே இன்று சரிந்தது.

கடந்த மாதம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2668 ரூபாய் என்றிருந்த நிலையில் ஒரே மாதத்தில் கிராம் ஒன்றுக்கு 169 ரூபாய் சரிந்து சவரன் ஒன்றுக்கு 1352 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.. இன்று கிராம் ஒன்று 2499 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே போல் கடந்த மாதம் ஒரு கிராம் வெள்ளி 46.20 ரூபாய் என்றிருந்த நிலையில் தற்போது அதன் விலை 41.40 ஆக குறைந்துள்ளது. ஒரே மாதத்தில் வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 4520 ரூபாய் வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

tamilkurinji editor Sun, 21 Sep 2014 18:48:14 +0000 வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/வர்த்தக/தொடக்கத்தில்/சென்செக்ஸ்/25,000/புள்ளிகளை/தொட்டது/&id=33041 லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.19 புள்ளிகள் உயர்ந்து 25,037.54 புள்ளிகளாக உள்ளது.

தேசிய பங்குசந்தையான நிப்டி 90.35 புள்ளிகள் உயர்ந்து 7,457.45 புள்ளிகளாக உள்ளது. ரியல் எஸ்டேட், மூலதன பொருட்கள் மற்றும் பொதுத்துறை பங்குகள் விலை 2% வரை அதிகரித்துள்ளது. நுகர்வோர், ஆட்டோ, மின்சாரம் மற்றும் உலோகத்துறை பங்குகள் விலை 1% வரை உயர்ந்துள்ளது. சன் பார்மா 3.4%; டாடா மோட்டார்ஸ் 2.6% மற்றும் எல் & டி 2.4% வரை அதிகரித்தன.

காலை வர்த்தக தொடக்கத்தில் ஆசியாவின் இதர பங்குசந்தையான ஹாங்காங்கின் ஹேங்சேங், 0.39%, ஜப்பானின் நிக்கி 0.73% உயர்ந்து இருந்தன. நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.38% அதிகரித்து முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து 58.40 ஆக உள்ளது. கடந்த வார இறுதியில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.52 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. tamilkurinji editor Sun, 25 May 2014 18:44:07 +0000 23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/23/ஆயிரத்தை/நெருங்கும்/சென்செக்ஸ்:/தொடர்ந்து/நான்காவது/நாளாக/புதிய/உச்சத்தை/தொடும்/பங்குச்சந்தைகள்/&id=32992 தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டது. மூன்று நாட்கள் தொடர் உயர்வுக்கு பிறகு இன்று காலை துவங்கிய இந்திய பங்குச்சந்தைகளில் வியாபாரம் மந்தமாகவே இருந்தது. எனினும், வர்த்தகத்திற்கு இடையே மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 60 புள்ளிகள் வரை உயர்ந்து 22,939 என்ற புதிய உச்சத்தை தொட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டியும் 6,869.85 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

முதலீட்டாளர்கள் தங்கள் லாபத்தை பதிவு செய்ததால் தற்போது சென்செக்ஸ 25 புள்ளிகள் சரிந்து 22,850 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

மக்களவை தேர்தல் துவங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிப்பதற்கு இன்று ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில் பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. tamilkurinji editor Thu, 24 Apr 2014 18:42:47 +0000 புதிய உச்சத்தை தொட்டது இந்திய பங்குசந்தை http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/புதிய/உச்சத்தை/தொட்டது/இந்திய/பங்குசந்தை/&id=32760 இந்திய பங்குசந்தை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மும்பை பங்குசந்தையில் காலை வர்த்தம் தொடங்கியதும் ‘சென்செக்ஸ்’  107.31 புள்ளிகள் அதிகரித்து 22,162.52 புள்ளிகள் என புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘நிஃப்டி’ 33.05 புள்ளிகள் உயர்ந்து 6,622.80 புள்ளிகளாக உள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளில் தொடர்ந்து முதலீடு செய்ய மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதால் வர்த்தகம் இந்த உச்சத்தை எட்டியுள்ளது என்று வர்த்தக தரகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் பங்குசந்தை புள்ளிகள் உயர காரணமாக உள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

tamilkurinji editor Tue, 25 Mar 2014 18:19:59 +0000 இந்திய பங்குச்சந்தைகளில் 9600 கோடி அன்னிய முதலீடு http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/இந்திய/பங்குச்சந்தைகளில்/9600/கோடி/அன்னிய/முதலீடு/&id=32737 தேர்தலுக்கு பிறகு வலுவான ஆட்சி அமையும் என்ற நோக்கில் கடந்த மூன்று மாதங்களாக இந்திய பங்குச்சந்தைகளில் அன்னிய முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நடப்புக் கணக்கு பற்றாக்குறை கணிசமான அளவு குறைந்து வருவதாலும், ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி தடுக்கப்பட்டு வலுப்பெற்று வருவதாலும் அன்னிய முதலீட்டாளர்களின் பார்வை தற்போது மக்களவை தேர்தலை நோக்கி திரும்பியிருப்பதாக பங்குச்சந்தை வல்லுனர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், மார்ச் 21 தேதி வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் ரூ.9597 கோடி அன்னிய முதலீடு வந்துள்ளதாக பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய சந்தைகளில் பெரும்பங்கு வகித்து வரும் அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த ஜனவரி மாதம் ரூ.714 கோடியும், பிப்ரவரி மாதத்தில் ரூ.1404 கோடியும் முதலீடு செய்துள்ளனர். தற்போது இந்தியாவில் 1715 பதிவு செய்யப்பட்ட அன்னிய நிதி நிறுவனங்கள் உள்ளன.

அண்மைக்காலமாக இந்திய பங்குச்சந்தை குறியீட்டெண்கள் புதிய உச்சங்களை தொட்டு வருவது குறிப்பிடத்தக்கது. tamilkurinji editor Sun, 23 Mar 2014 18:59:06 +0000 22,000- தொடுகிறது சென்செக்ஸ் -இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/22,000-/தொடுகிறது/சென்செக்ஸ்/-இந்திய/பங்குச்சந்தை/வரலாறு/காணாத/அளவிற்கு/உயர்வு/&id=32672 இந்திய பங்குச்சந்தையில் இன்று வரலாறு காணாத அளவிற்கு சென்செக்ஸ் உச்சத்தை எட்டியுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 189 புள்ளிகள் உயர்ந்து 21998 புள்ளிகளாக ஆனது.

தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 54 புள்ளிகள் உயர்ந்து 6558ஆக காணப்பட்டது. tamilkurinji editor Mon, 17 Mar 2014 16:36:17 +0000 சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை எட்டியது http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/சென்செக்ஸ்/22/ஆயிரம்/புள்ளிகளை/கடந்து/புதிய/உச்சத்தை/எட்டியது/&id=32569
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மும்பை பங்குச் சந்தை மிகவும் சரிவடைந்தது. தற்போது அது இமாலய உச்சத்தை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்கு சந்தையில் அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு மீண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த 2 வாரத்தில் ரூ.7 ஆயிரம் கோடி அளவிற்கு அந்நிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.நடப்பு ஜனவரி மாதத் திலும், பிப்ரவரி மாத ஆரம்பத்திலும் அந்நிய நிதி நிறுவனங்கள் தங்களது முதலீடு களை திரும்ப பெற்றன. இந்நிலையில், பிப்ரவரி மாதம் மத்தியில் அந்நிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு மீண்டும் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி மத்தியில் தொடங்கி 15 தினங்களில் சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவிற்கு அந்நிய நிதி நிறுவனங்கள் பங்குகளில் முதலீடு செய்துள்ள தாக பங்கு சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடன் பத்திரங்களில் நடப்பு ஆண்டில் இதுவரை 500 கோடி டாலரை அந்நிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரதன்மை உள்ளிட்ட சூழல், மக்களவை தேர்தலுக்கு பிறகு மத்தியில் புதிய ஆட்சி அமைவது உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் அந்நிய நிதி நிறுவனங்களில் முதலீடு அதிகரித்து வருவதாக பங்கு சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.கடந்த 2013ம் ஆண்டில் அந்நிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்கு சந்தையில் ரூ.1.12 லட்சம் கோடி அளவிற்கு முதலீடு செய்திருந்தன. மக்களவை தேர்தலுக்கு பிறகு மத்தியில் அமையும் புதிய ஆட்சியை பொறுத்தே அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு கொள்கை அமையும் என்றும் பங்கு சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர். tamilkurinji editor Sun, 09 Mar 2014 16:36:35 +0000 தங்கம் விலை வரலாறு காணாத வீழ்ச்சி http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/தங்கம்/விலை/வரலாறு/காணாத/வீழ்ச்சி/&id=30464 நேற்று, தங்கம் விலை, சவரனுக்கு மேலும், 224 ரூபாய் குறைந்து, 20,288 ரூபாய்க்கு விற்பனையானது.

அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதால், சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் செய்துள்ள முதலீட்டை திரும்பப் பெற்று வருகின்றனர். இதனால், சில தினங்களாக தங்கம் விலை வெகுவாக குறைந்து வருகிறது.

சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,564 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,512 ரூபாய்க்கும் விற்பனையானது.

24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 27,420 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை, கிராமுக்கு, 28 ரூபாய் குறைந்து, 2,536 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 224 ரூபாய் சரிவடைந்து, 20,288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

10 கிராம் சுத்த தங்கம், 300 ரூபாய் குறைந்து, 27,120 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 44.20 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 41,285 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து, தங்கம் ஆபரண வர்த்தகர் ஒருவர் கூறுகையில், "அமெரிக்காவின் எழுச்சியால், தங்கம் விலை இன்னும் குறைந்திருக்க வேண்டும்.

டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பில் ஏற்பட்ட சரிவால், விலை சற்றே குறைந்துள்ளது' என்றார். tamilkurinji editor Fri, 21 Jun 2013 15:36:13 +0000 இந்தியா ரூபாயின் மதிப்பு வரலாறு காணத வீழ்ச்சி http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/இந்தியா/ரூபாயின்/மதிப்பு/வரலாறு/காணத/வீழ்ச்சி/&id=30445 ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடும் சரிவை அடைந்துள்ளது.

வியாழக்கிழமை காலை வணிகம் துவங்கியதும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.1.30 சரிந்து ரூ.60 ஆக சரிந்தது.

கடந்த வாரம் முதலே இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை அடைந்து வந்த நிலையில், இன்று ரூ.60 ஆக சரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. tamilkurinji editor Wed, 19 Jun 2013 17:35:07 +0000 சாலையில் செல்லும் தேவதை மெர்சிடெஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/சாலையில்/செல்லும்/தேவதை/மெர்சிடெஸ்/பென்ஸ்/ஏ/க்ளாஸ் /&id=30401 இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தான் A Class பிரீமியம் ஹேட்ச்பேக் காரை மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் வெளியிட்டு கார் ரசிகர்களை மெய்மறக்கச் செய்துள்ளது.

சொகுசு ஹேட்ச்பேக் செக்மன்ட்டில் இதுவே முதல் கார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அது மட்டுமின்றி சொகுசுக்கார் வரிசையில் எரிபொருள் சிக்கனத்துடன் நிறைவான மைலேஜ் கொடுக்கும் கார் இதுவென்பதும் விசேஷச் செய்தியாகும்.

இப்புதிய A Class சிறப்பான இரண்டு வேரியன்ட்டில், பெட்ரோல் மற்றும் டீசலில், 7 ஸ்பீட் ட்யூவல் க்ளட்ச் ஆட்டோமேடிக் கியர் பாக்சுடன் வியக்க வைக்கும் செயல்திறனுடன் விளங்குகிறது.

மிகவும் வித்தியாசமான, பார்ப்போர் கண்களை கவரும் வண்ணம், அழகான வளைவு நெளிவுகளுடனான, இதுவரை பார்த்திராத வடிவமைப்புடன் இதன் வெளிப்புறத்தோற்றம் திகழ்கிறது.

மிகவும் ஆச்சரியப்படவைக்கும் சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை இக்காரில் காண முடிவதால் இதன் அறிமுகம் வாடிக்கையாளரின் கவனத்தை பெரிதும் கவரும் என்பதும் நிச்சயம்.

வழக்கமான ஹேட்ச்பேக் கார் வடிவங்களில் இருந்து பெரிதும் மாறுபட்டு, புத்துணர்ச்சியூட்டும் வகையில் இதன் வெளிப்புற தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை வடிவமைத்த பொறியாளர் குழுவிற்கு "டீம் ஆஃப்தி இயர்' விருது 2011ஆம் ஆண்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

அதற்கேற்றபடி கம்பீரமான ஆளுமையை பிரதிபலிக்கும் இதன் முன்புறம் மற்றும் பக்கவாட்டு தோற்றம் இருக்கிறது. டைமன்ட் வடிவ குழிவுகளை இருபக்கமும் கொண்ட ரேடியேட்டர் க்ரில், ஆங்காங்கு தென்படும் க்ரோம் ஃபினிஷ் எடுப்பான பென்ஸ் லோகோ, நீண்ட நளினமான ஹெட்லைட் க்ளஸ்டர் பின்புற டெயில் லேம்ப் பக்கவாட்டில் மெல்ல எட்டிப்பார்ப்பது,

ஆழமான வளைவுகள் கொண்ட கதவுகள் என்று மிகவும் அழகான கவர்ச்சியான வடிவமைப்புடன் திகழ்கிறது. இந்த A க்ளாஸ் இதன் A 180 ஸ்போர்ட் பெட்ரோல் வெர்ஷனில் தள்ளித்திறக்கக்கூடிய "சன் ரூப்' மேற்கூரையில் இருப்பதும் கவர்ச்சியாக இளைய தலைமுறையை கவரும் வகையில் உள்ளது.

இதன் 7GDCT ஸ்பீட் ட்யூவல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் வேகமான ஸ்போர்டியான பயணமோ அல்லது நிதானமான ரிலாக்ஸான பயணமோ எதுவாகிலும் கியர் மாறுவதே தெரியாத வண்ணம் சுகமான ஓட்டும் அனுபவத்தையும் பயண அனுபவத்தையும் வழங்குகிறது.

இதன் உட்புற அமைப்பு ஒவ்வொரு முறை வண்டியில் ஏறும்போதும் புதுமையாக உணரும் படியாக உள்ளது. டேஷ்போர்ட்டின் வடிவமைப்பு, சீட்களின் கண்ணியமான நிறம் மற்றும் வடிவம், முன்புற வரிசையின் நேர்த்தியான இடவசதி, ஒரு சில விநாடி வண்டி முழுவதும் சீராக பரவும் ஏசி வசதி, வெளிப்புற கார் வடிவமைப்பிற்கு பொருத்தமான நளினமான தாராள இடவசதி கொண்ட பின்புற வரிசை என்று இதன் உட்புறத்தை வர்ணிக்க ஆடம்பரம் வசீகரம் போன்ற வார்த்தைகளே தரும்.

இதன் பொருட்கள் வைக்கும் பகுதி 340 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இருக்கிறது. விலையுயர்ந்த ஆர்டிகோ திரைச்சீலை, துல்லியமான ஒலியமைப்பு கொண்ட 800X480 ஆடியோ 20CD சிஸ்டம் ஸ்டியரிங் வீலில் பொருத்தப்பட்டு இயக்கக்கூடிய ஆடியோ சிஸ்டம், 6 ஸ்பீக்கர்கள் வயர்லெஸ் மூலம் சிறப்பாக இயங்குவது, 14.7செமீ கலர் டிஸ்ப்ளே, ஐ-ஃபோன் இணக்கம் கொண்ட யுஎஸ்பி, AUXCன், ப்ளூடூத், ஆடியோ ஸ்டீரிமில் கொண்ட இன்ஃபோடைன்மென்ட் போன்றவை பென்ஸ் A க்ளாஸ் பயணத்தை மிகவும் ரசிக்கக் கூடிய உன்னதமான அனுபவமாகவே மாற்றுகிறது.

அதிகபட்ச வேகத்திலும் காருக்குள் எந்தவித சிறு ஒலியும் அதிர்வும் இன்றி வெளியுலகு தொடர்பு முழுவதுமாய் துண்டிக்கப்பட்ட உணர்வு கிடைக்கிறது.

இதன் டைரக்ட் இன்ஜெக்ஷன் 4 சிலிண்டர் டீசல் என்ஜின் சிறப்பான சக்தியையும் இழுப்பு விசையையும் கொண்டு குறைந்த வேகத்திலும் துரிதமான அசைவை கொடுக்கிறது.

இதன் நான்காம் தலைமுறை காமன் ரெயில் டீசல் டெக்னாலஜி மேம்படுத்தப்பட்ட இக்னீஷன் அழுத்தம் மற்றும் குறைந்த வேகத்திலும் அதிக டார்க்கை வழங்குகிறது. இதிலுள்ள ECO ஸ்டார்ட், ஸ்டாப் செயல்பாடு மிகவும் சிக்கனமான காராக அ கிளாஸ் திகழ்கிறது.

இதன் 1.6 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிக அழுத்த டைரக்ட் இன்ஜெக்ஷன் மூலம் மிக சிறப்பான செயல்திறனும் எரிபொருள் சிக்கனத்தையும் வழங்குகிறது. இதிலும் ECO ஸ்டார்ட் ஸ்டாப் செயல்பாடு உள்ளதால் போக்குவரத்தில் என்ஜின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு எரிபொருள் சேமிக்கப்படுகிறது.

ஓட்டுனரின் ஓட்டும் போக்கை கணித்து எச்சரிக்கும் மற்றும் அறிவுறுத்தும் ECO டிஸ்ப்ளே இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் கொடுக்கப்பட்டுள்ளது.

பென்ஸ் A க்ளாசில் இந்நிறுவனத்திற்கே உரித்தான பாதுகாப்பான ஓட்டும் முறைக்காகவும், ஆபத்து நேர உதவிக்கெனவும் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பலவித எலக்ட்ரானிக் அசிஸ்ட் சிஸ்டம்கள் இதில் உள்ளதால் எம்மாதிரி சூழலையும் பாதுகாப்பாக கையாளும் நம்பிக்கை ஓட்டுனருக்கு ஏற்படுகிறது.

ஏழு ஏர்பேக்கள், ஆக்சிலரேஷன் ஸ்கிட் கண்ட்ரோல், அடாப்டீவ் ப்ரேக் லைட்கள், எலக்ட்ரிக் பார்கிங் ப்ரேக், டயர் ப்ரஷர் லாஸ் வார்னிங் போன்றவற்றுடன் ஏபிஎஸ், ப்ரேக்கிங் சிஸ்டம் இஎஸ்பியுடன் சேர்ந்து முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது.

அதிநவீன அழகிய நேர்த்தியான வடிவமைப்பு, மிகச் சிறந்த செயல்திறனுடன் எரிபொருளில் சமரசம் செய்து கொள்ளாத தொழில்நுட்பம், சொகுசுக்காரும் கச்சிதமான அளவில் இருக்கலாம் என்ற புதிய சிந்தனை, "ஜெர்மானிய சிறந்த கார்' "யெல்லோ ஏஞ்சல் 2013' போன்ற விருதுகளை வென்ற பெருமை என்று மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் தொப்பியில் மற்றொரு சிறப்பான இறகு தான் இந்த A க்ளாஸ் ஹேட்ச் பேக். tamilkurinji editor Mon, 17 Jun 2013 14:37:16 +0000 ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி : ரிசர்வ் பேங்க் கவலை http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/ரூபாய்/மதிப்பு/கடும்/வீழ்ச்சி/:/ரிசர்வ்/பேங்க்/கவலை/&id=30367 அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, வரலாறு காணாத வகையில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, கிட்டத்தட்ட, 2 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, முதன் முறையாக, 58.14 ஆக சரிவடைந்தது.

இந்நிலையில்,நேற்றைய அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு,மேலும், 0.26 பைசா குறைந்து, 58.40 ஆக வீழ்ச்சி கண்டது.

வர்த்தகத்தின் இடையே, ரூபாய் மதிப்பு, 58.90 வரை சரிந்தது. அப்@பாது, "இந்த நிலை இன்னும் மூன்று, நான்கு தினங்களில் மாறும். அதிக அளவில் அன்னிய முதலீடு குவியும். ரூபாய் மதிப்பின் சரிவு குறித்து கவலைப்படதேவையில்லை' என, பொருளாதார விவகாரங்கள் துறை செயலர், அரவிந்த் மயாராம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இத்தகவல் வெளியானதையடுத்து, ரூபாய் மதிப்பு கட்டுக்குள் வந்தது. அமெரிக்க டாலர் கையிருப்புகடந்த ஆறு வாரங்களில், ரூபாய் மதிப்பு, 10 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஜனவரி துவக்கத்தில், 53.68 ஆக இருந்த ரூபாய் மதிப்பு, வரும் நாட்களில், 59 ஐ தாண்டும் வாய்ப்பும் உள்ளது.

பொதுவாக, உள்நாட்டில் டாலர் புழக்கம் குறையும்@பாது, ரூபாய் மதிப்பு சரிவடையும். இறக்குமதியாகும் கச்சா எண்ணெய், தங்கம் உள்ளிட்ட பொருள்களுக்கான தொகை, டாலரில் செலுத்தப்படுகிறது.இதனால் எண்ணெய் நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவை, அதிக அளவில் டாலரை வாங்குகின்றன.

இதனால், டாலர் புழக்கம் குறைந்து, ரூபாய்க்கு நிகரான அதன் மதிப்பு உயர்கிறது.பொதுவாக, டாலருக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது, ரிசர்வ் வங்கி, அதன் கையிருப்பில் இருந்து, உடனடியாக டாலரை புழக்கத்தில் விடும். அப்போது, ரூபாய் மதிப்பின் சரிவு, கட்டுக்குள் வரும். ஆனால், தற்போதைய ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்க, ரிசர்வ் வங்கி இத்தகைய நடவடிக்கையை எடுக்கவில்லை.

இதுகுறித்து, ரிசர்வ் வங்கி கவர்னர் டீ.சுப்பாராவ் கூறும்@பாது, "டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பிற்கு, எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை' என்று தெரிவித்தார்.அதிக அளவில் டாலரை புழக்கத்தில் விடுவது, எந்த பயனையும் அளிக்காது என, ரிசர்வ் வங்கி கருதியது தான், இதற்கு காரணம். ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்துள்ளதால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 10 ஆயிரம்கோடி டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இந்திய கடன் பத்திர சந்தையில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு,வேகமாக குறைந்து வருகிறது. இந்நிறுவனங்கள், இந்திய கடன் பத்திரங்கள் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகளை திரும்ப பெற்று, மீண்டும் பொருளாதார வளர்ச்சி காணத் துவங்கியுள்ள அமெரிக்காவில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளன.

அதற்கேற்ப, அமெரிக்க கடன் பத்திரங்களின் மீதான முதலீட்டு வருவாய், கடந்த ஐந்து மாதங்களில், 1.8 சதவீதத்தில் இருந்து, 2.17 சதவீதமாக உயர்ந்துள்ளது. இ‌தே காலத்தில், இந்திய கடன் பத்திர சந்தையில் இருந்து மட்டும், 23கோடி டாலர் அளவிலான முதலீட்டை திரும்ப பெற்றுள்ளன. அதிக அளவில் அன்னிய முதலீடு திரும்ப பெறப்பட்டு வருவதால், டாலர் புழக்கம் குறைந்து, ரூபாய் மதிப்பின் சரிவிற்கு வழி வகுத்துள்ளது.

மத்திய அரசு நடவடிக்கைஇந்நிலையில், மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (செபி) ஆகியவை இணைந்து, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளன.

இது குறித்து, தலைமை பொருளாதார ஆ@லாசகர் ரகுராம் ராஜன் கூறுகையில், "நடப்பு கணக்கு பற்றாக்குறையை சமாளிப்பதற்கான நிதியை திரட்டுவதில், நிலையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரூபாய் மதிப்பும் நிலை பெறும். தற்போதைய ஏற்றத் தாழ்வு நீண்ட நாள் நீடிக்காது' என்று தெரிவித்தார்.நடப்பாண்டில், இதுவரை, அன்னிய நிதி நிறுவனங்கள், 1,100கோடி டாலரை முதலீடு செய்துள்ளன.

இந்த முதலீடு நிலைத்திருக்க அல்லது அதிகரிக்க, ரிசர்வ் வங்கியை பொறுத்தவரை, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கவேண்டும். அ@த சமயம், பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, இத்தகைய நடவடிக்கை எடுப்பது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.எனினும், இப்பிரச்னையை ரிசர்வ் வங்கி எப்படி சமாளிக்கப்போகிறது என்பது, வரும் 17ம்தேதி வெளியிட உள்ள அதன், நிதி ஆய்வு அறிக்கையில் தெரிய வரும்.

ஏற்றுமதியை விட இறக்குமதி உயர்வால் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து உள்ளது.கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் இறக்குமதி அதிகரித்து வருவது.

இந்திய இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு டாலருக்கான தேவை அதிகரிப்புசீனாவின் பொருளாதார வளர்ச்சியில்மந்த நிலைமே - ஜூன் 10 வரை, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய கடன் பத்திரங்களில் செய்திருந்த, 270 கோடி டாலர் முதலீட்டை திரும்ப பெற்றுள்ளன.

அமெரிக்க கடன் பத்திரங்கள் மீதானமுதலீட்டில் கூடுதல் வருவாய் கிடைப்பதுஅமெரிக்க பெடரல் வங்கி, மாதந்தோறும் வாங்கும், 3,000 கோடி டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்களை, நடப்பாண்டு இறுதியில் நிறுத்தும் என்ற ஊகம்அமெரிக்காவில் பெருகும் வேலை வாய்ப்பு. tamilkurinji editor Tue, 11 Jun 2013 15:56:23 +0000 ஆடி கார் விற்பனை அதிகரிப்பு http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/ஆடி/கார்/விற்பனை/அதிகரிப்பு/&id=30317 ஆடி இந்தியா கார்களின் விற்பனை மே மாதத்தில் 57 சதவீதம் அதிகரித்துள்ளது. சொகுசு கார்கள் தயாரிப்பு உலகின் முன்னணி நிறுவனங்களின் ஆடி நிறுவனமும் ஒன்று.

இந்நிறுவனம் இந்தியாவிலும் ஆடி இந்தியா என்ற பெயரில் கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் மே மாத கார் விற்பனை 710-ஆக உள்ளது. இதன்மூலம் இந்நிறுவனத்தின் விற்பனை 57 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதேமாதம் இந்நிறுவனத்தின் கார் விற்பனை 451 ஆக இருந்தது.

மேலும் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான விற்பனையும் 24.8 சதவீதம் உயர்ந்து 4,096 ஆக உள்ளது.
tamilkurinji editor Fri, 07 Jun 2013 19:10:08 +0000 ஏ.சி விற்பணை அதிகரித்தது http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/ஏ.சி/விற்பணை/அதிகரித்தது/&id=30289 :நடப்பு கோடைக் காலத்தில், நாட்டின், "ஏசி' சாதனங்கள் விற்பனை, 30 சதவீதம் அளவிற்கு உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.நாடு தழுவிய அளவில், இவ்வாண்டு கடும் கோடையால், பெருநகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை, "ஏசி' சாதனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

வளர்ச்சி:பல மாநிலங்களில், மின் பற்றாக்குறை நிலவி வரும் சூழ்நிலையிலும், இவற்றின் விற்பனை, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.கடந்த ஆண்டு மே மாதம் வரையிலுமாக, "ஏசி' சாதனங்கள் விற்பனை, 10 லட்சம் என்ற எண்ணிக்கையில் இருந்தது. இது, இவ்வாண்டு, 12 லட்சமாக அதிகரிக்கும் என, இத்துறை யைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

உள்நாட்டில், எல்.ஜி., இந்தியா, சாம்சங் இந்தியா, ஹேயர், வேர்ல்பூல் ஆகிய நிறுவனங்களின், "ஏசி' சாதனங்களின் விற்பனை, சிறிய நகரங்கள் வரை அதிகரித்து உள்ளதாக, தெரியவந்துள்ளது.இதுகுறித்து, எல்.ஜி., இந்தியா நிறுவனத் தின் தலைமை வர்த்தக அதிகாரி, ("ஏசி' சாதனங்கள்) சவ்ரப் பைசாகியா கூறியதாவது:

இவ்வாண்டு, "ஏசி' சாதனங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. சராசரியாக, இத்துறை ஆண்டுக்கு, 20 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. அதேசமயம், ஒரு சில நகரங்களில், இவற்றின் விற்பனை, 50 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு பைசாகியா கூறினார்.சாம்சங் இந்தியா நிறுவனத்தின், மூத்த துணை மேலாளர் மகேஷ் கிருஷ்ணன் கூறுகையில், "நிறுவனத்தின், "ஸ்பிலிட்' வகை "ஏசி' சாதனங்கள் விற்பனை, 30 சதவீதம் அதிகரித்துள்ளது. பொதுவாக இவ்வாண்டில், "ஸ்பிலிட் ஏசி' சாதனங்களுக்கு, நுகர்வோர் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது' என்றதெரிவித்தார்.

குறியீடு:பொதுவாக, குறைந்த மின்சக்தியில், அதிக பயனளிக்கக்கூடிய, "ஸ்டார்' குறியீடு கொண்ட, "ஏசி' சாதனங் களுக்கான தேவை அதிகரித்துள்ளது என, அவர் மேலும் கூறினார்.இதுகுறித்து, ஹேயர் அப்ளையன்சஸ் நிறுவனத்தின், இந்தியா பிரசிடெண்ட் எரிக் பிரகன்ஸா கூறியதாவது:நாடு தழுவிய அளவில், நிறுவனத்தின், "ஏசி' சாதனங்களுக்கு தேவை அதிகரித்து உள்ளது.

விற்பனையும், சிறப்பான அளவில் மேம்பட்டுள்ளது. கடந்த, 2012ம் ஆண்டில், 66 ஆயிரம் "ஏசி' சாதனங்கள் விற் பனை செய்யப்பட்டன. இந்நிலையில், நடப்பாண்டு ஜனவரி முதல், மே மாதம் வரையிலுமாக, 70 ஆயிரம் சாதனங்கள் விற்பனை ஆகியுள்ளன.இவ்வாறு, பிரகன்ஸா கூறினார்.

பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பில் ஏற்பட்டுள்ள, அதிக மாறுபாடுகள் போன்றவற்றால், "ஏசி' சாதனங்களின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையிலும், கடந்தா ண்டை விட, நடப்பாண்டில், இச்

சாதனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது என, வேர்ல்பூல் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் (நிறுவன விவகாரங்கள் மற்றும் திட்டமிடல்) சந்தனு தாஸ் குப்தா தெரிவித்தார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டில், "ஏசி' சாதனங்களின் விலை, 10 சதவீதம் அதிகரித்துள்ளது. சிறிய நகரங்கள்இந்நிலையிலும், கடும் கோடையால், "ஏசி' சாதனங்களின் விற்பனை, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது என, எல்.ஜி., இந்தியா நிறுவனத்தின் தலைவர் பைசாகியா தெரிவித்தார்.பொதுவாக, நுகர்வோர் மிகவும் தரம் வாய்ந்த மற்றும் குறைந்த மின்சக்தியில் செயல்படும், "ஏசி' சாதனங்களை தேர்வு செய்வதில், மிகவும் கவனமாக உள்ளனர் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

நடப்பாண்டில், "ஏசி' சாதனங்கள் விற்பனையில், பெருநகரங்களை விட, சிறிய நகரங்களின் பங்களிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. சிறிய நகரங்கள் தவிர, துணை நகரங்களிலும், இச்சாதனங்களின் விற்பனை மிகவும் அதிகரித்து உள்ளது என, பைசாகியா மேலும் கூறினார். tamilkurinji editor Wed, 05 Jun 2013 15:45:15 +0000 டீசல் நானோ கார் விரைவில் அறிமுகம் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/டீசல்/நானோ/கார்/விரைவில்/அறிமுகம்/&id=30279 டாடா மோட்டார்ஸ் விற்பனை தொடர்ந்து சரிவை தடுத்தி நிறுத்த புதிய திட்டங்களுடன் டாடா களமிறங்குகிறது.

இந்த நிலையில், 3 மேம்படுத்தப்பட்ட கார் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தலைவர் கார்ல் ஸ்லிம் கூறியிருக்கிறார். அந்த 3 மேம்படுத்தப்பட்ட கார் மாடல்களில் ஒன்று புதிய நானோ என்று தகவல்கள் கூறுகின்றன.

வடிவமைப்பில் சில மாறுதல்களுடன் புதிய நானோ காரை இந்த மாதம் விற்பனைக்கு விடுவதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சிஎன்ஜியில் இயங்கும் நானோவையும், டீசல் நானோவையும் அடுத்தடுத்து களமிறக்கவும் டாடா திட்டமிட்டுள்ளது.

இந்த மாதம் விற்பனைக்கு வருவதாக கூறப்படும் புதுப்பொலிவுடன் கூடிய நானோ காரில், மறுவடிவமைப்பு பெற்ற பின்பக்க பம்பர் மற்றும் குரோம் பூச்சுகள், புதிய வீல் கவர் ஆகியவற்றுடன் புதிய நீல நிறத்திலும் நானோ வருகிறதாம்.

எஞ்சினில் மாற்றம் இருக்காது. இதுதவிர, மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட இன்டிகோ இசிஎஸ் செடான் காரையும் விரைவில் டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த இருப்பதும் தெரியவந்துள்ளது.
tamilkurinji editor Tue, 04 Jun 2013 19:07:35 +0000 தங்கம் விலை வரலாறு காணாத சரிவு http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/தங்கம்/விலை/வரலாறு/காணாத/சரிவு/&id=30212 கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. விலை ஏறி, இறங்கி வருகிறது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 288 ஆக இருந்தது.

நேற்று பவுனுக்கு ரூ.248 அதிகரித்தது. ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 536 ஆக இருந்தது. கிராமுக்கு ரூ.31 உயர்ந்து ரூ.2,567-க்கு விற்றது.

ஆனால், இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 248 குறைந்தது. ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்து 288 ஆக உள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.31 குறைந்து ரூ.2,536-க்கு விற்கிறது.

வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.740 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரத்து 690 ஆகவும், ஒரு கிராம் ரூ.46.70 ஆகவும் உள்ளது.
tamilkurinji editor Fri, 31 May 2013 18:20:19 +0000 தங்கம் விலை திடீர் சரிவு http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/தங்கம்/விலை/திடீர்/சரிவு/&id=30181 தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2490 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.26630 ஆகவும் இருந்தது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.46.50 க்கும், பார் வெள்ளி ரூ.43480 க்கும் விற்பனை செய்யப்பட்டது. tamilkurinji editor Tue, 28 May 2013 15:34:46 +0000 தங்கம் விலை உயர்வு http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/தங்கம்/விலை/உயர்வு/&id=30103 தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய (29ம் தேதி) மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2612 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.27935 ஆகவும் இருந்தது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.49.20 க்கும், பார் வெள்ளி ரூ.45935 க்கும் விற்பனை செய்யப்பட்டது. tamilkurinji editor Mon, 29 Apr 2013 15:27:26 +0000 வங்கிகளுக்கான வட்டிவிகிதம் குறையும் http://tamilkurinji.co.in/mobile/news_details.php?/வங்கிகளுக்கான/வட்டிவிகிதம்/குறையும்/&id=30102  நாட்டின் பொதுப் பண வீக்கம் குறைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது என, தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின் பொது பணவீக்கம், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5.96 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், இது ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டு அளவான, 6.8 சதவீதத்தைவிட குறைவாகும்.

இதை கருத்தில் கொண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுச் சேர்க்கும் வகையிலும், ரிசர்வ் வங்கி வரும், மே மாதம் 3ம் தேதி அறிவிக்க உள்ள அதன் நிதி ஆய்வுக் கொள்கையில், வங்கிகளுக்கான "ரெப்போ' வட்டி விகிதங்களை குறைக்க வாய்ப்புள்ளது.

ரிசர்வ் வங்கி, கடந்த மார்ச் மாதம், "ரெப்போ' வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்து, 7.5 சதவீதமாக நிர்ணயித்தது. இதையடுத்து, "ரிவர்ஸ் ரெப்போ' வட்டி விகிதம், 6.5 சதவீதமாக குறைந்தது. அதே சமயம், வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம், 4 சதவீதம் என்ற அளவிலேயே விடப்பட்டது.

கடந்த, 2012-13 ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5 சதவீதமாக சரிவடைந்தது. சென்ற நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிலும், பொருளாதார வளர்ச்சி, 4.5 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைந்து இருந்தது.

எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கக்கூடும் என, ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

tamilkurinji editor Mon, 29 Apr 2013 15:24:30 +0000